Friday, November 30, 2012

ஆய கலைகள் 64...அவை என்ன என்ன..?




விகடனில் கவிஞர் வைரமுத்துவின் பதில்கள் பகுதியில் "ஆய கலைகள் அறுபத்தி நான்கு எவை?' என கூறியுள்ளார்.அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
1) ஆடல்
2)இசைக்கருவி மீட்டல்
3)ஒப்பனை செய்தல்
4)சிற்பம் வடித்தல்
5)பூத் தொடுத்தல்
6)சூதாடல்
7)சுரதம் அறிதல்
8)தேனும், கள்ளும் சேகரித்தல்
9)நரம்பு மருத்துவம்
10)சமைத்தல்
11)கனி உற்பத்தி செய்தல்
12)கல்லும் பொன்னும் பிளத்தல்
13)கரும்புச் சாற்றில் வெல்லம் எடுத்தல்
14)உலோகங்களில் மூலிகை கலத்தல்
15)கலவை உலோகம் பிரித்தல்
16)உலோகக் கலவை ஆராய்ந்து அறிதல்
17)உப்பு உண்டாக்குதல்
18)வாள் எறிதல்
19)மற்போர் புரிதல்
20)அம்பு தொடுத்தல்
21)படை அணி வகுத்தல்
22)முப்படைகளை முறைப்படுத்தல்
23)தெய்வங்களை மகிழ்வித்தல்
24)தேரோட்டம்
25)மட்கலம் செய்தல்
26)மரக்கலம் செய்தல்
27)பொற்கலம் செய்தல்
28)வெள்ளிக்கலம் செய்தல்
29)ஓவியம் வரைதல்
30)நிலச் சமன் செய்தல்
31)காலக் கருவி செய்தல்
32)ஆடைக்கு நிறமூட்டல்
33)எந்திரம் இயற்றல்
34)தோணி கட்டல்
35)நூல் நூற்றல்
36)ஆடை நெய்தல்
37)சாணை பிடித்தல்
38)பொன்னின் மாற்று அறிதல்
39)செயற்கை பொன் செய்தல்
40)பொன்னாபரணம் செய்தல்
41)தோல் பதனிடுதல்
42)மிருகத் தோல் உரித்தல்
43)பால் கறந்து நெய்யுருக்கல்
44)பொன் முலாமிடுதல்
45) தையல்
46)நீச்சல்
47)இல்லத் தூய்மையுறுத்தல்
48)துவைத்தல்
49)மயிர் களைதல்
50)எள்ளில் இறைச்சியில் நெய் எடுத்தல்
51)உழுதல்
52)மரம் ஏறுதல்
53)பணிவிடை செய்தல்
54)மூங்கில் முடைதல்
55)பாத்திரம் வார்த்தல்
56)நீர் கொணர்தல், நீர் தெளித்தல்
57)இருபாயுதம் செய்தல்
58)மிருக வாகனங்களுக்குத்  தவிசு அமைத்தல்
59)குழந்தை வளர்ப்பு
60)தவறினை தண்டித்தல்
61)பிற மொழி எழுத்தறிவு பெறுதல்
62)வெற்றிலை பாக்கு சித்தப்படுத்தல்
63)மேற்கூறிய கலைகளை உள்வாங்கும் விரைவு
64)வெளிப்படுத்தும் நிதானம்

சுக்கிர நீதி சொல்லும் ஆய கலைகள் அறுபத்தி நான்கும் இவைதான்.

(டிஸ்கி- வெறும் ஏட்டுப் படிப்பு மட்டுமே கலை அல்ல.நம்மை விட பெண்கள் அதிகம் அறிந்தவர்கள்)



Thursday, November 29, 2012

காவிரி நதி நீர்..(தினமணி தலையங்கம்) கண்டிப்பாக படிக்கவும்





பேச்சுவார்த்தை அல்ல, பிச்சை!
By ஆசிரியர்

சாட்சிக்காரன் காலில் விழுவதைக் காட்டிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்'. இது நீதிமன்ற நடவடிக்கை மற்றும் காலதாமதத்தால் சலிப்புற்ற மக்களின் சொலவடை. அதை நீதிமன்றமே சொல்லத் தொடங்கினால் எப்படி?

ஒரு பிரச்னை முதல்முறையாக நீதிமன்றத்தின் படியேறும்போது இத்தகைய ஆலோசனை சரியானது. நியாயமும்கூட. ஆனால், காவிரிப் பிரச்னை அப்படியல்ல. கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வழக்கு. காவிரி நடுவர் மன்றம், நதிநீர் ஆணையம், பிரதமர் முன்னிலையில் சமரசம் என்று எதுவுமே தீர்மானமான முடிவைத் தராத நிலையில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தால், நீங்களே பேசித் தீர்த்துக் கொள்ளுங்களேன் என்று சொன்னால் எப்படி? கர்நாடகத்தைத் தமிழகமும், தமிழகத்தைக் கர்நாடகமும் பல வகையிலும் விமர்சனங்களை அள்ளி வீசிய பிறகு பேசித் தீர்த்துக் கொள்வது எப்படி சாத்தியம் என்று உச்ச நீதிமன்றம் யோசிக்க வேண்டாமா?

காவிரி நீர்ப் பங்கீட்டில் கர்நாடகம் யாருக்குமே கட்டுப்படாமல் தன்னிச்சையாக இயங்கிவருவதால்தான் இன்றைய சிக்கல் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்பது இந்தியா முழுமைக்கும் தெரியும். கர்நாடக மாநிலம் தமிழகத்துக்குத் தர வேண்டிய 52.8 டிஎம்சி தண்ணீரை வழங்கவும், பருவம் (ஸீசன்) என்றால் என்ன என்பதை வரையறை செய்யவும் தாக்கல் செய்த மனுவுக்கு நீதிபதிகள் இவ்வாறு தெரிவித்திருக்கின்றனர். இதன்படியே, தமிழக முதல்வர் ஜெயலலிதா நவம்பர் 29}இல் பெங்களூர் சென்று பேசவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

பேச்சுவார்த்தையில் முடியாமல்தான் மத்திய அரசிடம் போய் நின்றோம். மத்திய அரசு நியமித்த நடுவர்மன்றத் தீர்ப்பை கர்நாடகம் ஏற்கவே இல்லை. இடைக்காலத் தீர்ப்புகளுக்குக் கட்டுப்பட்டதும் கிடையாது. காவிரி நதிநீர் ஆணையத்துக்கும் பிரதமரின் உத்தரவுக்கும்கூட மறுப்பு தெரிவித்தார்கள். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே நிறைவேற்றத் தவறியதால், நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு ஆளான மாநிலம் கர்நாடகம். இந்நிலையில்தான், அதாவது பேசித் தீரவில்லை என்ற நிலையில்தான், உச்ச நீதிமன்றத்தைத் தமிழக அரசு அணுகுகிறது. ஆனால், உச்ச நீதிமன்றம் சொல்கிறது, ""இரு மாநில முதல்வர்களும் பேசித் தீர்வுகாண வேண்டும்'' என்று.

இதைச் சொன்னதற்குப் பதிலாக, "நாங்கள் சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறார்கள். எங்கள் தீர்ப்புக்கு மரியாதையே கிடையாது. ஆகவே நீங்களே முடிந்தால் பேசிப் பாருங்கள்' என்று நீதிபதிகள் மிக வெளிப்படையாகச் சொல்லியிருக்கலாம். அத்தகைய மெய்யான வார்த்தைகள், இந்திய அரசையும், மற்ற மாநிலங்களையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும். ஆனால் நீதிபதிகள் அதைச் சொல்லாமல், இரு மாநில முதல்வர்களும் பேசித் தீர்வு காண்பது முடியாதது ஒன்றுமில்லை என்று கூறியிருக்கிறார்கள்.

தினமும் வினாடிக்கு 9,000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்ற காவிரி நதிநீர் ஆணைய உத்தரவுக்கே 3 நாள் மாநில எல்லையில் பஸ்கள் ஓடவில்லை. நடிக நடிகையர்களும் பங்குகொண்ட எதிர்ப்புப் பேரணி நடைபெற்றது. இந்த உத்தரவை நிறைவேற்றாவிட்டால், அணையின் பொறுப்பை மத்திய அரசு எடுத்துக்கொள்ளும் என்ற அச்சத்தின் காரணமாகவே கர்நாடகம் பணிந்தது. இந்நிலையில் கர்நாடக முதல்வர், தமிழகம் கேட்கும் நியாயமான அளவு தண்ணீரை வழங்க முன்வருவாரா?

இது ஒருபுறம் இருக்க, காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் பிரதமரை அவமானப்படுத்தும் வகையில் கர்நாடக முதல்வர் வெளிநடப்பு செய்தபோது இந்தியாவில் எந்தச் சலனமும் இல்லை. ஆனால், பெங்களூரில் தமிழக முதல்வருக்கு - அது யாராக இருந்தாலும் - அவமானம் நேர்ந்தது என்றால், தமிழ்நாடு கொந்தளித்து விடாதா? அதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் ஏற்படக்கூடிய எதிர்போராட்டங்கள், அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், இதைப் பற்றியெல்லாம் உச்ச நீதிமன்றம் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்த்திருந்தால், இத்தகைய ஆலோசனையைச் சொல்லியிருக்காது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும்கூட, தமிழக அரசின் கோரிக்கைகளை ஏற்கக் கேரளம் மறுக்கிறது. இது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் உள்ளன. இதிலும்கூட, இரு மாநில முதல்வர்களும் பேசித் தீர்வு காண வேண்டும் என்றால், தமிழக முதல்வர் திருவனந்தபுரம் சென்று அவமானப்பட வேண்டுமா?

இலங்கைச் சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒரு வழக்குத் தொடுத்தால், அந்த வழக்கிலும்கூட, "தமிழக முதல்வர் இலங்கை அதிபர் ராஜபட்சவுடன் பேசித் தீர்வுகாண வேண்டும்' என்று நீதிமன்றம் சொல்லுமா?

இதுவரை பல முறைக்கு மேல் தமிழக முதல்வர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய மூவரும் கடந்த 40 ஆண்டுகளாகப் பல்வேறு கர்நாடக முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவுக்கு வராதது காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னை. மத்திய அரசு நடுவர்மன்றம் அமைத்தும் பயனளிக்காத பிரச்னை இது. அதனால்தானே உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு முறையிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் தனது பொறுப்பைத் தட்டிக் கழித்தால் எப்படி?

கர்நாடக மாநிலம் காவிரியின் மேல்பகுதியில் இருக்கிறது. அவர்கள் அணையைத் திறந்தால்தான் தமிழகத்துக்குக் காவிரி நீர். இந்தப் புவியியல் காரணங்களால், கர்நாடகம் "கொடுப்பவன்' நிலையில் இருக்கிறது. தமிழகம் "கொள்பவன்' நிலையில் இருக்கிறது. கர்நாடகம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று தமிழகத்தை ஒருநாளும் அழைக்கப்போவதில்லை. அவர்களுக்கு அது தேவையில்லாத வேலை. ஆனால், தமிழகம்தான் பேச்சுவார்த்தைக்கு அவர்களிடம் செல்ல வேண்டும், வாசலில் நிற்க வேண்டும், அவர்கள் சொல்லும் மறுதேதிக்கெல்லாம் போயாக வேண்டும், அவர்கள் கொடுப்பதைப் பெற்றாக வேண்டும். இதற்குப் பெயர் பேச்சுவார்த்தையாக இருக்க முடியாது. பிச்சை கேட்பதாகத்தான் இருக்க முடியும்!

தமிழுக்கு அமுதென்று பெயர் - 4




தமிழில் பல அற்புதங்கள் உண்டு..

