Sunday, November 14, 2010

வாலிப கவிஞர் வாலியின் காதல் கவிதை...

20-ம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் என்று கவிஞர் வாலி புகழாரம் சூட்டினார்.

கவிஞர் வாலி எழுதிய திரையிசைப் பாடல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் பாடல்களின் தொகுப்பான "வாலி - 1000' என்ற நூலின் வெளியீட்டு விழா, கவிஞர் வாலியின் 80-வது பிறந்தநாள் விழா ஆகியவை சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
அதை ஒட்டி வாலி  பற்றி எனது ஒரு இடுகை (மீள் பதிவு )

வாலி...திரைப்பட பாடலாசிரியர்..கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக அசைக்க முடியா சக்தியாய் இருக்கிறார்.அன்று..கண்ணதாசனையும் சந்தித்தவர்..இன்றைய இளம் பாடலாசிரியர்களுக்கும் சிம்ம சொப்பனமாய் இருப்பவர்.

அவர்..ஆரம்பகால ..காதல் கடிதம் எப்படி இருந்தது தெரியுமா?

பேசும் தெய்வம் படத்தில் வந்த அந்த பாடல்...

நான் அனுப்புவது கடிதம் அல்ல
உள்ளம்
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல
எண்ணம்
உன் உள்ளமதை கொள்ளைக் கொள்ள

நிலவுக்கு வான் எழுதும் கடிதம்
நீருக்கு மீன் எழுதும் கடிதம்
மலருக்கு தேன் எழுதும் கடிதம்
மங்கைக்கு நான் எழுதும் கடிதம்

எழுதி அனுப்புவது கடிதம் அல்ல
உள்ளம்
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல
எண்ணம்
உன் உள்ளமதை கொள்ளைக் கொள்ள

எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம்
ஏட்டளவில் சொன்னதெல்லாம் கொஞ்சம்
என் மனமோ உன்னிடத்தில் தஞ்சம்
உன் மனமோ நான் துயிலும் மஞ்சம்


என்னவொரு...எளிமையான அருமையான காதல் கடிதம்...

அவரின் துரதிருஷ்டம்..அந்நாளில் இவரின் பல பாடல்கள்..கண்ணதாசன் எழுதியவை என மக்கள் நினைத்ததுதான்..அப்படி ஒரு பாடல்
இருமலர்கள் படத்தில் வரும்..'மாதவி பொன்மயிலாள்"

பட்டுக்கோட்டையாரும்...இவர் எழுத்தில் ஒளிந்துக் கொண்டிருந்தார் என நிரூபிக்கும் பாடல்..;நான் ஆணையிட்டால்.

அதில் வரும் வரிகள்

ஒரு தவறு செய்தால்-அதை
தெரிந்து செய்தால்-அவன்
தேவன் என்றாலும் விடமாட்டேன்-உடல்
உழைக்க செய்வேன் அதில்
பிழைக்கச் செய்வேன் அவர்
உரிமைப் பொருள்களைத்
தொடமாட்டேன்.

வாலி...ஏற்ற பெயர்.அவர் எதிராளியின் பலம் கூட அவரைப் பார்த்தால்..பாதி அவருக்கே போய்விடும்..இது நிதர்சனமான உணமை

14 comments:

மாணவன் said...

"வாலி...ஏற்ற பெயர்.அவர் எதிராளியின் பலம் கூட அவரைப் பார்த்தால்..பாதி அவருக்கே போய்விடும்..இது நிதர்சனமான உணமை"

அருமையாகச் சொன்னீர்கள்

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

சிவராம்குமார் said...

உண்மைதான்!

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு. நன்றி.

Prasanna said...

வால்+ஈ :)

பாலாஜி சங்கர் said...

ராமானுஜ காவியம் , பாண்டவர் பூமி இன்னபிற கவிதை தொகுப்பும் எழுதி உள்ளார்

roshaniee said...

அருமையான பதிவு

ஹேமா said...

வாலி....எப்போதும் யாரையாவது காதலிச்சிட்டே இருப்பாரோ !

Unknown said...

வாலி மட்டும் இல்லையென்றால் எம்.ஜி.ஆர் இவ்வளவு உயரத்தை தொட்டிருக்க முடியாது ,,

vasu balaji said...

சுபர்ப் சார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி

nellai அண்ணாச்சி said...

வாலி வயதில் 80 மனதில் 18

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி nellai அண்ணாச்சி

பாத்திமா ஜொஹ்ரா said...

எல்லோருக்கும் எங்கள் இதயம் கனிந்த ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

S.T.Seelan (S.Thanigaseelan) said...

நல்ல படைப்பு நண்பரே....

அன்பின் சீலன்...
http://vellisaram.blogspot.com/