Wednesday, December 8, 2010

வை.கோ., சிந்திப்பாரா...

திராவிடக் கழகத்திலிருந்து..திராவிட முன்னேற்றக் கழகம் உருவானபின்..அது பலமுறை உடைந்துள்ளது.

இருந்தாலும் குறிப்பிட்டு சொல்லும்படியானது...அண்ணாவின் நெருங்கிய நண்பர் ஈ.வி.கே.சம்பத் பிரிந்து தமிழ் தேசியக் கட்சியை உருவாக்கினார்.ஆனாலும்...அக் கட்சி ஆரம்பித்த போது தென்பட்ட சிறு செல்வாக்கை நாள் பட நாள் பட இழந்து அழிந்தது.

அடுத்ததாக..கழகத்தின் பொருளாளராய் இருந்த எம்.ஜி.ஆர்., கணக்குக் கேட்கப் போக (எப்போதும் கலைஞருக்கு கணக்குத் தான் பிரச்னையாய் உள்ளது), அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப் பட்டார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (பின்னர் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமானது)பிறந்தது..இந்தமுறை தி.மு.க., பெரும்பான்மையாக உடைந்தது எனலாம்..பின் அடுத்துவந்த தேர்தல்களில் எம்.ஜி.ஆர்., வெற்றி பெற்றார்.திராவிட முன்னேற்ற கழகம், கலைஞர் தலைமையில் எவ்வளவோ முயன்றும் மீண்டும் ஆட்சிக்கு வர இயலவில்லை.உடல்நிலை சரியில்லாமல், உண்மையில் படுத்துக் கொண்டே..ஜெயித்த..ஏன்...ஆட்சியைப் பிடித்த ஒரே தலைவர் அவர்தான் எனலாம்.

பின்னர் எம்.ஜி.ஆர்., மறைவிற்கு பின் அவரது கட்சி ஜானகி அணி,ஜெயலலிதா அணி எனப் பிரிந்ததால் சட்டசபைத் தேர்தலில் வெல்ல இயலவில்லை

பதவியில் இல்லாத போதும்..இடர் பல வந்த போதும்..தி.மு.க., வைக் கட்டி காத்த கலைஞர் பாராட்டுக்குரியவர்.

எம்.ஜி.ஆர்., மறைவிற்குப் பின் சரியான ராஜதந்திரிகள் இல்லாத நிலையில்..கலைஞரின் கரம் ஓங்கியது.மீண்டும் காங்கிரஸ் ஆட்சி உருவாகும் நிலை ஏற்பட்டபோது..மூப்பனார் அதை தவறவிட்டார்.

அ.இ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., மறைவிற்குப் பின் இரு அணிகளாகப் பிரிந்தாலும்..தேர்தலுக்குப் பின் 'ஜெ' தலைமையில் ஒரே கழகமானது.இதற்கிடையே பல முறை அதிலிருந்து பிரிந்து சில தலைவர்கள் கட்சிகள் ஆரம்பித்த போதும்..அவை ஆரம்பித்த வேகத்திலேயே..தொண்டர்கள் ஆதரவு இல்லாமல் காணாமல் போனது.அவற்றில் சில..நெடுஞ்செழியன்,எஸ்.டி.சோமசுந்தரம்,கண்ணப்பன்,திருநாவுக்கரசு ஆகியோர் ஆரம்பித்த கட்சிகள்.

தி.மு.க.விலிருந்து..சில காரணங்களைச் சுட்டிக் காட்டி வை.கோ., வெளியேற்றப் பட..வை.கோ., வின் ஆதரவாளர்களும்,வை.கோ., வின் திறமை அறிந்தவர்களும் ..கண்டிப்பாக இது தி.மு.க., வின் பெரிய பிளவாய் இருக்கும் என எண்ணினார்கள்..

ஆனால்..நினைத்தது நடைபெறவில்லை என்பது வருத்தமே..