முன்னெறி தெய்வங்களான அம்மாவும்..அப்பாவும்..தமிழின் முதல் உயிரெழுத்தான 'அ'வில்தான் ஆரம்பிக்கின்றன .
அடுத்து சொல்லப்படும் தெய்வமான ஆசிரியர் தமிழின் இரண்டாம் உயிரெழுத்தான "ஆ" வில் ஆரம்பம்
அடுத்து சொல்லப்படும் தெய்வம்..தமிழின் மூன்றாம் உயிழுத்தான 'இ'யில் ஆரம்பம்..இறைவன்.

அத்துடன் இல்லாது அ வில் ஆரம்பிக்கும் சொற்கள் கிட்டே கொண்டு வருவதுடன் சம்பந்தப்பட்டவை. அண்மை,அருகாமை,அப்புதல்,அள்ளுதல்,அணைத்தல்

'இ' கீழே கொண்டுவருவதற்கான சொல் - இறக்குதல்,இறங்குதல்,இழிதல்

'உ' எழுத்து தூரத் தள்ளுவதற்கும்..மறைப்பதற்கும் உரித்தானது ..உதைத்தல்,உமிழ்தல்,உண்ணுதல்,உதறுதல்

'எ' எழுச்சி வார்த்தைகள்..எடுத்தல்,எட்டுதல்,எய்தல்,எழுதல்

இனி தமிழ் சிலேடை-

இம்மை..மறுமை பற்றி ஒரு நிகழ்ச்சியில் கி.வா.ஜ., பேசினார்.அப்போது மைக் தகராறு செய்யவே..உடனே..வேறொரு மைக் பொருத்தப்பட்டது.அதுவும் கோளாறு செய்யவே..உடன் அவர் இம்மைக்கும் வேலை செய்யவில்லை..மறு மைக்கும் வேலை செய்யவில்லை.எனவே வாய் மைக்கே முதலிடம் என்று கூறி மைக் இல்லாமல் பேசி முடித்தாராம்.

துணை நடிகைப் பற்றி யுகபாரதியின் கவிதை ஒன்று

இவள் வீட்டுப் பாத்திரத்தில்
சிலநாளே சுடுசோறு
என்றாலும் நடிக்கிறாள்
திரைப்படத்தில் பலவாறு

2) வயிற்றுக்கு மிகநெருங்கி
வருகின்ற காமெராவில்
தெரியாது இவள் பசியும்
தெய்வத்தின் வஞ்சகமும்


Wednesday, November 28, 2012

உறவுகளும்..நாமும்...




உறவுகள்....

இதில்தான் எத்தனை வகை..

தாய்,தந்தை,தாத்தா,பாட்டி,மனைவி,மகன்,மகள் போன்ற குடும்ப உறவுகள்..

வெளியே..நண்பர்கள் என சமூக உறவுகள்.

நம் வாழ்க்கைத்தரத்தை தீர்மானிப்பதில், உறவுகள் பெரும் பங்கு வகிக்கின்றன.உண்மையில்..ஒருவருக்கு உதவிகள் தேவைப்படும்போதுதான்..உறவுகளின் ஞாபகம் வருகிறது.ஆனால்..எதிப்பார்ப்புகள் நிறைவேறாத போது...உறவில் விரிசல் ஏற்படுகிறது.

நம் உறவுகள்..நம்மை..விட்டு விலக, நம் கோபமும் காரணமாகிவிடுகிறது.நம் கருத்தை மற்றவர்கள் மீது திணிக்கும் போதுதான் கோபம் ஏற்படுகிறது.உறவுகள் நமக்குப் பிடிக்காத காரியம் செய்யும்போது கோபம் வருகிறது.நமக்கு கோபம் வருவது போல..உறவினருக்கும் கோபம் வரும் என்பதை நாம் நினைவில் கொள்வதில்லை.

சற்று யோசனை செய்தால்..இவை புரியும்..

நம் வீட்டில் வேலை செய்யும்..நபர்கள் கூட..தன் மீது ஒருவர் அதிகாரம் செலுத்துவதை விரும்புவதில்லை.அதனால்...அவர்களையும்..நமக்கு சமமாக...நம்மில் ஒருவராக..எண்ணி பழகினால்..எதிர்ப்பார்த்ததற்கு மேல் பலன்கள் கிட்டும்

உறவுகள்..தொடர..யாரையும் நிர்வகிக்க முயற்சி செய்யாதீர்கள்.

உறவுக்கு ஆதாரம் அன்புதான்..ஆகவே அனைவரிடமும் அன்பு செலுத்துவோம்.வெறுப்பை..வெறுத்து ஒதுக்குவோம்.

உறவுப்பூக்கள் மலரும்..

கடைசியாக ஒரு ஜோக்..

நண்பன்-ஏன்..காலையிலிருந்து வருத்தமாய் இருக்கீங்க?
இவர்- என் மனையுடன் சண்டை..ஒரு மாசம் பேசமாட்டேன்னு சொல்லிட்டா
நண்பன்-இது சந்தோஷ விசயம் தானே...ஏன் வருந்த வேண்டும்
இவர்-அந்த ஒரு மாசம்..இன்னியோட முடியுதே!


"மின்சாரத் தாக்குதல்"



தமிழக அரசு மக்கள் மீது ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளது.'இப்படிப் போடப்போகிறோம்,போட வேண்டியிருக்கலாம்'என்றெல்லாம் முன் எச்சரிக்கை கொடுத்துவிட்டதனால் மட்டும், தாக்குதலின் அதிர்ச்சி குறைந்துவிட முடியாது.
அக்டோபர் முதல் தேதியிலிருந்து தமிழ்நாடெங்கும் 15 சதவிகித மின்சார வெட்டு அமுலுக்கு வந்துள்ளது.இதை குறித்துத் தொழில் வர்த்தகத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களும் பொது மக்களும் அதிர்ச்சியும் பெரும் கவலையும் அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு, முதலில் 25 சதவிகிதம்,பிறகு 50சதவிகிதம்,அதன் பின்னர் ஃபெப்ரவரியில் 75 சதவிகிதம் என்று மின்வெட்டை அமுலுக்கு கொண்டுவந்த போது,'தென்மேற்குப் பருவ மழை ஏமாற்றிவிட்டது; நீர்த்தேக்கங்களில் தண்ணீர் இல்லாததால் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுவிட்டது.'என்று இயற்கையின் மேல் பாரத்தைப் போட்டார்கள்.மக்களோ,அந்த எட்டு மாதங்கள் சொல்லொணா அவதிக்கு இலக்காகி,இருளில் கிடந்து திண்டாடினார்கள்.தமிழகத்தில் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது.பல தொழிற்சாலைகள் குறைந்த நேரம் இயங்கி, வேலையில்லாத் திண்டாட்டத்தை ஏற்படுத்தின. பம்பு செட்டை நம்பிய பயிர்கள் வாடி உலர்ந்து பதராகிவிட்டன.
இத்தனைக்கும் தென்மேற்குப் பருவ மழை இவ்வாண்டு ஏமாற்றவில்லை.நீர்த்தேக்கங்கள் பல நிறைந்துள்ளன.மேட்டுர் அணையில் இதுவரை ஏற்பட்டிராத அளவு நீர் தேங்கியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.இந்த நிலையில் வெட்டு எதற்கு?
ஒன்று மட்டும் நிச்சயம்.இப்படி அடிக்கடி வெட்டு ஏற்படுமென்ற அச்சம் தோன்றினால், புதுத் தொழில்களைத் துவக்கவோ, ஏற்கனவே உள்ள தொழில்களைப் பெருக்கவோ அத்துறைகளில் ஈடுபடுபவர்கள் பயப்படுவார்கள்.தடையில்லாமல் வசதியாக மின்சாரம் கிடைக்கும் மாநிலங்களைத் தேடிப் போவார்கள்.தமிழகம் பின்தங்க வேண்டிய நிலை ஏற்படும்.
எப்படியாகிலும் தொழில் வளர்ச்சிக்கும் இதர துறைகளுக்கும் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்தே தீருவது என்ற உறுதியோடு, தற்போதைய மின்சார நெருக்கடியை ஓர்'அவசர நிலையா'கக் கருதி, தமிழக அரசு செயலாற்ற வேண்டும்.,

(இது ஆனந்த விகடன் தலையங்கம்..வெளியான தேதி..7-10-73)..இன்றைக்கும் பொருந்தியுள்ளது அல்லவா?

நன்றி- ஆனந்தவிகடன்

Tuesday, November 27, 2012

வாய் விட்டு சிரிங்க..


1.தலைவர்..பொருளாதாரம் பலமாக இருக்கிறது...பலஹீனமாக இருக்கிறது என இரண்டு தலைப்பிலும் பேச்சை தயாரிக்கச் சொல்லி இருக்கார்..ஆளும் கூட்டணியில் சேர்ந்தாலும் சரி..எதிர்க் கட்சி கூட்டணியில் சேர்ந்தாலும் சரி..அதற்கேற்ப பேசிடலாம்னு.



2.என் மனைவியை கண் கலங்காம வைச்ச்க்கணும்னு பார்த்தேன்..முடியலை
ஏன்?என்ன ஆச்சு
அவ மெகா சீரியல் நடிகையா இருக்கறதாலே..வீட்ல எது பேசினாலும்..கண்ணீரோடத்தான் பேசறா



3.கடைக்காரர்-இலவச இணைப்பை 'கேட்'டு வாங்குங்கன்னு சொல்றது..இந்த சின்னப் புத்தகத்தாங்க..வீட்டு 'கேட்"டு இல்லைன்னு சொன்னா புரிஞ்சுக்க மாட்டேன்னு சொல்றீங்களே



4.உங்கம்மாவோட நான் சண்டை போடறதால எனக்கு சாபம் கொடுத்துட்டாங்க
என்னன்னு
காலத்துக்கும் சுமங்கலியா இருன்னு



5.டி.வி.ல நிகழ்ச்சி கொடுக்க ஏன் உங்க நாயை இழுத்துக் கிட்டு வர்றீங்க
இது டாக் ஷோன்னு சொன்னாங்களே



6.நீதிபதி-(குற்றவாளியிடம்)உனக்குத் தேவையானால் அரசாங்கமே வக்கீல் ஏற்பாடு செய்யும்
குற்றவாளி-வேண்டாங்க...எனக்கே நல்லா பொய் பேசத் தெரியும்.

Monday, November 26, 2012

இருந்தால் நன்றாயிருக்கும்

தன் பழைய மாணவன் வந்து சொன்னதைக்கேட்டு ஆச்சர்யப்பட்டுப் போனார் பேராசிரியர் அனுமந்த ராவ்.
கிருஷ்ணகுமார்..அவரிடம் படித்த மாணவன்.புத்திசாலி.அதனால்தான் பல ஆண்டுகள் ஆகியும் அவன் அவர்
ஞாபகத்தில் இருந்தான்.அவன் முதுநிலை படிப்பு படித்து முடிந்ததுமே..ஏதேனும் ஒரு தலைப்பில் ஆராய்ச்சி
செய்து..டாக்டர் பட்டம் வாங்கச் சொன்னார்.ஆனால்..அன்று அவன் மறுத்து விட்டான்.ஆனால் ஏழெட்டு
ஆண்டுகள் கழிந்து அவனே வலிய வந்து கேட்கிறான் என்றால்...அதுக்கூட ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை.
அவன் ஆராய்ச்சி செய்ய தேர்ந்தெடுத்துள்ள தலைப்பு..'கடவுள் இருக்கிறாரா..இல்லையா'
'குமார்..இப்படிப்பட்ட தலைப்பை பல்கலைக்கழகம் அங்கீரித்து இருக்க வேண்டும்.நான் கேட்டுப் பார்க்கின்றேன்.
பிறகு நீ உன் ஆராய்ச்சியை ஆரம்பிக்கலாம்'
ஒரு நிமிடம்..யோசித்தவன்'சார்,இந்த தலைப்பில்..ஆராய்ச்சி செய்ய அனுமதி கிடைக்க வில்லை என்றாலும்..நான்
ஆராய்ச்சி செய்யத்தான் போறேன்..என்றான் பிடிவாதமாக.
'சரி..உன் ஆசையைக் கெடுப்பானேன்..நீ முயற்சி செய்..ஆனால் பல நூற்றாண்டுகளாக மனிதர்களிடம் இருந்து வரும்
நம்பிக்கை கடவுள் பக்தி.எந்த ஒரு காரியத்திற்கும்..அது முதல் நம்பிக்கை ஆகும்'
'இல்லை சார்..நீங்கள் சொல்லும் அந்த நூற்றாண்டுகளில்..அதைப்பற்றி அபிப்ராயபேதங்களும்..இருந்திருக்கின்றன'
'குமார்..எனக்குத் தெரிந்தவரை..சிவன் பெரியதா..சக்தி பெரியதா..சைவம் பெரியதா..வைஷ்ணவம் பெரியதா..இப்படித்தான்
அபிப்பிராய பேதங்கள் இருந்திருக்கின்றன.நீ சொல்லும்..அந்த அடிப்படையிலேயே மறுப்பு சென்ற நூற்றாண்டில்தான்
ஏற்பட்டிருக்கிறது என நினைக்கின்றேன்'
'சார்..இது சம்பந்தமாக அனேக புத்தகங்கள் சேகரித்து வைத்திருக்கிறேன்.கடவுளை மறுத்த பெரியாரின்
சிந்தனைகளையும் படித்து வருகின்றேன்..நாயன்மார்கள்..ஆழ்வார்கள் சொன்னதை படிக்கிறேன்..'
பேச்சை..திசைதிருப்ப எண்ணிய பேராசிரியர்'சரி..இப்போ உன்னைப் பற்றி சொல்.உனக்கு திருமணமாகிவிட்டதா,
குழந்தைகள் உண்டா?'
'சார்..எனக்கு திருமணமாகி ஆறு வருடங்கள் ஓடி விட்டன.இது நாள் வரை குழந்தைகள் இல்லை..இப்போதுதான் என் மனைவி
7 மாத கர்ப்பம்'என்றான்.
'பாராட்டுகள்' என்றார் பேராசிரியர்.
'ஏன் சார்..நீங்கள் சொல்லும் கடவுள் இருந்திருந்தால்..அந்த ராமர் கடவுள்தானே..அவர் ஏன் சிவ பக்தனான ராவணனை
அழிக்க வேண்டும்.சிவ பக்தனான ராவணனுக்கு சிவன் ஏன் முதலிலேயே அறிவுறித்தி பிறன் மனை விழையாமையை
உணர்த்தி..அவனை சீதை மேல் ஆசை வராமல் தடுத்திருக்கலாமே'
'அது இதிகாசம்..மேலும்..ராமர்..சீதை இவர்கள் பூமியில் அவதரித்ததுமே மனிதர்கள்.இறைவன் இல்லை'
'சரி அது போகட்டும்.தன் மாமன் கம்சனைக்கொல்ல ..கிருஷ்ணன் அவதரித்தான்..பின் அவனே பாண்டவர்களுடன்
சேர்ந்து கௌரவர்களை அழித்தான்..திரௌபதியை துகில் உரித்தபோது உடன் காப்பாற்றவரவில்லை.நீ என்னை முற்றிலும்
நம்பாமல் கைகளால் மறைத்திக்கொண்டிருந்தாய்.எப்போது என்னை நம்பி..கைகளை உயர்த்தினாயோ அப்போது உதவிக்கு வந்தேன்
என்பது..நீங்கள் சொல்லும் அந்த கடவுள் ஒரு sadist என்று ஆகவில்லையா?'
'கடவுளை முழுவதுமாக நம்ப வேண்டும் என்பதற்காக அப்படி கூறப்பட்டது'
ஏன் சார்..தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்..என்பதற்காக திரௌபதி அப்படி
செய்திருக்கலாம்..இல்லையா?'
பேராசிரியர் இதற்கு பதில் கூற வாயைத்திறந்த போது ..குமாரின் அலைபேசி ஒலித்தது.
அதை இயக்கினான் குமார்'என்ன..அப்படியா?..இப்போதே வருகிறேன்' என்றவன்..'சார் என் மனைவிக்கு திடீரென உடல்னலம்
சரியில்லை..அவள் வயிற்றில் கரு அசையவே இல்லையாம்..உடன் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.பிறகு சந்திக்கிறேன்'என
விரைந்தான்.
பேராசிரியர் தலை ஆட்டினார்.
**** **** **** ****
இரண்டு..மூன்று மாதங்கள் ஓடி விட்டன
திரும்ப ..ஒரு நாள் கிருஷ்ணகுமார் அவரைப் பார்க்க வந்தான்.தன் ஆராய்ச்சித் தலைப்புக்கு அங்கீகாரம் கிடைத்ததா என
அறிந்துக்கொள்ள.
'அது இருக்கட்டும்..உன் மனைவி எப்படி இருக்கிறாள்?குழந்தை பிறந்து விட்டதா?'
'அந்த ஆச்சர்யத்தை ஏன் கேட்கிறீர்கள்?உங்களிடம் வந்த அன்று அவளை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றேன்.
வயிற்றில் இருந்த சிசுவிற்கு மூச்சே இல்லை.மருத்துவர்கள் இறந்துவிட்டது என்றனர்.ஆனாலும் ஒரிரு நாட்கள் பார்க்கலாம் என்றனர்
மருத்துவர்கள்.அழுதபடியே வீட்டிற்கு வந்தவள்..இளையராஜாவின் திருவாசகத்தை வி.சி.டி.யில் ஓட விட்டாள்.அது ஒலிக்க..ஒலிக்க..
சிசு அசையத்தொடங்கியது.மருத்துவருக்கு விஷயத்தைச் சொல்ல..ஆச்சர்யப்பட்ட அவர்..தினமும் என் மனைவியை அதைக்
கேட்கச் சொன்னார்.போன வாரம் சுகப்பிரசவம்.பையன்'என்றான் உற்சாகத்துடன்.
ஆச்சரியம் அடைந்தார்..பேராசிரியர்..'ஏம்ப்பா இது எதனால் என்று நினைக்கிறாய்?''இது கடவுளின் அருள் என்று உனக்குத்
தோன்றவில்லையா?கடவுள் காப்பாத்திட்டாரு'என்றார்.
'அப்போ அதற்கு முன்னால்..அந்த சிசுவிற்கு..அந்த நிலை ஏற்பட்டது யாராலே?'பதில் கேள்விக் கேட்டான்.
'குமார்..பிரபஞ்சம் தான் கடவுள்.நேற்று அறியாததை இன்று அறியலாம்.இன்று அறியாததை நாளை அறியலாம்.
ஆனால்..எப்போதுமே அறிய முடியாதது ஒன்று இருந்துக் கொண்டே இருக்கும்..அது பிரபஞ்ச ரகசியம்.புரிந்துக் கொள்'
என்றார்.சற்றே குழம்பியவன்..'சரி நீங்கள் சொல்வதை ஒப்புக்கொண்டாலும்..இறைவன் என்று ஒருவன் தானே இருக்க
முடியும்..நீங்கள் பல கடவுள்களை சொல்கிறீர்களே?'
'குமார்..நீ..ஒருவன்..ஆனால் உன் பேற்றோருக்கு நீ மகன்..மனைவிக்கு கணவன்..தம்பிக்கு அண்ணன்..அண்ணனுக்கு
தம்பி..இப்படி இருக்கும்போது..அந்த கடவுள் பலருக்கு பல பெயரில் இருப்பது என்ன தப்பு'
சற்று நேரம் என்ன செய்வது என்று தெரியாமல்..யோசித்தான் அவன்.
அதை பயன்படுத்திக் கொண்ட பேராசிரியர்'இப்ப நீ கடவுள் இருக்கிறதை நம்புகிறாய் இல்லையா'என்றார்.
'இருந்தால்..நன்றாயிருக்கும்'என்றான்.

Sunday, November 25, 2012

சிவாஜி ஒரு சகாப்தம் - 2




1954ல் இவர் நடித்து வெளிவந்த படங்கள்

மனோகரா, இல்லறஜோதி, அந்தநாள், கல்யாணம் பண்னியும் பிரம்மச்சாரி, துளிவிஷம், கூண்டுக்கிளி, தூக்கு தூக்கி, எதிர்பாராதது. இவைத் தவிர..மனோகரா..ஹிந்தி மற்றும் தெலுங்கு.

மனோகரா...மீண்டும் கலைஞர்..கதை வசனம்.மாபெரும் வெற்றி பெற்ற..படம்..பராசக்தி..கோர்ட் காட்சி வசனம் போல்...இப்படத்திலும்...கிளைமாக்ஸில்..கண்ணாம்பா,சிவாஜி வசனங்கள்..தனியாக இசைத்தட்டாகவே வந்து..அனைவராலும் முணுமுணுக்கப்பட்டவை. இப்படத்தில்..கிரிஜா என்னும் நடிகை நடிகர் திலகத்தின் ஜோடி.டி.ஆர்.ராஜகுமாரி,எஸ்.ஏ.நடராஜன்..வில்லி..வில்லன்.

இல்லறஜோதி..கண்ணதாசன்..கதை..வசனம்..படம் எதிர்ப்பார்த்த அளவு பேசப்படவில்லை.

எஸ்.பாலசந்தர் கதை வசனத்தில் வந்த படம்..அந்தநாள்.தயாரிப்பாளர் ஏ.வி.ஏம்.,சிவாஜிக்கு..வில்லத்தனமான கதானாயகன் பாத்திரம்.தேசதுரோகம் செய்யும் அவரை..அவர் மனையாக வரும் பண்டரிபாயே கொலை செய்துவிடுவார்.(பின்னாளில் வந்த கே.பாலசந்தரின்..அச்சமில்லை..அச்சமில்லை.ஞாபகம் வருகிறதா?)அந்தநாளில்..அந்தநாள் தான் பாடல்களே இல்லாமல் வந்த முதல் தமிழ் படம் எனலாம்.

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி...நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து..பி.ஆர்.பந்துலு எடுத்தபடம்.பத்மினி காதானாயகி.படம் வெளிவந்த போது..எதிர்ப்பார்த்த வெற்றி அடையவில்லை என்றாலும்..இரண்டாவது..மூன்றாவது ஓட்டங்களில்..வசூலை குவித்தது எனலாம்.

துளிவிஷம்...சிவாஜி வில்லன் பாத்திரம்..பாரதிதாசன் கதை என்பதைத் தவிர..சொல்ல ஒன்றுமில்லை.

கூண்டுக்கிளி....தமிழ்த் திரையில்..புரட்சி நடிகரும்..நடிகர் திலகமும் நடித்து வந்த ஒரே படம்.டி.ஆர்.ராமண்ணா தயாரிப்பு..இயக்கம்.பி.எஸ்.சரோஜா நாயகி.சிவாஜிக்கு வில்லன் பாத்திரம்..படம் ஏனோ படு தோல்வி.


எதிர்பாராதது..ஸ்ரீதரின் கதை வசனம்.நாயகனின் நாயகி (பத்மினி)யே..எதிர்பாராமல்..நாயகனுக்கு அம்மா வாகிறார்.(மூன்று முடிச்சு?).படம் வெற்றி. சிற்பி செதுக்காத பொற்சிலையே..என்ற ஏ.எம்.ராஜாவின் பாடல் இன்றும் கேட்க இனிமையானது.

