Tuesday, July 31, 2012

ரூபாய் பத்தாயிரம் பரிசுக் கதை..




ஒவ்வொரு ஆண்டும் 'அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியை' கல்கி வார இதழ் நடத்தி வருகிறது.பரிசு பெறும் முதல் கதைக்கு ரூ.10000 மும் இரண்டாம், மூன்றாம் பரிசுகளாக தலா 7500, 5000 வழங்கி வருகிறது.தவிர்த்து பிரசுரிக்க தேர்வான கதைகளுக்கும் அதற்கான சன்மானத்தை அளித்து வருகிறது.

இந்த ஆண்டிற்கான நடுவர்களாக வெ.இறையன்பு மற்றும் இயக்குநர்,நடிகை ரோகிணி ஆகியோர் பொறுப்பேற்று ஆசிரியர் குழுவினரோடு இணைந்து பரிசுக் கதைகளைத் தேர்ந்தெடுத்தனர்.

இவ்வாண்டு 10000 ரூ பரிசு பெறும் முதல் பரிசுக்கான  'போன்சாய் நிழல்கள்' தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.இதை எழுதியவர் செம்பை முருகானந்தம்.திருச்சியைச் சேர்ந்தவர்.
கதை இவ்வார கல்கியில் வெளிவந்துள்ளது.

கதை நடை..ஒருவர் கேள்விகளைக் கேட்க மற்றவர் பதில் சொல்வது போல அமைந்துள்ளது.கடைசியில் கேள்வி கேட்பவர் யார், பதில் சொல்பவர் யார் என்று இரண்டுவரிகளை படிக்கையில்...'ஆஹா...முதல் பரிசுக்கான அனைத்து தகுதிகளும் கொண்ட கதை' என்று மனம் துள்ளல் போடுகிறது.

கதையை முழுதுமாக விமரிசப்பதுடன்..அதைப் படித்துப் பார்த்தால்தான் சுவையை அனுபவிக்கமுடியும்.

சிறுகதைகள் இலக்கியத் தரம் வாய்ந்தவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.வாழ்த்துகள் கதாசிரியருக்கு மட்டுமல்ல..இக்கதை பரிசுக்கு தேர்ந்தெடுத்த நடுவர்கள் மற்றும் ஆசிரியர் குழுவினருக்கும்.

இதை சிறந்த கதையாக தேர்ந்தெடுத்த நடுவர்களின் கருத்து...

ரோஹிணி - தி.ஜா.வின் கதைகள் படிக்கும் போது யார், எங்கே, எவருடன் பேசுகிறார் என்பதை புரிந்துகொள்ள சில வரிகள் ஆகும்.அப்படியொரு தன்மை இந்தக் கதையில் பார்க்க நேர்ந்தது.இறையன்பு சுட்டிக்காட்டியிருப்பது போல் இந்தக் கதை இன்றைய காலத்தின் பிரதிபலிப்பாகவும் இருக்கிறது.

இறையன்பு - இன்றைய சூழலில் குழந்தைகளின் மனத்தில் அன்புடன் விதைக்கப்படும் கல்வி எவ்வளவு இனிய அனுபவமாக மாறும் என்பதை உணர்த்தும்  அழகான சிறுகதை.உயரிய உத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களுடன் வடிவமைக்கப்பட்ட இந்தக்கதை அவாமிகுந்த பெற்றோர்களிடம் மாற்றம் ஏற்படுத்தக்கூடியது.


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

திருச்சியைச் சேர்ந்த செம்பை முருகானந்தம் அவர்களுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

நன்றி...
(த.ம. 2)

ADMIN said...

கதாசிரியருக்கு வாழ்த்துகள்.!

கூடவே சிறுகதையையும் கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். தரமான கதையை நாங்களும் வாசிக்க ஒரு வாய்ப்பு அளித்திருக்கலாமே..!

கதையைப் பற்றிய தங்களுடைய கருத்துக்கள் சிறுகதையைப் படிக்கத் தூண்டுகிறது...!