மீண்டும் வை.கோ., ஏதேனும் ஒரு திராவிடக் கட்சியுடன் கூட்டு வைத்தால் தான் சில இடங்களிலாவது வெல்ல முடியும் என்ற நிலையே இன்றும்..

18 ஆண்டுகள் தொடர்ந்து ராஜ்யசபா அங்கத்தினர் ஆக இருந்த இவர் பேச்சு பல மத்திய தலைவர்களை வியக்கவைத்தது..ஆனாலும் அவை விழலுக்கு இரைத்த நீரானது..

வை.கோ., வை நம்பிச் சென்ற பலர் விலகி மீண்டும் தி.மு.க., அ.தி.மு.க., வில் ஐக்கியமாயினர்.

செஞ்சி ராமசந்திரன்,கணேசன்,கண்ணப்பன் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்..

ஆனாலும்..கட்சி நடத்த தனது சொந்த கட்டிடத்தையேக் கொடுத்த கலைப்புலி தாணு இப்போது ம.தி.மு.க.,விலிருந்து விலகியுள்ளார்.

அதற்குக் காரணம்..தனது இளைய மகன் திருமணத்திற்கு கலைஞருக்கு அழைப்பிதழ் கொடுத்தது வைகோ விற்கு பிடிக்கவில்லை என்பது..

இது உண்மையான காரணமாய் இருக்க முடியாது என்றே தோன்றுகிறது.ஏனெனில்..மங்கல நிகழ்ச்சிகள்,ஒருவரின் மறைவு ஆகியவற்றில் இவர்தான் வர வேண்டும்..அவர்தான் வரவேண்டும் என்று எதர்பார்க்க முடியாது.

அப்படிப்பார்த்தால்..மாறன் மறைந்த போது.. வை.கோ.,கலைஞரை கட்டிப் பிடித்து அழுததும் தவறு...

தலைவன் தவறு செய்யலாம்..ஆனால்..மற்றவர்கள் ஏதேனும் செய்தாலும்..அதில் தவறைக் கண்டுபிடிக்கலாமா?

அதிலும் பண்பட்ட வை.கோ.அப்படிச் செய்வார் எனத் தோன்றவில்லை.

வேறு என்ன காரணம்


வை.கோ.,வின் கூடாரம் ஏன் காலியாகிக் கொண்டு இருக்கிறது..

இந்நிலை நீடித்தால்..ம.தி.மு.க., அழிவை நோக்கிப் போவதைத் தவிர்க்க முடியாது..

வை.கோ., சிந்திப்பாரா..

19 comments:

Anonymous said...

VAIKO- Kaali perungaaya dabba!- Vaasanai irukkum! anaa..,

MGR- paduthukkonde jeyikka villai- Indira Gandhi 1984 October-30 maranam- anuthaaba alayil jeyithaar.-ithu thaan Nijam!

Unknown said...

அவர் அரசியல விட்டு ஒதுங்கிடுவாருன்னு நினைக்கிறேன் ...

ரஹீம் கஸ்ஸாலி said...

படுத்துக்கொண்டு ஜெயித்தவர் எம்.ஜி.ஆர் அல்ல....காமராஜர்தான்.
எம்.ஜி.ஆர்- நோய்வாய்பட்டு படுத்திருக்குபோது, இந்திரா காந்தி இறந்த சமயத்தில் பொது தேர்தல் வந்தது. அப்போது சாவுக்கு ஒரு ஓட்டு, நோவுக்கு ஒரு ஓட்டு என்று பிரச்சாரம் செய்தே மக்களிடம் அனுதாபம் பெற்றுத்தான் ஜெயித்தார்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ரஹீம் கஸாலி said...
படுத்துக்கொண்டு ஜெயித்தவர் எம்.ஜி.ஆர் அல்ல....காமராஜர்தான்.
எம்.ஜி.ஆர்- நோய்வாய்பட்டு படுத்திருக்குபோது, இந்திரா காந்தி இறந்த சமயத்தில் பொது தேர்தல் வந்தது. அப்போது சாவுக்கு ஒரு ஓட்டு, நோவுக்கு ஒரு ஓட்டு என்று பிரச்சாரம் செய்தே மக்களிடம் அனுதாபம் பெற்றுத்தான் ஜெயித்தார்கள்.//



காமராஜர் படுத்துக் கொண்டே ஜெயிப்பேன் என்றார்..ஆனால் தி.மு.க. வேட்பாளர் மாணவர் தலைவர் ஸ்ரீனிவாசனிடம் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்

Thenammai Lakshmanan said...

ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க.. டி வி ஆர்

pichaikaaran said...

வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு, தனக்கென ஒரு பெயரை வரலாற்றில் ஏற்கனவே பதிவு செய்து விட்டார் அவர்.

Thamira said...

இப்போதான் அழிவை நோக்கி போகுதுங்கிறீங்களா? போங்க சார்.. உங்களோட ஒரே விளையாட்டுதான். :-))

vasu balaji said...

/வை.கோ.,வின் கூடாரம் ஏன் காலியாகிக் கொண்டு இருக்கிறது../

காஸ்ட் ஆஃப் லிவிங் ஜாஸ்தியாயிடுச்சே:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Sai Gokula Krishna said...
VAIKO- Kaali perungaaya dabba!- Vaasanai irukkum! anaa..,

MGR- paduthukkonde jeyikka villai- Indira Gandhi 1984 October-30 maranam- anuthaaba alayil jeyithaar.-ithu thaan Nijam//


எது எப்படியோ..அமெரிக்க மருத்துவ மனையில் படுத்தபடியே ஜெயித்தவர் எம்.ஜி.ஆர்., ஒருவரே

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
அவர் அரசியல விட்டு ஒதுங்கிடுவாருன்னு நினைக்கிறேன் //

ஆச்சரியப்படுவதற்கு இல்லை

Philosophy Prabhakaran said...

வைக்கோவா யாரது அப்படி ஒருவர் இருக்கிறாரா...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//தேனம்மை லெக்ஷ்மணன் said...
ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க.. டி வி ஆர்//

நன்றி தேனம்மை லெக்ஷ்மணன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பார்வையாளன் said...
வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு, தனக்கென ஒரு பெயரை வரலாற்றில் ஏற்கனவே பதிவு செய்து விட்டார் அவர்//

அப்படியிருந்தவர் நிலை ஏன் இப்படி என்ற ஆதங்கமே இப்பதிவு

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
இப்போதான் அழிவை நோக்கி போகுதுங்கிறீங்களா? போங்க சார்.. உங்களோட ஒரே விளையாட்டுதான். :-))//

போங்க ஆதி.. உங்களோட ஒரே விளையாட்டுதான். :-))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
/வை.கோ.,வின் கூடாரம் ஏன் காலியாகிக் கொண்டு இருக்கிறது../

காஸ்ட் ஆஃப் லிவிங் ஜாஸ்தியாயிடுச்சே:)//

அம்மா..அதற்கு ஏதாவது போராட்டம் பண்றாங்களா என்ன

T.V.ராதாகிருஷ்ணன் said...

//philosophy prabhakaran said...
வைக்கோவா யாரது அப்படி ஒருவர் இருக்கிறாரா...//

!!!!??? :))

வசந்தத்தின் தூதுவன் said...

//பதவியில் இல்லாத போதும்..இடர் பல வந்த போதும்..தி.மு.க., வைக் கட்டி காத்த கலைஞர் பாராட்டுக்குரியவர்.//

பதிமூன்று ஆண்டுகள் கருணாநிதி பதவியில் இல்லையே தவிர, அதற்கு முன் இரண்டு முறை முதல்வர் பதவி வகித்தவர்.சர்க்காரியா கமிசன் போன்றவற்றால் அறிவியல் ரீதியில் ஊழல் செய்வதில் வல்லவர் எனப் பெயர் பெற்றவர்.அப்படிப் பட்ட ஒருவர் கட்சியைக் காப்பாற்றியதைப் பாராட்டும் நீங்கள் பதினேழு ஆண்டுகள் கட்சியைக் கட்டிக் காப்பாற்றும் வைகோவைப் பாராட்ட முன் வராதது ஏன்?

