Tuesday, December 13, 2011

சிறைக்கைதியின் மனிதநேயம்....




வெளியூரிலிருந்து ,சென்னை அடையார் கேன்சர் இன்ஸ்டிட்யூட்டிற்கு ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொள்ள வருபவர்களுக்கு தங்கி சிகிச்சைப் பெற இலவச ஹாஸ்டல் நடத்திவருபவர் திரு வி.கிருஷ்ணமூர்த்தி.இந்த டிரஸ்டிற்கு ஸ்ரீ மாதா டிரஸ்ட் என்று பெயர்.

இந்த தர்மசாலாவில் நோயாளியுடன் அவரைப் பார்த்துக் கொள்ள ஒருவரும் தங்கலாம்.மூன்று வேளையும் பாரம்பரிய சாப்பாடு,பால், காஃபி,ஸ்னாக்ஸ் ஆகியவையும் வழங்கப் படுகிறது.

இதற்காக பொதுமக்களிடம் இருந்து நிதி உதவியும், ஆதரவையும் இந்த டிரஸ்ட் எதிர்பார்க்கிறது.

பிறந்த நாள், திருமண நாள், வீட்டில் மற்ற விஷேஷங்கள் என்று வரும் போது இதற்கு நிதி உதவி செய்யலாமே நாமும்.

அவர்களின் ஒரு நாள் சாப்பாடு செலவை 10000 அளித்து ஒரு நாள் ஏற்கலாம்.

4000 அளித்து மதிய/இரவு உணவு அல்லது 2500 அளித்து காலை சிற்றுண்டி மட்டும் அளிக்கலாம்.ஒவ்வொரு நோயாளி என தேர்ந்தெடுத்து மாதம் அவர்களுக்கு 1000 அளிக்கலாம்.நம்மால் எது முடியுமோ அது செய்யலாம்.

அவர்களுக்கு சமீபத்தில் 1000 ரூபாய் நன்கொடையை ஒரு சிறை கைதி அளித்துள்ளார்.அவரின் மனிதநேயம், உயர்ந்த சிந்தனையைப் போற்ற தோன்றுகிறது.

இதோ அவர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம்...

தன்னை நேசிப்பது சுயநலம்...பிறரை நேசிப்பது மனிதநேயம்

அனுப்புநர்:
G.A.ரமேஷ்..ct no 12683
s/o.K.அருணாசலம்
மத்திய சிறை, திருச்சி-20

பெறுநர்
உயர்திரு செயலாளர் அவர்கள்
ஸ்ரீ மாதா டிரஸ்ட்
ராஜஸ்தானி தர்மசாலா
பழைய கேன்சர் இன்ஸ்டிட்யூட் வளாகம்
கெனால் பேங்க் ரோடு,
அடையாறு, சென்னை-20

வழி-உயர்திரு கண்காணிப்பாளர் அவர்கள்
மத்திய சிறை, திருச்சி-20

அய்யா,
ஸ்ரீ மாதா டிரஸ்ட் நிறுவனத்தாளர்களுக்கு எனது அன்பு கலந்த வணக்கம்.தாங்கள் செய்யும் சேவை மிகவும் மகத்தானவை.இச் சேவை மையத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து நல்ல உள்ளங்களுக்கு இறைவன் என்றென்றும் துணை நிற்பார்.தாங்கள் செய்யும் சேவைகள் இறை தொண்டுக்கு மேலான செயலாகும்.உங்கள் சேவைகள் இன்னும் சிறக்க அன்புடன் வாழ்த்துகிறேன்.
மேலும் தங்களது தொண்டு நிறுவனத்தில் கொடிய புற்று நோயால் உயிருக்கு போராடும் ஏழை நோயாளிகளுக்கு வயிறாற உணவு அளித்திடும் வகையில் என்னால் முடிந்த தொகையாக ரூ.1000/- ஒரே ஆயிரத்துக்கான வரைவோலை (DD)இத்துடன் இணைத்தனுப்பியுள்ளேன்.இதனை அன்புடன் ஏற்றுக்கொண்டு இனிதே விடைதர பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
                                                                                                                              இவன்
                                                                                                                               G.A.Ramesh
நாள்-01-11-211
D.D.No.887575/2-11-11 SBI Trichy


டிஸ்கி-கடைசிகட்ட ஏழை புற்று நோயாளிகளுக்கு ஒரு இலவச காப்பகம், தாம்பரத்தில் கட்டுவதற்கு தேவையான நிலத்தை தந்து உதவுமாறு கடந்த 2 வருடங்களுக்கு மேலாக தமிழக அரசிடம் தொடர்ந்து கேட்டுவரும் இந்த அறக்கட்டளைக்கு..நல்ல நாள் என்றாவது ஒருநாள் நிச்சயம் வரும் என நம்புகின்றனர்..அதன் நிர்வாகிகள் .


3 comments:

ரிஷபன் said...

மனித நேயத்தை சிறையில் அடைக்க முடியாது!

ஹேமா said...

இப்படியான சில விஷயங்கள்தான் இன்னும் மனிதம் வாழ்வதாய் உறுதிப்படுத்திக்கொண்டிருக்கிறது !

காஞ்சி முரளி said...

///கடந்த 2 வருடங்களுக்கு மேலாக தமிழக அரசிடம் தொடர்ந்து கேட்டுவரும் இந்த அறக்கட்டளைக்கு..நல்ல நாள் என்றாவது ஒருநாள் நிச்சயம் வரும் என நம்புகின்றனர்////

சார்...!

காமெடி பண்ணாதீங்க சார்...!