தூக்கு தூக்கி...என்ன சொல்ல முடியும்..வெற்றி..வெற்றி...வெற்றி..தான்.இன்றும் இப்படத்திற்கு ரசிகர்கள் உண்டு.பத்மினி.லலிதா,ராகினி,பாலையா..இப்படி நட்சத்திரக் கூட்டம்.இப்படப் பாடல்களைப் பாட..திருச்சி லோகனாதனைக் கேட்டார்களாம்.அச்சமயத்தில் பீக்கில் இருந்ததால்..அவர் அதிகத் தொகைக் கேட்க தயாரிப்பாளர்கள்..அவ்வளவு முடியாது என உரைக்க ..அப்போ..மதுரைல இருந்து ஒரு
பையன் வந்திக்கான்..அவனை பாடச்சொல்லுங்க..என்றாராம்..லோகநாதன். அந்த பாடகர்தான்..டி.எம்.எஸ்.,

பெண்களை நம்பாதே...ஏறாத மலைமேலே..அபாய அறிவிப்பு, சுந்தரி சௌந்தரி..குரங்கிலிருந்து போன்ற அற்புதமான பாடல்கள் நிறைந்த படம் இது.

இனி 1955ல் வந்த படங்கள்...அடுத்த பதிவில்...


Thursday, November 22, 2012

நான் படித்த சில அருமையான வரிகள்...


1.தப்பு செய்யற யாருக்குமே பலம் கிடையாது..எப்பவும் அப்படிப்பட்டவர்களை முறியடிக்க சாதுர்யம்தான் முக்கியம்.

2.பெண்களுக்கு சம அந்தஸ்து இருக்கா..அவளுக்குன்னு ஒரு மனசு இருக்குன்னு கூட சிலர் நினைக்கறதில்ல,(சிலர் என்பதை மனதில் கொள்ளவும்)

3.பேனாவில்..மையும்..திமிரும் இருந்தா..எதை வேண்டுமானாலும் எழுதிடறதா?

4.பணம்..பெண்..இரண்டுமே போதையானது..அது நல்ல வழியில் வந்தா நிலைக்கும்...கெட்ட வழியில் வந்தால் விட்டு ஓடிடும்..

5.you can erase some one from your mind..getting them out of your heart is another story.

6.winners never quit...quitters never win

7.வண்டிக்கு வருத்தம் ஏது...அதை இழுக்கற மாட்டுக்குத்தான் வலி தெரியும்.

8.படிப்பறிவு என்பது வேறு..கல்வி அறிவு என்பது வேறு..படிப்பறிவு என்றால் ..அடுத்தவரின் அறிவை உள்வாங்குகிறோம்..கல்வி அறிவு என்றால் உள்ளே இருக்கும் ஆற்றல் வெளியே வருவது.

9.தந்தை...ஒரு நண்பனைப்போல உன்னைக்கவனிக்கிறார்..வேலைக்காரனைப்போல உனக்கு பணிந்து போகிறார்..குருவைப்போல வழி காட்டுகிறார்..

10.அழுக்கிலே நெருப்பு பத்தி எரிஞ்சாலும்..நெருப்பில அழுக்கு கொஞ்சம் கூட ஒட்டறதில்ல...

11.உலகில் இன்று எது வேண்டுமானாலும் விலைக்கு கிடைக்கும்...விலைக்கு கிடைக்காத ஒன்றே ஒன்று..தாயின் அன்பு மட்டுமே..

இவற்றை எல்லாம்..எழுதியவர்கள் யார் என தெரியவில்லை...எழுதியவர்களுக்கு நன்றி.


Wednesday, November 21, 2012

வரலாறு படைக்கப் போகும் விஸ்வரூபம்..




சமீபத்தில் கமல்ஹாசன்..விஸ்வரூபம் படம் வெளியாவதில் தாமதம் ஏன்? என்பதற்கு...

இப்படம் 3000 பிரிண்டுகள் போடப்படுகின்றன.அதனால்தான் படம் வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகிறது என்றார்.

3000 பிரிண்டுகள் எனில் கண்டிப்பாக 3000 திரையரங்குகள்.ஒரு அரங்கில் குறைந்த பட்சம் நாளைக்கு நான்கு காட்சிகளாவது திரையிடப்படுமெனில்..ஒருநாளைக்கு 12000 காட்சிகள்.ஒரு காட்சிக்கு நிகர வருமானம் 20000 என்று வைத்துக் கொண்டாலும்..ஒரு நாளைக்கான வசூல் 24 கோடி.படம் ஐந்து நாட்கள் ஓடினாலும் வசூல் நூறு கோடிகளைத் தாண்டும்.

ஆகவே படம் வெற்றியடைய வாழ்த்தினாலும்...வசூலிலும் அது சாதனைப் புரியும் என எதிர்பார்க்கலாம்.


வாய் விட்டு சிரிங்க...!!




1.நேத்து கண்காட்சியில என் மனைவி காணாம போயிட்டா..
நீ கண்காட்சி போறதை முன்னாலேயே சொல்லக்கூடாது,..நானும் என் மனைவியை அழைச்சுட்டு வந்திருப்பேன்.

2.என் மனைவிக்கும்...எனக்கும் பெரிய சண்டை
ஏன்
ஷாஜகான் மும்தாஜ் ஞாபகமா தாஜ்மகால் கட்டினார்னு என் மனைவி கிட்ட சொன்னேன்..நான் செத்தா நீ என்ன கட்டுவேன்னு கேட்டா..உன் தங்கச்சியை கட்டுவேன்னு சொன்னேன் அதுதான்.

3. நம்ம தலைவர் ..ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியோட கூட்டு வைச்சிருக்கறதால...நம்ம கட்சிக்கு பச்சோந்தி சின்னம் கேட்கிறாராம்.

4. சுடச்சுட சாம்பாரைக் கொட்டிட்டேன்னு..காதில பஞ்சை ஏன் அடைச்சிக்கிற
நான் சாம்பாரை கொட்டினது உங்க அம்மா மேல..

5.நடுராத்திரி பெண் பார்க்கப்போறியா...ஏன்?
பொண்ணு ஸாஃப்ட்வேர் இஞ்சினீயர்...நைட்ஷிஃப்ட் அதுதான்..

6.உன்னை நம்பி வந்தவங்களை ஏமாற்ற உனக்கு எப்படி மனசு வருது..
நம்பி வரவங்களைத்தான் ஏமாற்ற முடியும்...நம்பாதவங்களை எப்படி ஏமாற்றமுடியும்?

7.என்னோட லட்சியமே ஒரு கோவில் கட்டறதுதான்
அவ்வளவு பக்தியா?
அதெல்லாமில்லை...கோவில் கட்டினா...மெகா சீரியலுக்கு வாடகைக்கு விடலாம்..அதுதானே இன்னிக்கு முக்கிய ஷூட்டிங் ஸ்பாட்

8..நம்ம ஊர்ல காலரா வராம தடுக்கணும்னா ஈக்களை ஒழிக்கணும்.அதுக்கு கம்ப்யூட்டர்களுக்கு தடை விதிக்கணும்
என்ன சொல்றீங்க
இப்ப எல்லாம்..ஈ மெயில்கள் நிறையவருதாமே..அதை ஒழிக்கணுமே

9.(வேகமாக ஓடும் காரை நிறுத்திய போக்குவரத்து காவலர்) சார்...நீங்க மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில போறீங்க
ஏன்..அபாண்டமா பொய் சொல்றீங்க?..நான் காரையே 10 நிமிஷம் முன்னாலதான் எடுத்தேன்.

10.உங்க வீட்டு பெண்கள் எல்லாம்...cat walk பழகறாங்களா? ஏதாவது ஃபேஷன் ஷோவில கலந்துக்கிறாங்களா?
இல்ல...வீட்ல இருக்கிற எலிகளை பிடிக்கத்தான்.

11.பேச்சுப் போட்டியில அரை மணி நேரம் பேசியும் உனக்கு பரிசு கிடைக்கலையா? எதைப்பற்றிப் பேசினே?
சுருங்கச் சொல்லி விளக்க வைப்பது எப்படின்னு

12.வக்கீல் சார்...என் கேஸ் ஜெயிக்குமா?
உண்மையை சொல்லணும்னா..ஜெயிக்கிறது கஷ்டம் தான்
உண்மையைச் சொல்றதாயிருந்தா இருந்தா...உங்களை வக்கீலா வைச்சிருக்க மாட்டேனே


Tuesday, November 20, 2012

தமிழுக்கு அமுதென்று பெயர் - 3




காளமேகம் பிற்காலப்புலவர்.நகைச்சுவை மன்னர்.

ஒரு நாள் வெயில் நேரம்.புலவருக்கோ தாகம்.அப்போது மோர் விற்று வருகிறாள் ஒரு பெண்.அவளிடம் மோர் வாங்கிகிறார்.அவளோ..காசு வேண்டாம்..என் மீது ஒரு கவி பாடுங்கள் என்கிறாள்.

உடன் கவி'அம்மையே..உன் மகத்துவத்தைக் காட்டிலும்..உன் மோரின் மகத்துவம் மிகப்பெரிது.அதைப்பாடுகிறேன்..என்கிறார்.

மோரே..நீ இம்மண்ணுலகப் பிறவியா..இல்லை..இல்லை..நீ தேவலோகப் பிறவி.திருமால் 10 அவதாரம் எடுத்தார்..நீ 3 அவதாரம் எடுத்தாய்.திருமாலுக்கு உவமை கூறும் வகையில் பெருமை மிக்க கருமை நிற வானில் சஞ்சரித்தாய்.உனக்கு கார் என பெயர் சூட்டி மண்ணுலகிற்கு அழைத்தோம்.திருமால் மண்ணுலகில் தேவகி வயிற்றில் அவதரித்தது போல் நீயும் மண்ணுலகில் நீராய் பொழிந்தாய்.
கண்ணன் தேவகியின் வயிற்றில் பிறந்தாலும்..யசோதை என்ற இடையர் குல பெண்ணிடம் புகுந்தான்.நீயும் நீராய் பொழிந்து பிறந்த இடத்தில் நில்லாமல்..இந்த ஆச்சியின் குடத்தில் புகுந்தாய்.உடனே இவளும் உனக்கு மூன்றாவது பெயர் 'மோர்" என சூட்டி விட்டாள்.உன் திருநாமத்தை 'மோரோ..மோர்..'என பன்முறை ஓதி பாராட்டுகிறாள்.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகிப் பிறவுமாகி நிற்கும் இறைவனை எப்படிப் பாராட்டுவேன் என்கிறார் மணிவாசகர்.காராகி,நீராகி,மோராகி நிற்கும் உன்னை எப்பேரால் வாழ்த்துவேன் என்கிறார் காளமேகம்.அம்மையே..பிடியுங்கள் உங்கள் மோர் மீது என் ஆசுகவி என்கிறார்.

கார் என்று பேர்படைத்தாய் ககனத் துறும்போது
நீர் என்ரு பேர்படைத்தாய் நீணிலத்தில் வந்ததற்பின்
வார் ஒன்று பூங்குழலார் ஆய்ச்சியர்கை வந்ததற்பின்
மோர் என்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே

Monday, November 19, 2012

சிவாஜி ஒரு சகாப்தம்..- 1




(2009ல் என் வலைப்பூவில் இத்தொடரை எழுதினேன்.இன்று பல புதியவர்கள் இணையத்தில் எழுத  ஆரம்பித்துவிட்ட நிலையில், இத் தொடரை மீள் பதிவிடுவது அவசியம் எனக் கருதியதால் ...மீள் பதிவிடுகிறேன்)

சிவாஜி கணேசன்...

தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்..

இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான்.

ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது.
படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப்படித்தான் இருப்பார்கள்..என்று நம் கண் முன் நிறுத்திய ஒப்பற்ற கலைஞன்.

