Monday, April 9, 2012

600 குழந்தைகளுக்கு தந்தையான விஞ்ஞானி




இங்கிலாந்து விஞ்ஞானி ஒருவரிடமிருந்து பெறப்பட்ட உயிரணுவிலிருந்து சுமார் 600 குழந்தைகள் பிறந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் பெர்டோல்ட் வியஸ்னர் என்ற விஞ்ஞானி அவரது மனைவி மேரி பார்டன் உடன் சேர்ந்து மகப்பேறு மருத்துவமனை ஒன்றை நிறுவி இருந்தார்.

லண்டனில் 1940 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை மூலம் உயிரணு தானம் பெற்று பெண்கள் குழந்தை பேறு பெற்றுள்ளனர்.
அதில், 1940 முதல் 1960 களின் இடைப்பட்ட காலம் வரை சுமார் 1500 குழந்தைகள் பிறந்துள்ளன.

அவ்வாறு பிறந்த குழந்தைகளில் 600 குழந்தைகள் அந்த மருத்துவமனை நிறுவனரும் விஞ்ஞானியுமான பெர்டோல்ட் வியஸ்னரின் உயிரணு மூலம் பிறந்துள்ளது என தற்போது தெரிய வந்துள்ளது.

இவர் ஆண்டொன்றுக்கு 20 முறை உயிரணு தானம் செய்துள்ளார்.

இவர் உண்மையிலே 600 குழந்தைகளுக்கு உயிரியல் தந்தை என்றால், இவர் இதற்குமுன்னர் உள்ள சாதனைகளை முறியடித்தவர் என்ற பெருமையை அடைகிறார்.

அதாவது, அமெரிக்காவை சேர்ந்த உயிரணு கொடையாளர் ஒருவர் 150 குழந்தைகளுக்கு தந்தை என்ற பெருமையை பெற்று வந்தார். இப்போது அதனை முறியடித்தவராக வியஸ்னர் இருக்கிறார்.

600 குழந்தைகளுக்கு தந்தையான வியஸ்னர் கடந்த 1972 ஆம் ஆண்டு மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் வெப்துனியா

செய்திகள்

No comments: