Thursday, November 25, 2010

பீகார் வாக்காளார்கள் நம்மை ஏமாற்றிவிட்டனர்

காங்கிரஸ் கட்சிக்கு இது போதாத காலம்..

சசி தரூர்..ஐ.பி.எல்., ஊழல்
கல்மாடி காமன்வெல்த் ஊழல்.
ஆதர்ஷ் ஹவுசிங் ஊழல்
உச்ச நீதி மன்றத்தின் கண்டனங்கள்
ஸ்பெக்ட்ரம் ஊழலில் தாமதம்

என தலைவலிக்கு மேல் தலைவலியாய் வந்துக் கொண்டிருக்கும் வேளையில்..மகுடமாக பீகார் சட்டசபைத் தேர்தலில் நான்கே இடத்தில் வெற்றி.
ராகுலின் அதீத நம்பிக்கை தவிடுபொடியானது.
காங்கிரஸின் இந்தத் தோல்வியால் தி.மு.க., வட்டாரம் சந்தோசத்தில் இருக்கும்.
இளங்கோவன் வாயடைத்துக் கிடப்பார்.தங்கபாலுவின் சோனியா துதி குறையும்.இளைஞர் காங்கிரஸ் அடங்கி இருப்பர்.
பீகாரில் குறிப்பிட்ட அளவு வெற்றி பெற்றிருந்தாலும்..தமிழகத்தில் இவர்களை கையில் பிடித்திருக்க முடியாது.
சட்டசபைத் தேர்தலில் அதிக இடம்,கூட்டணி ஆட்சி,அமைச்சர் பதவி எல்லாம் பகல் கனவாகிவிட்டது.
பீகாரில் சற்று வெற்றி பெற்று..தமிழகத்திலும் கூட்டணியில் சேரக் கட்சியின்றி..தனித்து நின்று...ம்ம்..ம்ம்..அதைப் பார்க்க ஆவலாய் இருந்த நமக்கு..அப்படிப்பட்ட ஒரு நிலையை உருவாக்கித் தராத பீகார் வாக்காளர்கள் மீது சற்று கோபமே வருகிறது.

15 comments:

Chitra said...

பீகாரில் சற்று வெற்றி பெற்று..தமிழகத்திலும் கூட்டணியில் சேரக் கட்சியின்றி..தனித்து நின்று...ம்ம்..ம்ம்..அதைப் பார்க்க ஆவலாய் இருந்த நமக்கு..அப்படிப்பட்ட ஒரு நிலையை உருவாக்கித் தராத பீகார் வாக்காளர்கள் மீது சற்று கோபமே வருகிறது.


..... ஹி,ஹி,ஹி,ஹி.... பாவம் தான்!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பதறிப்போய் வந்தேன்..

ஹா..ஹா.. குசும்புண்ணே...

எல் கே said...

//ர்.தங்கபாலுவின் சோனியா துதி குறையும்//

வாய்ப்பே இல்லை ...

Unknown said...

//.தமிழகத்திலும் கூட்டணியில் சேரக் கட்சியின்றி//

மத்தியில் ஆட்சியில் உள்ள தேசிய கட்சிக்கு இப்படி ஒரு நிலை வர வாய்ப்பில்லை. நான் நீ என்றுதான் போட்டியிருக்கும். திமுக இல்லாவிட்டால் அதிமுக இருக்கிறது.

vasu balaji said...

/பீகாரில் சற்று வெற்றி பெற்று../

பீகார் பாவம் பீகார் பாவம்:))

ராஜ நடராஜன் said...

//பீகாரில் குறிப்பிட்ட அளவு வெற்றி பெற்றிருந்தாலும்..தமிழகத்தில் இவர்களை கையில் பிடித்திருக்க முடியாது.//

மோசமான ஆளுக பீகார் மக்கள்.கிளைமாக்ஸா கடைசில கொண்டு வந்து நிறுத்தினீங்களே தலைப்பை:)

Unknown said...

சிறு பிள்ளை இட்ட வெள்ளமையாய் ...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
Chitra
பட்டாபட்டி..
LK
நண்டு @நொரண்டு -ஈரோடு

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
ananth
Bala
ராஜ நடராஜன்
செந்தில்

Rex said...

Just Curious to know...காங்கிரஸுடன் கூட்டணி வைக்காமல் தேர்தலை சந்திக்க கழகங்கள் தயராக இருக்கின்றனவா? I mean DMK or ADMK.

சங்கரியின் செய்திகள்.. said...

ம்ம் ...நடத்துங்க......

vasan said...

பீகார் ம‌க்க‌ள் நல்ல‌வ‌ர்கள், உழைப்பாளிக‌ள். நல்ல‌வ‌ர்க‌ளை அடையாளம் கண்டிருக்கிறார்க‌ள்.
சார‌ய‌க்க‌டை வ‌ருமான‌த்தில் ஆட்சி ந‌டக்கும்‌ த‌மிழ‌கத்தில் இதை எதிர் பார்க்காதீர்க‌ள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Rex said...
Just Curious to know...காங்கிரஸுடன் கூட்டணி வைக்காமல் தேர்தலை சந்திக்க கழகங்கள் தயராக இருக்கின்றனவா? I mean DMK or ADMK.//

எனக்கும் அதுதாங்க ஆசை..எந்த அணியிலும் அவர்களைச் சேர்க்காமால் ..தமிழகத்தில் அவர்கள் நிலையை உணரவைக்க வேண்டும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சங்கரியின் செய்திகள்.. said...
ம்ம் ...நடத்துங்க......

//

நன்றி சங்கரியின் செய்திகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//vasan said...
பீகார் ம‌க்க‌ள் நல்ல‌வ‌ர்கள், உழைப்பாளிக‌ள். நல்ல‌வ‌ர்க‌ளை அடையாளம் கண்டிருக்கிறார்க‌ள்.
சார‌ய‌க்க‌டை வ‌ருமான‌த்தில் ஆட்சி ந‌டக்கும்‌ த‌மிழ‌கத்தில் இதை எதிர் பார்க்காதீர்க‌ள்.//

உண்மைதான்..