ஆம்...அவர் ஒரு பல்கலைக்கழகம்..சகாப்தம்..

இனி வாரம்தோறும் ..1952 முதல் அவர் நடித்த படங்கள் பற்றி..எழுதலாம் என்ற ஆசை.இப்பதிவு..அவர் நடிப்புப் பற்றி மட்டுமே..இதில்..அரசியல் வாழ்க்கை போன்றவற்றை எழுதப்போவதில்லை.

என் நினைவிலிருந்தும்..படித்த சில புத்தகங்களை வைத்தும் இப்பதிவு எழுதப்படுவதால்..இதில்..ஏதேனும் விட்டுப்போயிருந்தாலோ..தவறிருந்தாலோ..அவற்றை சுட்டிக்காட்டினால்..பதிவில் மாற்றம் செய்துவிடுகிறேன்.

இனி..கலையுலக சக்கரவர்த்தியாய் திகழ்ந்தவர் பற்றி..

தமிழ் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த வி.சி.கணேசன் 1952ல் பராசக்தி மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார்.இவர் ஏற்ற பாத்திரத்தில் ..கே,ஆர்.ராமசாமி நடிக்க வேண்டும்..என்று சம்பந்தப் பட்டவர்கள் கூற.. அப்படத்தின் கதை வசனம் எழுதிய கலைஞர் பிடிவாதமாக..கணேசன் தான் நடிக்க வேண்டும் என்றாராம்.கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் கணேசன் பேசிய முதல் வசனம் 'சக்சஸ்..சக்சஸ்" என்பதுதான்.பின் திரையில் வெற்றியுடன் ஆட்சி புரிந்தார் என்று நாம் அறிவோம்.

அதே வருஷம் வந்த படம் பணம்..என்.எஸ்.கே.,மதுரம்.,பத்மினி., ஆகியோர் நடித்தது.

பராசக்தி 42 வாரங்கள் ஓடி மாபெரும் வெற்றியைப் பெற்றது.

1953ல் சிவாஜி நடித்து வந்த படங்கள்..பூங்கோதை,திரும்பிப்பார்,அன்பு,கண்கள்,மனிதனும் மிருகமும்,பரதேசி(தெலுங்கு),பொம்புடு கொடுகு(தெலுங்கு)

பூங்கோதை
-----------------

தெலுங்கில் பர்தெசி என்றும் தமிழில் பூங்கோதை என்றும் எடுக்கப்பட்ட படம் அஞ்சலி பிக்க்ஷர்ஸ் தயாரிப்பு.திரைக்கதை,இயக்கம் எல்.வி பிரசாத்.இசை ஆதி நாராயண ராவ்.

சிவாஜி யின் முதல் படமாக இது வெளிவந்திருக்கக் கூடும்.ஆனால்..நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் கேட்டுக் கொண்டதன் பேரில்..சற்று தள்ளி ..சில மாதங்கள் இடைவெளியில் வந்த படம் இது. 7-2-53 அன்று இப்படம் வெளியானது.

நடிகர் திலகத்துடன் ஏ.நாகேஸ்வர ராவ், அஞ்சலி தேவி, ரங்காராவ் நடித்திருந்தனர்..

சீகிரி என்னும் மலை வாசஸ்தலத்தில் பூ வியாபாரம் செய்து வருபவ்ள் லட்சுமி
சந்திரன் அங்கு வந்து தங்கும் நேரத்தில் ,அப்பூக்காரியுடன் காதல் ஏற்பட்டு..ஒரு கோயிலில் இருவரும் மணமுடிக்கின்றனர். லட்சுமி கரு தரித்ததும் ..மணமான செய்தியை அறிகிறார் அவர் தந்தை.சந்திரனை அவர் பார்க்க விரும்புகிறார்.ஆனால்..அவனோ தவிர்க்க முடியாத காரணங்களால் அவ்விடத்தை விட்டு ..லட்சுமியிடமும் சொல்லாது சென்று விடுகின்றான்.

இடைபட்ட காலத்தில்..லட்சுமியின் தந்தை ஊராரின் ஏச்சுகளைக் கேட்க முடியாது தற்கொலை செய்து கொள்கிறார்.லட்சுமிக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. இதனிடையே அவளைத் தேடிவரும் சந்திரனிடம் அவள் இறந்து விட்டதாகத் தகவல் சொல்லப் படுகிறது.
சந்திரனின் நண்பரின் மகன் ஆனந்த.நண்பன் இறக்கும் நேரத்தில் ..ஆனந்தை வளர்க்கும் பொறுப்பை சந்திரனிடம் ஒப்படைக்கிறான்.

லட்சுமியின் பெண் வளர்ந்து வளர்ந்து..ஆனந்தை விரும்புகிறாள்.ஆனால் லட்சுமி அதை  விரும்பவில்லை..

சந்திரன் ,லட்சுமியை மீண்டும் சந்தித்தானா..ஆனந்த் லட்சுமியின் மகளை மணந்தானா..என்பதே மீதக்கதை.

திரும்பிப்பார்
------------------



அடுத்து.திரும்பிப்பார்..

வெளியான தேதி 10-7-1953


இதிலும் கலைஞர் வசனம்..

மாடெர்ன் தியேட்டர்ஸ் தயாரிக்க டி ஆர் சுந்தரம் இயக்கம்.
ஜி ராமநாதன் இசையில்  எஸ்.சி.கிருஷ்ணன் பாடிய "கலப்படம்..கலப்படம்" என்ற பாடல் பிரபலம்

பண்டரிபாய் நடித்திருந்தார்...படம் வெற்றி..இதில் இவர் ஏற்று நடித்த பாத்திரம் பெயர் பரந்தாமன்..
திரும்பிப்பார் படத்தில் செக்ஸ் ஒன்றே வாழ்க்கையின் பரமானந்தம் என நினைத்து, யாராக இருந்தாலும் பெண்டாள துடிக்கிற மோசமான வேடம் பாத்திரம்.. பராசக்தி குணசேகரனுக்கும் அடுத்த ஆண்டு வந்த திரும்பிப்பார் பரமானந்தத்திற்கும் இடையேதான் நடிப்பில் எவ்வளவு வேறுபாடு..
.படம்..மாபெரும் வெற்றி படமாக அமைந்தது எனலாம்.

1954..அடுத்த பதிவில்...

துப்பாக்கி...- என் பார்வையில்..




துப்பாக்கி படத்தை இணைய நண்பர்கள் பலரும் தோய்த்து காயப்போட்டு விட்ட நேரத்தில்..எனது விமரிசனம் தேவையா? என ஒரு நிமிடம் நினைத்தாலும்...உடன்..நீண்ட நாள் கழித்து..முன்னணி நடிகர் ஒருவர் நடித்து..வெற்றி பெற்றுள்ள படம் என்பதால்..கண்டிப்பாக விமரிசனமாய் இல்லாமல் என் எண்ணங்களை எழுத வேண்டும் என எண்ணியதால்தான் இப்பதிவு .

விஜய்..இளைய தளபதி பட்டத்திற்கு தான் தகுதியானவர் தான் என்பதை நிரூபித்துள்ளார்.காஜலோடு ஆட்டம் போடுவதில் ஆகட்டும்..வில்லனோடு மோதும் காட்சியில் ஆகட்டும், சத்யனோடும்..ஜெயராமுடனும்..காமெடி செய்வதில் ஆகட்டும்...சூப்பர்.
பழைய இளமையும், துள்ளலும் அமர்க்களப்படுத்தி விட்டார்.

திரைக்கதையை வடிக்க முருகதாஸ் பட்ட மெனக்கடல் தெரிகிறது.ஆனால் நாடகம் போல ஒரு காட்சி காதல், அடுத்த காட்சி துப்பாக்கி என மாறி மாறி வருவதை சற்று தவிர்த்திருக்கலாம்.மற்றபடி குறை சொல்ல முடியாது.தனி காமெடி டிராக் இல்லாமல்..பல இடங்களில் சிரிக்க வைத்துள்ளார்.ஜெயராமன் நன்கு ஒத்துழைத்துள்ளார்.

ஒளிப்பதிவு..சந்தோஷ் சிவன்...எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத்..பட வெற்றிக்கு உறுதுணையாய் உள்ளனர்.ஹாரீஸ் ..ம்..ஹூம்..ஏமாற்றி விட்டார்..பாடல்களில்.ஆனால் பின்னணி இசை நன்கு உள்ளது.

டீவி செய்தியில் ஜெயா டீவியும், புதிய தலைமுறையையும் காட்டி விட்டனர்..(சன்..கலைஞர்..???)

27-12-12 அன்று குண்டு வெடிப்பு என சொல்லி அதை முறியடிக்கும்  படம் 13-11-12 அன்றே வந்துவிட்டதே (வரும் முன் நடப்பதைக் காட்டி விட்டார் .போதிதர்மன் முருகதாஸ்.

சத்யன் ஒரு சப் இன்ஸ்பெக்டர் ரேங்க்..ஆனால்...கண்ட்ரோல் ரூமில்..யாருக்கும் தெரியாமல் அமர்ந்து,..நகரில் நடப்பதைக் கண்காணிப்பது..சற்று ஓவராகத் தெரியவில்லையா..முருகதாஸ் சார்.

கிளைமாக்ஸ்..  பாராட்டப்பட வேண்டிட ஒன்று.கிளேஷே ஆக இருந்தாலும்.

பல லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும்..இரண்டே முக்கால் மணி நேரம் போவதே தெரியாமல் படம் வேகமாகப் போகிறது தான் திரைக்கதையின் வெற்றியாகும்.

வெற்றிபெற்ற விஜய் கூட்டணியை வாழ்த்துவோம்.

Sunday, November 18, 2012

மதப் பிரச்னை, ஜாதிப் பிரச்னை இவை வராமல் படம் எடுப்பது எப்படி?




படத்தயாரிப்பாளரை..கதாசிரியர் ஒருவர் பார்க்க வந்தார்.தயாரிப்பாளரிடம், "ஐயா..தீவரவாதத்தை ஒழிக்கும் விதத்தில் என்னிடம் ஒரு சப்ஜெக்ட் உள்ளது..கேட்கிறிர்களா'? என்றார்.

தனது முந்தைய படம் அருமையாய் இருந்தும்..சில சாதி அமைப்புகளாலும்..மதக்கலவரத்தைத் தூண்டும் விதமாகவும் அமைந்துள்ளது என சில, பல சங்கங்களால் மிரட்டப்பட்டதாலும், திரையரங்குகளில் படத்தைக் காட்டவிடாமலும் ஆர்ப்பாட்டம் செய்ததால்..படம் தோல்வியடைந்ததால் , மனம் வெறுத்திருந்த  தயாரிப்பாளர், 'ஐயா..இனி அப்படிப்பட்ட படங்களே வேண்டாம்..வெறும் காதல் கட்சிகள் படமே போதும்' என்றார்.

'ஐயா..என் கதைகள் அப்படிப்பட்ட பிரச்னைகள் வரக் காரணமேயில்லை.ஏனெனில்..இதில் வரும் காதாபாத்திரங்கள் அனைவருமே தலைக்குத் தொப்பி அணிந்திருப்பர்.அவர்களின் பெயர்களும்..எக்ஸ், ஒய், இஜட் என்றுதான் இருக்கும்.ஆகவே எந்த மதத்தினர் அதிருப்தியும் வர வாய்ப்பில்லை' என்றார் கதாசிரியர்.

இப்படி செய்யும் முறை தயாரிப்பாளருக்குப் பிடித்துப்போக...பட விளம்பரம்  கீழ்கண்ட முறையில் செய்யப்பட்டது.

