Monday, October 24, 2011

எம்.ஜி.ஆர்., ஏன் திமுகவில் அமைச்சராகவில்லை..?!




அந்த சமயத்தில் எம்ஜிஆர் எந்தக் கட்சியிலும் இல்லை.,ஆனால் அரசியல் பற்றி சிந்தனையாளர்கள் பற்றி அடிக்கடி அந்நாள் பிரபல இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தரிடம் விவாதிப்பாராம்.

மூத்த இயக்குநர் திருலோகசந்தர் சமிபத்தில் ஒரு வார இதழிற்கு பேட்டிக் கொடுத்திருந்தார்.அதில் இவ்வாறு தெரிவிக்கிறார்.

அவர் மேலும் கூறுகையில்..

ஒருநாள் எம் ஜி ஆர் என்னிடம்'இப்போது இருக்கும் நிலையில், எனக்கு எந்தக் கட்சியிலும் ஈடுபாடு இல்லை.நானே ஒரு கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்றுள்ளேன்.அது சாத்தியமா? அது என்னால் முடியுமா? என்றார்.

அதற்கு நான்., 'முடியும்.ஆனால் அதற்கு கொஞ்ச காலம் பொறுத்திருக்க வேண்டும். முதலில்  அரசியல் அறிவு வேண்டும்.பின்னால் இருந்து நம்மை முன்னுக்குத் தள்ளும் உந்துதல் சக்தி வேண்டும்.அது மனித கூட்டம்,தொண்டர் படை, கோட்பாடு, பேச்சாற்றல் ஆகும்.இப்பொழுது ஒரு கூட்டம் உங்களை தொடர ஆரம்பித்து இருக்கிறது.இது போதாது.காமராஜர்,அண்ணா போல ஒரு கட்சியைச் சார்ந்திருந்து முன்னேறுவது உசிதம்.உங்களுக்கு சரி என்று தோன்றும் அரசியல் கட்சியில் சேருங்கள்.அந்தக் கட்சியையும் உங்களையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.பின் நல்ல அறிமுகத்தோடு வந்து கட்சி ஆரம்பியுங்கள் அதற்குள் உங்களுக்கே பல விஷயங்கள் புரிந்துவிடும்.நீங்கள் மக்களுக்குச் செய்ய வேண்டிய நன்மைகளை செய்ய முடியும்' என்றேன்.

பின்னாளில் அதுவே சாதனையானது.

'திராவிட முன்னேற்ற கழகம் முதன் முறையாக அரசு அமைக்கும் முயற்சியில் இருந்த போது நான், ' நீங்கள் நிச்சயம் அமைச்சராவீர்கள்' என்றேன்

அதற்கு அவர், 'ஆக மாட்டேன்..இப்போது மந்திரிப் பதவிக்காக போட்டி நடக்கப் போகிறது.அதில் கலந்துக் கொண்டு அனைவரின் அதிருப்தியையும்,விரோதத்தையும் பங்கிட்டுக் கொள்ள நான் விரும்பவில்லை.ஆர்வக் கோளாறால் பல தவறுகள் நடக்கலாம்.அதில் நானும் அங்கமாக இருக்க விரும்பவில்லை' என்றார்.

பின்னர் எம் ஜி ஆரே...வெளியே வந்து தனிக்கட்சி ஆரம்பித்து முதல்வரானது தனிக்கதை.

இப்படி பேட்டிக் கொடுத்த திருலோகசந்தர் எம் ஜி.ஆரின் நண்பர்..அவரை வைத்து சில படங்களை இயக்கியுள்ளார்.

12 comments:

settaikkaran said...

இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்! :-)

settaikkaran said...

எம்.ஜி.ஆரை திருலோக்சந்தர் இயக்கிய ஒரே படம் "அன்பே வா". அப்படித்தான் விக்கி சொல்லுது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சேட்டைக்காரன் said...
எம்.ஜி.ஆரை திருலோக்சந்தர் இயக்கிய ஒரே படம் "அன்பே வா". அப்படித்தான் விக்கி சொல்லுது.//

உண்மை..
ஏ.வி.எம்., படங்கள், பாலாஜி படங்களில்ன் இயக்குநர் இவர்.
எம் ஜி ஆரை வைத்து இயக்கிய ஒரே படம் அன்பே வா தான்..

தீபாவளி வாழ்த்துகள் சேட்டைக்காரன்//சேட்டைக்காரன் said...
எம்.ஜி.ஆரை திருலோக்சந்தர் இயக்கிய ஒரே படம் "அன்பே வா". அப்படித்தான் விக்கி சொல்லுது.//

உண்மை..
ஏ.வி.எம்., படங்கள், பாலாஜி படங்களில்ன் இயக்குநர் இவர்.
எம் ஜி ஆரை வைத்து இயக்கிய ஒரே படம் அன்பே வா தான்..

தீபாவளி வாழ்த்துகள் சேட்டைக்காரன்

SURYAJEEVA said...

//.நீங்கள் மக்களுக்குச் செய்ய வேண்டிய நன்மைகளை செய்ய முடியும்' //

அவர் சொன்னது எல்லாம் கேட்டவரு இதை கேக்காம போயிட்டாரே

ஹேமா said...

எந்தக் காலத்திலும் மறக்கமுடியாத ஒரு நல்ல மனிதர்,தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் !

Anonymous said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஏ.சி. திரிலோகசந்தர், ப. நீலகண்டனிடம் உதவியாளர் இருந்தவர்.ப.நீலகண்டன் எம்.ஜி.யாரின் ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவர். உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ஆகிய எம்ஜியார் இயக்கிய படங்களில் அவருக்கு தனி நன்றி கார்டே போட்டிருக்கிறார் எம்.ஜி.ஆர்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Avargal Unmaigal

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ரெவெரி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி suryajeeva

T.V.ராதாகிருஷ்ணன் said...

தகவலுக்கு நன்றி சுரேஷ் (பழனியிலிருந்து)