Thursday, January 20, 2011

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (21-1-10)





1)கடந்த பத்து ஆண்டுகளில் 70 லட்சம் பேர் விவசாய தொழிலை விட்டு வேறு தொழில்களுக்குச் சென்றுவிட்டதாகவும், கடன் தொல்லையால் இதுவரை இரண்டு லட்சம் விவசாயிகள் இதுவரை தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாகவும் ஒரு தகவல் அறிக்கை கூறுகிறது.

2)ஏர்டெல்,வோடாஃபோன்,ஐடியா,ஏர்செல்,வீடியோகான்,யூனினார் இவற்றில் எந்த நிறுவனத்தின் சேவை பிடிக்காவிட்டாலும் மற்ற ஒன்றின் சேவைக்கு எண்ணை மாற்றாமலேயே மாறிக் கொள்ளும் திட்டம் அமுலுக்கு வந்துள்ளது.ஏர்டெல் தங்கள் வாடிக்கையாளர்களை தங்க வைத்துக் கொள்ள வேண்டிய நேரம் இது.

3)விஜய் நடித்த காவலன் படம் பல சர்ச்சிக்கு நடுவில் நல்ல ரிபோர்ட்டுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.இதனிடையே..'என் கேரியரை பாழ்படுத்த வேண்டும் என சில வேண்டாத சக்திகள் சதி செய்வது எனக்குத் தெரியும்.அவர்கள் சதியை என் ரசிகர்கள் துணையுடன் முறியடிப்பேன்' என்றுள்ளார் விஜய்.

4) எம்.ஜி.ஆர்., தி.மு.க., வில் இருந்த போது ஒரு சமயம்..'காமராஜர் என் தலைவர்..' என்றார்.அப்போது வெளியான அவரது 'என் கடமை' என்ற படத்திற்கு வேண்டாத தொல்லையெல்லாம் கொடுத்து..ஒரு நல்ல படத்தை தோல்வி படமாக்கினர்.பின்னர் எம்.ஜி.ஆர்., 'காமராஜர் என் தலைவர்..அண்ணா என வழிகாட்டி' என்று சொன்னார்.

5)2050ஆம் ஆண்டு வாக்கில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிவிட்டு விட்டு வாங்கும் சக்தியின் அடிப்படையில் உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவாகும் சாத்தியங்கள் உள்ளதாகவும்..சீனாவையே முந்தக் கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

6)வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை போட்டவர்களின் பட்டியலை வெளியிட முடியாது என்று பிரதமர் மன் மோகன் சிங் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.இது செய்தி..(ஆனால் ..வெளியிடுவோம் என்று சொல்லியிருந்தால் தான் அது செய்தி என்கிறோம் நாம்)

7)அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே மீது போர் குற்றம் தொடர்பான விசாரணையை தொடங்குமாறு ஒபாமா அரசை சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

8)பாரதியார் பாடலில்..'காவிரி,தென்பெண்ணை,பாலாறு தமிழ் கண்ட தொரு வையை,பொருநை நதி என்கிறார்,தமிழகத்தில் பொருநை நதி எது தெரியுமா? நெல்லையை வளமாக்கும் தாமிரபருணி தான் பொருநை என அழைக்கப்படுகிறது.

9)மத்திய அமைச்சரை விரிவாக்கத்தில் தி.மு.க., அமைச்சர்கள் இல்லை.(ஒரு வேளை..தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பின் தமிழக ஆட்சியில் பங்குக் கொடுத்தால்..மே மாதம் மைய அரசு விரிவாக்கத்தில் தி.மு.க., அமைச்சர் இடம் பெறக்கூடும்)

12 comments:

தமிழ் உதயம் said...

2050ல் இந்தியா வாங்கும் சக்தியில் மிக பெரிய பொருளாதார நாடாக விளங்கும் என்று சொல்வது வீண் பெருமைக்கு அல்லது மிகைப்படுத்த விரும்பி சொல்வது. 2020ல் இந்தியா வல்லரசாகும் என்றார்களே. அதற்கான சாத்தியங்கள் இப்போது தெரிகிறதா.

bandhu said...

//2050ஆம் ஆண்டு வாக்கில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிவிட்டு விட்டு வாங்கும் சக்தியின் அடிப்படையில் உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவாகும் சாத்தியங்கள் உள்ளதாகவும்..சீனாவையே முந்தக் கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.//
இந்த ஆய்வறிக்கையை எழுதியவர் டாஸ்மார்க்கிலிருந்து வந்தவுடன் இந்த அறிக்கையை எழுதியிருக்க வேண்டும். முதலில் மக்கள் அடிப்படை வசதியுடன் வாழ முடிகிறதா என்று பாருங்கள்.. அமெரிக்காவை அப்புறம் முந்தலாம்..

Chitra said...

பாரதியார் பாடலில்..'காவிரி,தென்பெண்ணை,பாலாறு தமிழ் கண்ட தொரு வையை,பொருநை நதி என்கிறார்,தமிழகத்தில் பொருநை நதி எது தெரியுமா? நெல்லையை வளமாக்கும் தாமிரபருணி தான் பொருநை என அழைக்கப்படுகிறது.


....எங்க ஊரு செய்தி - எப்போ வாசித்தாலும் இனிமைதான்.

Unknown said...

இந்தியா 2050 ல் ஊழலில் வேண்டுமானால் முதல் இடத்தை பிடிக்கும் ...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தமிழ் உதயம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி bandhu

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கே.ஆர்.பி.செந்தில்

ஜோதிஜி said...

முதல் செய்தியை தேங்காய் போல நம்முடைய அரசியல் வியாதிகள் தலையில் உடைத்து 2050 நோக்கி நடைபோடுவோம்.

ஈரோடு கதிர் said...

||70 லட்சம் பேர் விவசாய தொழிலை விட்டு வேறு தொழில்களுக்குச் சென்றுவிட்டதாகவும்||

இதைத்தானே தாரை வார்க்கும் அரசாங்கம் எதிர்பார்க்கிறது!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஜோதிஜி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஈரோடு கதிர்