// வை.கோ., ஏதேனும் ஒரு திராவிடக் கட்சியுடன் கூட்டு வைத்தால் தான் சில இடங்களிலாவது வெல்ல முடியும் என்ற நிலையே இன்றும்..//

எந்தத் கட்சிக்கு மற்ற கட்சிகளுடன் கூட்டணியின்றி தேர்தலை சந்திக்கும் துணிவுள்ளது?

//செஞ்சி ராமசந்திரன்,கணேசன்,கண்ணப்பன் //

இவர்கள் மட்டுமன்றி தாணு குறிப்பிட்ட எட்டு பேரும் ஒவ்வொருவராய் சென்றார்களே தவிர அவர்களுடன் ஒரு வட்டச் செயலாளரையாவது அழைத்துச் சென்றார்களா? எட்டு பேர் போனால் கட்சி போச்சு என்பது எந்த அளவுக்கு புத்திசாலித்தனம்?

//கட்சி நடத்த தனது சொந்த கட்டிடத்தையேக் கொடுத்த கலைப்புலி தாணு இப்போது ம.தி.மு.க.,விலிருந்து விலகியுள்ளார்.//

தவறான தகவல். நீங்கள் உங்கள் தாய் வீட்டை விட்டு வேறு வீடு பார்க்கும் போது உங்களுக்கு வீடு வாடகைக்கு தர முன்வந்த நபர் எந்த அள்வுக்கு உங்கள் வாழ்வில் முக்கியமானவர்? கருணாநிதி ஒருநாள் உங்கள் வீட்டில் உணவருந்த சம்மதித்து உணவருந்தினால் நீங்கள் அவர் உணவுக்கு வழியின்றி உங்கள் வீட்டில் வந்து உணவருந்தினார் என்று பரப்புரை செய்வீர்களா? அல்லது பெருமைப் படுவீர்களா? தாணுவும் தன் வீட்டை ம.தி.மு.க.வுக்கு ஆரம்பக் காலத்தில் வாடகைக்கு தந்து மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் அந்த பெருமையைத் தட்டிக் கொண்டு போனார்.அந்த வாடகைக் கட்டிடம் மயிலாப்பூரில் உள்ளது. பின்னர் ம.தி.மு.க தன் சொந்த பணத்தில் எழும்பூரில் இடம் வாங்கி தாயகம் கட்டிக் கொண்டு விட்டது. தாயகம் இருக்கும் இடத்துக்கும் தாணுவுக்கும் தொடர்பில்லை.

வசந்தத்தின் தூதுவன் said...

திராவிட இயக்கத்தின் கடைசிக் கையிருப்பு வைகோ அவர்கள் தான். தமிழக அரசியலில் ம.தி.மு.க. வுக்கும், வைகோவுக்கும் உள்ள இடத்தை யாராலும் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது. முதல்வராக இருப்பவரும், முதல்வராக வர இருப்பவரும் மட்டுமே கட்சி நடத்தவேண்டும் என்று சொல்ல இது அமெரிக்க ஜனநாயகம் அல்ல. ம.தி.மு.க.வும் வைகோவும் தங்கள் சக்திக்கேற்ற வகையில் தமிழுக்கும் தமிழர்களுக்கும் தொண்டாற்றுவார்கள். கால சூழ்நிலைகளுக்கேற்ற வகையில் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவார்கள். காலம் திரும்பும். வைகோவின் வெற்றியை வரலாறு சொல்லும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வைகோ மீது பெரு மதிப்பு எனக்கும் உண்டு..ஆனால் பல நேரங்களில் அவர் எடுக்கும் முடிவு சற்று வேதனையைத் தான் ஏற்படுத்துகிறது..ஆகவே தான் இந்த இடுகை பொதிகைச் செல்வன்