Friday, December 23, 2011

மத்திய அரசைக் குறை கூறக்கூடாதாம்...




முல்லைப் பெரியாறு பிரச்னையில் மத்திய அரசை குறை கூறுவது சரியல்ல என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் கூறினார்.

செய்தியாளர்களிடம் ஞானதேசிகன் கூறியது:÷முல்லைப் பெரியாறு பிரச்னையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் நிலை.

எனவே, மத்திய அரசு தலையிட்டுத் தீர்வு காணவில்லை என்று குறை கூறுவது சரியல்ல. இரு மாநிலங்களும் கேட்டுக் கொண்டால் மட்டுமே மத்திய அரசு தலையிட முடியும்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று 2006-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை ஏற்காத கேரள மாநில அரசு, சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தது. இதனால், இந்தப் பிரச்னை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆனந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவும் அணையை ஆய்வு செய்ய உள்ளது. அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.

அணையின் நீர்மட்டத்தை கேரள அரசால் குறைக்க முடியாது. அணையை உடைக்க எந்தவிதமான ஆயத்தப் பணிகளையும் கேரளம் மேற்கொள்ளவில்லை. அதனால் அணையை உடைக்கவும் வாய்ப்பில்லை.

இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்திருந்தும் தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசை குறைகூறி அரசியல் செய்து வருவது கண்டிக்கத்தக்கது. இப்பிரச்னையில் இரு மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவைக் கெடுக்கும் வகையில் சிலர் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது இரு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டிஸ்கி- இந்நிலையில் டிசம்பர் 25ஆம் நாள் மெரினாவில் ஒன்று கூடுவோம்


1 comment:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

இன்குலாப் ஜிந்தாபாத்