Sunday, March 20, 2011

இலவச பேருந்து பயணம் சாத்தியமா?



தி.மு.க., தேர்தல் அறிக்கையில் முதியோர்க்கு இலவச பேருந்து பயணம் என்றுள்ளது.

ஆனால் அது சாத்தியமா?

மேற்கண்ட கேள்வி..ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ சாத்தியமா? என கிண்டலாகச் சிலரால் கேட்கப்பட்டதே..அதைப் போன்ற கேள்வி அல்ல இது..

ஏற்கனவே அரசு பேருந்து கழகங்கள் நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன.

பணி செய்யும் பல்லாயிரக்கணக்கானோருக்கு ஊதியம்..பழைய வண்டிகளுக்கு மாற்ற படவேண்டிய உதிரி பாகங்கள், பராமரிப்பு, புது வண்டிகள் வாங்க வேண்டிய நிலை,எல்லாவற்றிருக்கும் மேலாக டீசல் விலை உயர்வு..என கணக்கிடமுடியா செலவுகள்..தவிர்த்து ஆண்டு ஒன்றுக்கு ஊழியர்களுக்கான போனஸ்..

இப்படிப்பட்ட நிலையில்..புது வண்டிகள் வாங்க உலக வங்கியின் கடன் கிடத்தாலும்..அது..'இலவச பயணத்தை' சுட்டிக் காட்டும்.

ஏற்கனவே மாணவர்களுக்கு இலவச பாஸ் வசதி உள்ளது..

பயணிக்கும் போக்குவரத்து ஊழியர்களுக்கு இலவச பாஸ் வசதி உள்ளது..

காவல்துறையைச் சேர்ந்தவர்கள், போக்குவரத்து காவல்துறை ஊழியர்கள் ஆகியோருக்கு இலவச பாஸ் வசதி உள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பாஸ் வசதி உள்ளது.

கலைஞர்களுக்கு கட்டணச் சலுகை இப்போதே உள்ளது

இப்போது முதியோருக்கும் இலவசப் பயணம் என்றால்..

தவிர்த்து இன்று பெருபாலானோர் அலுவலகம் செல்ல..இரு சக்கர வாகனங்களையும்..பல நிறுவனங்கள் சொந்த செலவில் பேருந்தையும் உபயோகிக்கின்றனர்.பேருந்தை எதிர்பார்க்கும் அலுவலர்கள் குறைந்துக் கொண்டு வருகிறது.

இலவச பயணச் செலவை போக்குவரத்து கழகங்களால் ஈடு செய்ய முடியுமா?

ஏற்கனவே..ஒரு ரூபாய் அரிசியில்..அரசுக்கு கிட்டத்தட்ட 5000 கோடி ரூபாய் செலவாகிறது..ஆனால்..அரிசி அத்தியாவசத் தேவை..ஆகவே அதில் குறை காண முடியாது..

ஆனால்...நம் நாட்டில் முதியோர் ஜனத்தொகை..கணிசமான அளவு அதிகம்..

ஆகவே..அவர்களுக்கு இலவசப் பயணம் என்பதை கணக்கிட்டால்...அரசால்..அந்த இழப்பை..போக்குவத்து ஊழியர் முணுமுணுப்பை மீறி ஈடு கட்ட முடியுமா?

முதியோர்கள் மருத்துவமனை செல்ல நேரிட்டால் இலவசம் என்றாலும்..நடைமுறையில் சாத்தியம்..

இது நடைமுறைப் படுத்தப் பட்டால்...

வரிகள் உயர்த்தப்படும்..அப்பாவி உழைக்கும் மக்கள் தலையில் சுமை கூடும்..

பீட்டரிடமிருந்து திருடி பால் ற்கு கொடு என்னும் ஆங்கில சொலவடைதான் ஞாபகம் வருகிறது

3 comments:

goma said...

எலக்‌ஷன் முடிந்து நாற்காலியில் அமர்ந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற ரீதியில்கூட வாக்குருதிகள் அமையலாம் இல்லையா......
அரசியல்லே இதெல்லாம் சகஜமப்ப்ப்ப்ப்பா

goma said...

தமிழா தமிழா!
தயவு செய்து ,”வாக்குறுதி” என்று திருத்தம் செய்து கொள்ளுங்கள்...

ராஜேஷ், திருச்சி said...

//நாற்காலியில் அமர்ந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற ரீதியில்கூட வாக்குருதிகள் அமையலாம் இல்லையா//

தி மு க வின் வாககுறிதிகள் என்றால் 75% ஆவது நிறைவேறும் என்று பரவலாக மக்களிடம் எண்ணம் உள்ளது .. எனவேதான் சென்ற முறை தி மு க விற்கு கூடுதல் வாக்குகள் விழுந்தது..