"ஏ..புரடக்க்ஷன்ஸ்  அளிக்கும்

"B:"

கதை - C
தயாரிப்பு -D
திரைக்கதை இயக்கம் - E

நடிகர்கள் - F, G, H


Saturday, November 17, 2012

சாதியால் வந்தது ஐயா...தொல்லை..




சாதி இரண்டொழிய வேறில்லை...பாலர் பாடத்திலேயே நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது.

அதன் பின் பாரதி..'சாதிகள் இல்லையடி பாப்பா..குலம் தாழ்ச்சி..உயர்ச்சி சொல்லல் பாவம்..' என்றார்.

ஆனாலும்..சாதி என்பது...தமிழர்களிடையே..மட்டுமல்ல..இந்தியர் அனைவரிடமுமே அழிக்க முடியாத ஒன்றாக உள்ளது.வடக்கே நடக்கும் கௌரவக் கொலைகளே இதற்கு ஆதாரம்.

வாக்குகளுக்காக...சாதிகள் இல்லையென..குடிசை வீட்டில் அமர்ந்து..அவர்களுடன் உணவு உண்டவரும்...ஒரு கட்டத்தில் நானும் பிராமண சமூகத்தைச் சார்ந்தவன் என்று பேசினார்.

தன் குடும்பத்தினர் பற்றி எழுதியதற்கு..இவ்வளவு வருடங்களாக தன் ஆதரவு பத்திரிகையாய் இருந்தாலும்..அதிக் கூட கணக்கில் எடுக்காது..'நான் பார்ப்பன ஜாதியில் பிறந்திருந்தால்..அப்பத்திரிகை பல வழக்குகளை சந்திக்கும் என்பதால்..இப்படி எழுதியிருக்குமா?நான் பிற்படுத்தப் பட்ட சாதியில் பிறந்ததால்தானே அப்பத்திரிகை இப்படி எழுதுகிறது' என்கிறார் ஒரு தலைவர்.

தமிழகத்தில் ஜாதிக்கட்சியாய் ஆரம்பித்து..பின் அரசியலுக்காக பெயரை மாற்றிய கட்சியும்...இதுவரை எங்கள் சாதியைச் சார்ந்தவர் யாரும்..பதவிக்கு வரவில்லை என்று கூறுவதுடன்..'இனி சாதிக் கட்சிகளுடன் தான் கூட்டணி' என்கிறது..

தமிழகத்தில்..தங்கள் சாதி பெயரில் கட்சிகளோ..சங்கங்களோ அமைக்காதார் யார்..

யாதும் ஊரே..யாவரும் கேளிர்..

இது படிப்பதற்கும்...வாய்ப்பந்தல் போடவுமே பயன்படுகிறது.

தன் வீட்டுக் கல்யாணம் என்றால் முதலில்...நாம் பார்ப்பது அதே சாதியைச் சார்ந்த மணமகனையோ/ மணமகளையோத் தானே!

இப்படி எங்கும்..எதிலும் சாதிதான் என்ற நிலையில்..'பிறாமணாள்' என்ற பெயரை உபயோகிப்பது தவறா..?

பொதுவாக சாப்பாடு ஓட்டல்களில்..'சைவ ஓட்டல்...அசைவ ஓட்டல்' என்றாலே போதுமானது.

அது முடியாது எனில்...மாமி மெஸ், ஆச்சி மசாலா, நாயுடு ஹால். ஐயங்கார் பேக்கரி' என்பது போல..

'ஐயர் ஓட்டல்' என பெயர் வைத்துக் கொள்ளலாம்..அதைவிடுத்து

'பிறாமணாள்' என பெயர் வைத்தது..   அது தப்பா//சரியா..என்பதைவிட.. தேவையா என்பதே கேள்வி..

 சமைக்கப்படும் உணவுவகை தரமாக, சுவையாக இருந்தால்..

அது பிறாமணாளாய் இருந்தால் என்ன..இல்லாவிட்டால் என்ன..மக்கள் ஆதரவு கண்டிப்பாக இருக்கும்.அந்த உணவகங்களுக்கு.

சரவணபவன் என்ன பிறாமணாளா...தரமான ஓட்டல் என்றால்..இன்று அந்தப் பெயரும் மனதில் தோன்றும் விதமாக ஆகவில்லையா?

அதைவிடுத்து..தேவையில்லாமல்...அசட்டுப் பிடிவாதத்துடன் அப்பெயரை வைத்ததால்...அவருக்கு செலவில்லா விளம்பரம் கிடைத்தாலும்....வாடகைக்கு இருந்த இடத்தை காலி பண்ணச் சொல்லவில்லையா..?

அதனால்..அந்த ஓட்டல் அதிபருக்கு, தேவையில்லாமல்..வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதல்லவா?

இனிமேலும்..தன் பலத்தை உணர்ந்து சாமானியன் முடிவெடுக்க வேண்டும்..

Friday, November 16, 2012

பிரதமர் அலுவலகமும்..கடிதங்களும்...




அலுவலகத்தில் நுழைந்த பிரதமர் வாசலில் சிலர் நிற்பதைப் பார்த்து, தன் செயலரிடம்,'அவர்கள் எல்லாம் யார்?' என வினவ..

அதற்கு செயலர், 'அவர்கள் பழைய பேப்பர்களை எடுக்கும் வியாபாரிகள்' என்கிறார்.

"ஓகோ..அப்படியா..ஆமாம் ..அதிலும் சில்லறை வர்த்தகத்திற்கு அந்நிய முதலீடை பயன்படுத்தலாமா?' -பிரதமர்.

'அந்த அளவு...வியாபாரம்.." என செயலர் இழுக்க..

'அலுவலகத்திற்கு உள்ளே வந்து பாரும்...தமிழக முதல்வர், மற்றும் கலைஞரிடம் இருந்து வந்த கடிதங்கள் மலை போல குவிந்திருக்கு' - பிரதமர்.

செயலர் உடன், 'ஐயா ..மறந்து விட்டேன்..இன்று கூட நாடார் சமுகத்தை இழிவுபடுத்தி சி.பி.எஸ்.இ., பாடத்தில் உள்ளதை நீக்க வேண்டும்..என தமிழகத்திலிருந்து மூன்று கடிதங்கள் வந்திருக்கு.

'மூன்றா..ஒன்று முதல்வர், மற்றொன்று கலைஞர்..மூன்றாவது யாரிடமிருந்து..?"

"அந்த மூன்றாவது கடிதம்..இன்று வரை தமிழக  சட்டசபையில்  எதிர்க்கட்சி தலைவராய் இருக்கும் விஜய்காந்த் என்பவரிடமிருந்து'

'அப்படியா..அப்போ..இனி தமிழகத்திலிருந்து இனி வரும் கடிதங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்....நான் சொன்னது சரி..அதிலும் அந்நிய முதலீட்டுக்கு ஏற்பாடு பண்ணவும்'

செயலர் என்ன செய்வது என அறியாது..வெளிநாட்டில் பழைய காகிதங்கள் வாங்கும் நிறுவனம் உள்ளதா? என ஆராயத் தொடங்கினார்.


Thursday, November 15, 2012

கொள்ளை..(ஒரு பக்கக் கதை)

காலை எழுந்ததும்..கையில் காஃபியுடன்..அன்றைய தினசரியை எனக்கு படித்து விட வேண்டும்..அப்போதுதானே..நம்மைச் சுற்றி நடக்கும் செய்திகளை நம்மால் அறிய முடியும்.

கடந்த சில நாட்களாக செய்தித்தாள்களில் நான் வசிக்கும் அசோக்நகர் பகுதியில் ..ஏதேனும் ஒரு இடத்தில் பட்டப் பகலில் கொலை..கொள்ளை என்றிருக்கிறது.நாடே கெட்டுப் போச்சு..

நான் நினைத்தது சரி....'அசோக் நகரில் நேற்றும் பகல் கொள்ளை' என்றது தலைப்புச் செய்தி.அதைப் பார்த்ததும்..உடன் மனைவையைக் கூப்பிட்டேன்..'பார்த்தியா..நேற்றுக் கூட நம்ம ஏரியாவிலே திருட்டுப் போயிருக்கு..' என்றவாறு ..அவள் கழுத்தில் அணிந்திருந்த கிட்டத்தட்ட பத்து பவுன் சங்கிலியைப் பார்த்தேன்.

'மேல படியுங்க' என்றாள்.

'அசோக் நகர்..18 ஆம் தெருவில் உள்ள சுபிக்க்ஷா அடுக்குமாடி குடியிருப்பில்..இரண்டாம் தளத்தில் உள்ளது 8 ஆம் எண் உள்ள..ஃப்ளாட்.அங்கு வசிக்கும் கந்தசாமி என்பவரும்..அவரது மனைவி லட்சுமியும் வேலைக்குச் செல்லும் தம்பதிகள்.அவர்கள் வீட்டை பூட்டிவிட்டு தினமும் வேலைக்குச் செல்வது வழக்கம்.நேற்றும்..அப்படிச் சென்று விட்டு மாலை வீடு திரும்பியவர்கள்..வீடு திறந்திருப்பதைப் பார்த்து..உள்ளே சென்று பார்த்த போது..பீரோவை உடைத்து 35 சவரன் நகைகள்..ஒரு லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்'

படித்து முடித்து..'பார்த்தியா நாம ஜாக்கிரதையா இருக்கணும்' என்றேன்.

திடீரென ..'என்னங்க..நம்ம ஃப்ளாட்டும் 18ஆவது தெருதானே..' என்றாள் சகதர்மணி .

'சுபிக்க்ஷா' நம்ம ஃப்ளாட் தானே.'

'நம்ம வீட்டு நம்பர் 7..அப்போ 8..அடடே..நம்ம பக்கத்து வீடுங்க..' என்றாள் படபடப்பாக

Wednesday, November 14, 2012

'துப்பாக்கி'யால் சர்ச்சை.. விஜய் வீட்டுக்குப் பாதுகாப்பு!




துப்பாக்கி படத்தில் முஸ்லீம்களை விமர்சித்திருப்பதாக சர்ச்சை வெடித்துள்ளது. இதையடுத்து நடிகர் விஜய்யின் வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
விஜய் நடித்துள்ள துப்பாக்கி திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வந்தது. தமிழகம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கிறது. படம் நன்றாக இருப்பதாக பாசிட்டிவான ரிசல்ட் வர ஆரம்பித்துள்ள நிலையில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
மும்பை தீவிரவாத சதிச் சம்பவப் பின்னணியில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. இந்த நிலையில் முஸ்லீம்களை விமர்சிப்பது போல இப்படம் உள்ளதாக தேசிய லீக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் அது கூறியுள்ளது. மேலும் பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் இணைந்து விஜய் வீட்டு முன்பு போராட்டம் நடத்தலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து விஜய் தனது மனைவி குழந்தைகளுடன் வசித்து வரும் நீலாங்கரை வீட்டுக்கும், அவரது பெற்றோர் வசித்து வரும் வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

(தட்ஸ் தமிழ்)

Tuesday, November 13, 2012

தமிழுக்கு அமுதென்று பெயர் - 2 (குறள் விளக்கம்)




அவன் அனைவரின் நலம் நாடும் நண்பனாய் திகழ்ந்தான்.
நண்பர்களுக்கு ஏதேனும் கெடுதல் வந்தால்...அதனால் தனக்கு பாதிப்பு ஏற்படும் என்றாலும் கவலையின்றி அவர்கள் நலனுக்கு உழைத்தான்.
நண்பர்கள் நலமே தன் மூச்சு எனத் திகழ்ந்தான்.
அவன் நண்பர்களும் அவனை தலை மீது வைத்துக் கொண்டாடினர்.
காலம் ஓடியது..
அவன் முதுமை அடைந்தான்..முன்னர் போல அவனால் நண்பர்களுக்கு உதவிட முடியவில்லை.அப்படியே அவன் உதவ எண்ணினாலும்..சந்தர்ப்பம், சூழ்நிலை அதற்கேற்ப அமையவில்லை.
அவன் இனி பயனற்றவன்..என அறிந்த உடன் இருந்த நண்பர்கள்..அவனை விட்டு விலகினர்..விலகியவரில் சிலர் அவனைத் தூற்றினர்..அவன் அவர்களுக்கு கொடுமை இழப்பதைப் போல பேச ஆரம்பித்தனர்.
ஆனால் அவனுடன் ,அவன் நிலை அறிந்து சிலர் இன்னமும் இருக்கின்றனர்..அவற்றில் ஒருவர்..

