Thursday, November 4, 2010

பயனில சொல்லற்க

நாம் சிந்திக்கத் தெரிந்தவர்கள்..
என்ன ஒன்று..சிந்தனை என்பது நபருக்கு நபர் மாறுபடும்.
எனக்கு சரி என நான் நினைப்பது..மற்றவருக்குத் தவறாக இருக்கக் கூடும்.அதனால் அவர் சிந்திக்கத் தெரியாதவர்..நானே புத்திசாலி என்று எண்ணக்கூடாது.
அவர் நினைப்பது..நான் நினைப்பதற்கு மாறுபாடாய் உள்ளது..மனிதப் பிறவியா இவர் என்ற எண்ணம் இருந்தால்..நீங்கள் மட்டுமே உலகில் சிந்திக்கத் தெர்ந்தவர், நீங்கள் மட்டுமே அறிவாளி என எண்ணுவதாக அமையும்.
நாம் எதைப் பேசினாலும்..அளந்து, மற்றவர் புண்பட பேசக்கூடாது.
அதே போல பயனற்ற வார்த்தைகளையும் பேசக் கூடாது..
அப்படி பயனற்ற பேச்சைப் பேசுபவனைத் தான் மனிதன் என்று சொல்வதைவிட பதர் என்று சொல்லலாம் என்கிறார் வள்ளுவர்.

பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி எனல்

ஆகவே நாம் கூடியவரை மற்றவர் மனம் புண்படாது நம் கருத்தைச் சொல்ல வேண்டும்.அதை ஏற்பதும், ஏற்காததும் கேட்பவரின் விருப்பம்.பயனுள்ள சொற்களைக் கூறினால் அனைவரும் விரும்பி ஏற்பர்

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்

பயனளிக்காத சொற்களை விடுத்து மனதில் பதிந்து பயனளிக்கக்கூடிய சொற்களையே கூற வேண்டும்.

5 comments:

Paleo God said...

Happy Diwali Sir. :))

T.V.ராதாகிருஷ்ணன் said...

nanRi shankar

Anisha Yunus said...

சார் அதுல "பயனுடைய"ன்ற இடத்தில் "பயனுள'ன்னு வரணும். நல்ல பதிவு.. பகிர்ந்தமைக்கு நன்றி :)

vasu balaji said...

இனிய தீபாவளி வாழ்த்துகள் சார்:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துகள்