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும்

ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைக் கூட நம் உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது...என்றார்.

துப்பாக்கி - எதிர்பார்ப்புகளே ஏமாற்றம் தருகின்றன....




 இளையதளபதி விஜய்..மற்றும் முருகதாஸ் கூட்டணியில் தீபாவளிக்கு வந்துள்ள படம் துப்பாக்கி.

இப்படம் ஆரம்பித்த நாள் முதல்..வெளியாகும் நாள் வரை சந்தித்த சோதனைகள் எவ்வளவு?

படத்தலைப்பிற்காக இப்படம் பட்ட பாடு எவ்வளவு?

சென்சாரில் கூட ரீரிகார்டிங் சரியாக அமையாத அவசரத்தில்...தவணை கேட்டதாக வேறு செய்திகள் வந்தன.

படவெளியீடு தேதி வேறு..தள்ளிப் போனது.வெளிநாடு விநியோகஸ்தர்களுக்கு இதனால் நஷ்டம் என்று வேறு செய்தி.

இவ்வளவையும் மீறி..இந்தாண்டு பெரும் பொருள் செலவில் வெளியான..சகுனி,மாற்றான்,தாண்டவம்,பில்லா 2, ஆகிய படங்களும்
வசூலில் வெற்றி என்றாலும்..தோல்வி படங்களாக அமைந்தன.துப்பாக்கியும் அப்படித்தான் ஆகப்போகிறது என ரசிகர்களிடையே வதந்தி வேறு.

எல்லாவற்றையும் தாண்டி விஜய் வெற்றி பெற்றுள்ளார்..என வரும் ரிபோர்ட்டுகள் தெரிவிக்கின்றன.

இதற்குக் காரணம்..மற்ற படங்கள் எதிர்ப்பார்ப்பு இருந்தது..அதனால் ஏமாற்றம் ஏற்பட்டது.

அந்த ஏமாற்றம்..இந்த படத்திற்கான எதிர்ப்பார்ப்பை குறைத்தது.

அதுவே..இப்படத்தின் வெற்றிக்கு உறுதுணையானது எனலாம்.

வாழ்த்துகள் விஜய்.., முருகதாஸ்.

(டிஸ்கி- எச்சரிக்கை - படம் வியாழன் அன்று பார்க்கிறேன்...அதற்கு பின் என் விமரிசனம் )

Monday, November 12, 2012

தீபாவளி...




வெடித்துச் சிதறின
வெடிகளின் ஓசை
அதைவிட
அதைத் தயாரித்த
குட்டிக் கரங்களின்
விசும்பல் ஓசை
அதிகமாய்க் கேட்டது
செவியில்


Saturday, November 10, 2012

தீபாவளியும்..துப்பாக்கியும்...




அப்பா...துப்பாக்கி..என பேச்சை ஆரம்பித்தான் பையன்..

'துப்பாக்கியும் ஆச்சு...கிப்பாக்கியும் ஆச்சு..மனுஷன் கிடந்து அவதிப்படறான் தீபாவளிக்கு..இதுல இவனுக்குத் துப்பாக்கியாம்.'.அப்பா முணுமுணுத்தார்.

"குழந்தை என்ன கேட்டுட்டான்னு இப்படி எரிஞ்சு விழறீங்க..அவன் என்ன நிஜ துப்பாக்கியா கேட்கிறான்..கள்ளத் துப்பாக்கித்தானே..எவ்வளவு வருஷமா தீபாவளி கேப் வெடிக்க துப்பாக்கி கேட்டுட்டு இருக்கான்..நீங்களும் ஒவ்வொரு வருஷமும் அவனை டபாய்ச்சுனு தானே இருக்கீங்க' என்றாள் மனைவி.

'விவரம் புரியாம பேசாதே...தீபாவளிக்கு மாப்பிள்ளை வரேன்னு சொல்லி இருக்கார்.அவருக்கு துணி, வாட்ச் இதெல்லாம் வாங்கணுமேன்னு கவலைல நான் இருக்கேன்..இந்த சமயத்திலே என் கவலைத் தெரியாம...நீங்க வேற..'

'அடடே..உங்களுக்கு விவரம் தெரியாதா.9ஆம் தேதியே துப்பாக்கி படம் வரும்னு..மாப்பிள்ளை ரிசர்வ் பண்ணீருந்தாராம்.ஆனால் நாலு நாள் படம் தள்ளிப் போனதால...முதல் நாள் ரிசர்வ் பண்ணினவங்க டிக்கெட் எல்லாம்..படம் வெளிவரும் 13ஆம் தேதிக்கு மாற்றிக் கொடுத்துட்டாங்களாம்.அதனாலே..தீபாவளிக்கு வரமுடியாதுன்னு மாப்பிள்ளை சொல்லிட்டார்"

'அப்பாடா..படம் வெளிவர தாமதம் ஆனதுலே..யாருக்கு எவ்வளவு நஷ்டமானா என்ன...எனக்கு லாபம்.வாழ்க விஜய்.டேய்..கடைக்கு கிளம்பு..உனக்கு இந்த வருஷம் துப்பாக்கி நிச்சயம் வாங்கித் தரேன்'


Friday, November 9, 2012

இலவசம்..இலவசம்..தேவையா?

பக்கத்து வீட்டிற்கு வந்த செய்தித்தாளை இரவல் வாங்கி படிக்கும் போதுதான்..அந்த போட்டி பற்றிய அறிவிப்பை படித்தேன்.இலவசங்கள் தேவையா? என்ற தலைப்பிற்கு கட்டுரை எழுதச் சொல்லி இருந்தார்கள்.

அன்று ஞாயிற்றுக் கிழமை யாக வேறு இருந்ததால்..என்னை நண்பன் ஒருவன் சாப்பாட்டிற்கு அழைத்திருந்தான்..அவனுடன் சாப்பிட்டவாறே இப்போட்டியைப் பற்றிக் கூறினேன்.அவன் கண்டிப்பாகக் கலந்துக் கொள் என்றான்..அப்போதுதான் மேசையில் கிடந்த பேனாவைப் பார்த்தேன்.அதைக் கையில் எடுத்து அதையும், நண்பனையும் மாறி மாறி பார்த்தேன்.வேணுமானால் வைத்துக் கொள் என்றான்.பதிலுக்கு 'நன்றி' என்றவாறே என் சட்டையில் அப்பேனாவைக் குத்திக்கொண்டேன்.

அடுத்த நாள்..அலுவலகம் வந்ததும்..மேசையைத் திறந்து இரண்டு வெள்ளைத்தாள்களை எடுத்தேன்.

'இலவசம்' பற்றி என்ன எழுதுவது..என்று யோசித்த படியே..பக்கத்து மேசை ரகுவைப் பார்த்தேன். தன் வெற்றிலைப் பெட்டியைத் திறந்து ஆடாக மாறி இருந்தான்.அவனிடம் சென்று..இரண்டு வெற்றிலையையும்,சீவலையும் எடுத்து வாயில் போட்டு மென்றவாறே என் இருப்பிடம் வந்து கற்பனை ஆமையை (எவ்வளவுநாள் குதிரை என்று சொல்வது..மேலும்..எனது கற்பனை மெதுவாகவே வருவதால்..ஆமை என்பதே சரி) தட்டிவிட்டேன்.

பொங்கலுக்கு அரசு இலவசமாகத் தரும் வேஷ்டி..சட்டைப் பற்றி எழுதலாமா? இல்லை நண்பகல் இலவச உணவு பற்றி..வேண்டாம் ..வேண்டாம் ..அது குழந்தைகளுக்கு..அதில் கை வைக்க வேண்டாம்.இலவச சைக்கிள் ,இலவச டி.வி., இலவச நிலம் ..எதைப் பற்றி எழுதுவது?

ஆமை ஓட மறுத்தது..

அந்த சமயம் அலுவலகம் கொடுக்கும் இலவச தேநீர் வந்தது.அதைக் குடித்துவிட்டு..வெளியே வந்தேன்..வெளியே நண்பன் ஒருவன் புகைத்துக் கொண்டிருந்தான்.அவனிடம் ஒரு சிகரெட் ஓசி வாங்கினேன்..அவனே பற்றவும் வைத்தான்.சிறிது நேரம் அரட்டை அடித்தேன் அவனிடம்.திரும்ப மேசைக்கு வந்தேன்.

எண்ணம் இலவசம் பற்றியே இருந்ததால்..அலுவலக வேலை ஓட மறுத்தது..மதியம் ஒரு மணி..

பக்கத்து மேசை ரகு..சாப்பிடப் போகலாமா? என்றான்.உடன் தலையாட்டினேன்.ஏனெனில்..அவன் யாரிடமும் எதையும் இலவசமாக பெறமாட்டான்..நான் ஹி..ஹி..ஹி..

அதைத் தவிர ரகு..அவனோடு யார் வந்தாலும்..அவர்களுக்கு செலவு செய்வான்..(பிழைக்கத் தெரியாதவன்)

சாப்பிட்டுவிட்டு..வந்ததும் மேலதிகாரி கூப்பிட்டு வங்கிக்குச் சென்று..கவனிக்க வேண்டிய வேலைகள் சிலவற்றைச் சொன்னார்.'மிகவும் அவசரம்..வண்டியில் சென்று விடுங்கள்'என்றார்.

'சார்..நான் இன்று வண்டி கொண்டுவரவில்லை' என ஒரு சின்ன பொய்யைச் சொன்னேன்.'சரி..சரி..ஆட்டோவில் சென்று விடுங்கள்' என்றார்.அப்பாடா..நூறு ரூபாய் கிளைம் பண்ணலாம் என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.வங்கி வேலைகளை முடித்துவிட்டு..திரும்ப மணி நாலாகிவிட்டது.இனி எழுதினாற்போலத்தான்..என எண்ணிய போது..நண்பன் ஒருவன் தொலைபேசினான்.அன்று மாலை திரைப்படம் ஒன்றிற்கு இரண்டு டிக்கட் இருப்பதாகவும்..வருகிறாயா? என்றான்..

கரும்பு தின்னக் கூலியா? 'சரி' என்றேன்.அலுவலகம் விட்டு கிளம்பும் போது ஞாபகமாக வெள்ளைத்தாள்களை எடுத்துக் கொண்டேன்.

சினிமா..இரவு டின்னர் எல்லாம் நண்பன் செலவில் முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்ததும்..எழுதத் தொடங்கினேன்...

"ஏழைகளுக்கு..இலவசம்..இலவசம் என்று கொடுத்து அரசு அவர்களை சோம்பேறி ஆக்கிவிட்டது..' என ஆரம்பித்தேன்....

Thursday, November 8, 2012

வள்ளுவனும்..கண்ணழகும்..

கயல்விழி,மான்விழி,குவளைக் கண் என கண்களைப் பாடாத கவிஞனே இல்லை எனலாம்.
காதல் ஏற்பட கண் பிரதான உறுப்பாய் அமைந்து விடுகிறது.காதலுக்கு கண்ணில்லை,கண்டதும் காதல் என்றெல்லாம் சொல்லப் படுகிறது.

கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே..கண்கள் இரண்டும் உன்னைத் தேடுதே..கண்ணுக்குள் சிக்கிக் கொண்ட..கண்களும் கவி பாடுதே..கண்கள் இரண்டால்.. என்றெல்லாம் கவிஞர்கள் காதலுக்கும்..கண்ணிற்கும் முடிச்சுப் போட்டுள்ளார்கள். அவ்வளவு ஏன்..காதலியின் இதயத்தில் காதலன் நுழையும் வாசல் அவளின் கண்களே..என்பதை கவியரசு..'இதயத்தின் வாசல் விழியல்லவா?' என்கிறார் ஒரு பாடலில்..

இவர்களுக்கெல்லாம் முன்னோடி யார்..என்றால்..வழக்கம் போல வள்ளுவனே முன் நிற்கிறான்..கண்ணழகு பற்றி அவர் இன்பத்து பாலில் பல குறள்களில் சொல்கிறார்.முதலில் தலைவனைக் கவர்வதும்..கடைசிவரை நிற்பதும் தலைவியின் கண்ணழகே என்கிறார்.

காதலில் அடையும் ஐம்புலவின்பத்திலும் ..கண்டு, கேட்டு எனக் கண்,காது ஆகியவற்றலாகும் இன்பத்தை முதலில் குறிக்கிறார்.

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து

தலைவி வீசும் விழிவேலுக்கு எதிராக தலைவன் அவளை நோக்க..அக்கணமே அவள் பார்வை..அவள் மட்டுமே தாக்குவது போதாது என்று தானையுடன் தாக்குவது போல இருந்ததாம்.

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு

எமனைப் பற்றி தலைவன் ஏதும் அறிந்ததில்லை..ஆனால் எமன் எனப்படுபவன் பெண்ணுருவில் வந்து போர்த்தொடுக்கக் கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை தலைவியின் பார்வையால் அறிகிறானாம்.

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக் கமர்த்தன கண்

பெண்மையின் வார்ப்படமாக திகழும் தலைவியின் கண்பார்வை மட்டும் மாறுபட்டு உயிரைப் பறிப்பது போலத் தோன்றுகிறதாம்.

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்னிவள் கண்

தலைவியின் புருவம் மட்டும் கோணாமல் நேராக இருக்குமே யாயின்..அவள் கண்கள் அவனுக்கு நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யாதாம்.

இன்னுமொரு இடத்தில்..

பிணயேர் மடநோக்கும்.. என்கிறார்..பெண் மானைப் போன்று இளமைத் துள்ளும் பார்வையாம்...

(கண்ணழகு தொடரும்)

மீள் பதிவு

Wednesday, November 7, 2012

வாய் விட்டு சிரியுங்க..

1) ராகு காலம், எம கண்டம் இதுல எல்லாம் நம்பிக்கையில்லைன்னு எமகண்டத்தில கிளம்பி ஆஃபீஸ் போனியே என்ன ஆச்சு?
எனக்கு முன்னாலேயே அந்த மேனேஜர் எமன் வந்து உட்கார்ந்துக்கிட்டு இருக்கு

2)மெகாசீரியலுக்கான கதை உங்கக் கிட்ட இருக்கா..எங்கே ஒன் லைன்ல சொல்லுங்க
ஒரு பணக்கார மருமகள்..அவளைக் கொடுமைப் படுத்தற அத்தை..மௌனியாய் கணவன்...
ஆகா..அற்புதம் ..பிடியுங்க அட்வான்சை

3)அவருக்குப் பின்னாலேயே சொம்பைத் தூக்கிக்கிட்டு ஒருத்தர் போறாரே எதற்காக..
இணையதளத்தில ஏதோ சர்ச்சையாம்..நாட்டாமைப் பண்ணப் போறார் முதல்லப் போறவர்..பின்னால அவர் எச்சலைத் துப்ப சொம்போட போறார் உதவியாளர்

4)இந்த சமயத்தில நீ வந்தது என் மனைவிக்குப் பிடிக்கலைன்னு நினைக்கிறேன்
எப்படிச் சொல்ற
அவ போட்ட காஃபியை உனக்குக் குடிக்கக் கொடுக்கிறாளே

5)தொண்டர் 1- தலைவருக்கு வயிறு சரியில்லைன்னு நினைக்கிறேன்
தொண்டர்2- எப்படிச் சொல்ற
தொண்டர்1- மக்கள் கிட்ட இரண்டு விரல்களைக் காட்டும் போது திருப்பிக் காட்டறாரே!

6)பல் மருத்துவர்- உங்க மொத்தப் பல்லையும் இன்னிக்கு பிடுங்கியாகணும்
நோயாளி- ரொம்ப வலிக்குமே டாக்டர்
பல் மருத்துவர்- பல்லைக் கடிச்சுக்கிட்டுப் பொறுத்துக்கங்க

7)பதிவர் - எனக்கு இதுவரைக்கும் தலைவலின்னு வந்ததே இல்லை
நண்பர்-உங்களாலே மத்தவங்களுக்குத்தானே தலைவலி வரும்

Tuesday, November 6, 2012

நமது கருத்தும்..சுதந்திரமும்...




கடந்த சில நாட்களாக இணையத்தில் அதிகம் அடிபடும் வார்த்தைகள்...நமது கருத்துகளும்..அதை நாம் இணையத்தில் வெளியிடும் சுதந்திரமும்.

பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் கருத்து..கொள்கைகள் பற்றி நம் கருத்துகளை சொல்லும் சுதந்திரம் அனைவருக்கும் உண்டு..ஆனால் அதற்கான எல்லை என்ன..? அதை யார் நிர்ணயிக்கிறார்கள்..?

அந்த சம்பந்தப்பட்ட நபர் தான்..

கலைஞரை திட்டி வந்த பின்னூட்டங்கள் அவரது ஃபேஸ்புக்கில் எத்தனை?  எவ்வளவு ஆபாச பின்னூட்டங்கள்...சைபர் கிரைமிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என அவர் நினைத்திருந்தால்...அவரது புகார்கள் கின்னஸ் சாதனையை அடைந்திருக்கும்...ஆனால் அவர் அதை செய்யவில்லை.இன்னும் சொல்ல போனால்..நம்மால் அதிகம் சுதந்திரத்தோடு திட்ட முடிந்த தலைவர் அவர் ஒருவர்தான்.

சரி ..அது போகட்டும்..விஷயத்திற்கு வருகிறேன்...

ஃபேஸ்புக்கிலும்..டிவிட்டரிலும்..ஒரு பிரபலம் இருந்தால்..உடனே..அவரைத் தொடர்கிறோம்...உங்கள் எண்ணத்தை ஒட்டி அவர் எழுதிவிட்டால்..ஜன்ம சாபல்யம் அடைந்து விட்டதாகவே எண்ணுகிறோம்.ஆனால்..அந்த பிரபலத்தைப் பொறுத்தவரை அவருக்கும் தன்னை ஃபாலோ பண்ணுபவர் எண்ணிக்கை அதிகம் வேண்டும் அவ்வளவுதான்.

ஆர்வக் கோளாறு காரணமாக..நாம் ஏதேனும் சொல்ல...சாரி...எழுதப்போக..அந்த பிரபலத்தின் மூடைப் பொறுத்து..மாட்டிக் கொள்கிறோம்.

இது நமக்குத் தேவையா சொல்லுங்கள்..

மாதா மாதம் சம்பளம் வாங்கி குடும்பத்தை நடத்தறதுக்கே..நாக்கு..வெளியே தள்ளிடும் நிலையில்..பொழுது போக்குக்காக .எழுதப்போக ..போலீஸ்..கோர்ட்..வக்கீல் செலவு ..எல்லாவற்றையும் விட பொழுதே இல்லாமை...மனக்கவலை...தேவையா..

கொஞ்சம் சிந்தியுங்கள்..

முதலில் நாம செய்ய வேண்டியது...

பிரபலங்களைத் தொடர்வதை நிறுத்த வேண்டும்.
நமக்கு வேண்டிய நண்பர்களை மட்டுமே தொடர வேண்டும்.
நாம் தொடர்வது யாராயிருந்தாலும்...வரம்பு மீறாது..ஆபாசம் இல்லாமல் கமெண்டை எழுத வேண்டும்..

இதெல்லாம்..முடியாது என்றால்..இணையத்திலிருந்தே ஓய்வு பெறுங்கள்.

இவை என்னுடைய எண்ணங்கள்..அவ்வளவுதான்..

இதை நீ யார் சொல்ல என சண்டைக்கு வந்துவிடாதீர்கள்...பிடித்தால் எடுத்துக் கொள்ளுங்கள்..

இல்லையேல்...பிரபலங்களைத் தொடருங்கள்...அவ்வளவுதான்.

(இந்த பதிவு யாரையும் மனதில் வைத்துக் கொண்டு எழுதவில்லை..பொதுவான ஒன்றே)

Sunday, November 4, 2012

தமிழுக்கு அமுதென்று பெயர்

கவி காளமேகம் சிலேடையாக கவி பாடுவதில் வல்லவர்.பல சமயங்களில் அவை வசை பாடும் கவிகளாக அவை அமைவதால் 'வசைப்பாட காளமேகம்' என்னும் பெயர் பெற்றார்.இவர் பாடல்களில் எள்ளல்,ஏசல்,கிண்டல் என எல்லாம் இருக்கும்.

சிவபெருமானை முக்கண்ணன் என்பர்.நெற்றிக்கண்ணையும் சேர்த்து ..ஆனால் காளமேகம் சொல்கிறார்..சிவனுக்கு இருப்பது அரைக் கண்ணாம்.

முக்கண்ண னென்றானை முன்னோர் மொழிந்திடுவார்
அக்கண்ணிற் குள்ள தரைக் கண்ணே

என்கிறார்.

அதாவது..சிவனுக்கு இருக்கும் முக்கண்ணில் ..தன் உடலில் பாதியை உமைக்கு கொடுத்துவிட்டபடியால்..மீதிப் பாதியில் இருப்பது ஒன்றரைக் கண்ணே..அதிலும் ஒரு கண் கண்ணப்ப நாயனார் கொடுத்தது.மீதம் இருக்கும் அரைக் கண்ணே சிவனுடையது என்கிறார்.

இனி தமிழில் உள்ள ஒரு சிறப்பு..

எண்களை எழுத்தால் எழுதும் போது தமிழில் மட்டுமே ஒன்று முதல் 899 வரை அவை 'உ' கரத்தில் முடியும்.

உதாரணம்...ஒன்று ..கடைசி எழுத்து 'று'..அதாவது ற்+உ=று
எந்நூற்று தொன்னூற்று ஒன்பது..கடைசி எழுத்து 'து' த்+உ=து

Thursday, November 1, 2012

ஃபோஃபர்ஸ் ஊழலும்..மகாத்மா காந்தியும்...




ராணுவத்திற்கு ஃபோஃபர்ஸ் பீரங்கி வாங்கியதில் ஊழல் நடந்ததை நம் பத்திரிகைகள் வெளிக் கொணர்ந்தது நாம் அறிந்ததே.இதில் மகாத்மா காந்தி அவர்கள் பெயரும் இடம் பெற்று அவர் அடுத்து நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததும் நமக்குத் தெரியும்...

என்ன தலையைப் பிய்த்துக் கொள்ளத் தோன்றுகிறதா..?

தமிழக காங்கிரஸின் கீழே கண்ட அறிக்கை ஒன்று பார்த்ததால் வந்த வினை...



இந்திரா காந்தியை சோனியா காந்தியாக ஆக்கியவர்கள்..இனி வரும் காலங்களில் ராஜீவ் காந்தியை..மகாத்மா காந்தியாக ஆக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்!!!!

ஆமாம்...இவர்கள் டைம் பத்திரிகையை டயம்ஸ் ஆஃப் இந்தியா என எண்ணியவர்கள் தானே!!