Sunday, September 19, 2010

தமிழுக்கு கொம்பு முளைக்க வைத்தவர்..கொஞ்சி விளையாடும் தமிழ்-22

தமிழில் 'எ' கரம்.'ஒ' கரம் உயிரெழுத்துக்களின் மேலும், உயிர்மெய் எழுத்துக்களின் மீதும் குறில் ஓசைக்குப் புள்ளி வைத்துக் கொண்டிருந்தார்கள்.அவைகளின் நெடில் ஓசைஎக்கு புள்ளி வைக்காமல் விட்டார்கள்.

உதாரணமாக..கெ,பெ,செ இவைகள் மீது புள்ளி வைத்தால் குற்றெழுத்துக்கள்

கெ,பெ,செ எனப் புள்ளி வைக்காமல் எழுதினால் நெட்டெழுத்துக்கள்..என உச்சரிக்கப் பட்டன.

தொல்காப்பியக் காலத்திலிருந்து வழங்கி வந்த இந்த முறையை 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வீரமாமுனிவர் மாற்றி அமைத்தார்.

நெட்டெழுத்துக் கொம்பை மேலே சுழித்தெழுதும் வழக்கத்தை உண்டாக்கினார்..(கே,பே,சே)

இந்த அருமையான சீர்திருத்தம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது.

இந்த வீரமாமுனிவர் தான் தேம்பாவணி எழுதியவர்..தவிர்த்து, இன்று வரை பிரபலமாயுள்ள பரமார்த்தகுரு கதைகளை எழுதியவர் ஆவார்.

அதுபோல..தேவையில்லாத கொம்பை நீக்கியவர் தந்தை பெரியார் ஆவார்..

னை, லை,ணை ஆகியவை முன்னர் கொம்பு முளைத்து எழுதப்பட்டவை. அவற்றை மாற்றி..மற்ற எழுத்துகள் போல (கை,சை) எழுத்தில் கொண்டுவந்தார்.

5 comments:

vasu balaji said...

ஆனாலும் அந்த கொம்பு வச்ச னை, லைல்லாம் வசதி. ஆனை படம், பாம்பு படம் போட.

Chitra said...

பகிர்வுக்கு நன்றி.....

வீரமாமுனிவரின் வரலாறு வாசித்து இருக்கிறேன். வாசிக்க வாசிக்க சுவாரசியமாக இருந்தது.

சிநேகிதன் அக்பர் said...

நல்ல பகிர்வு சார்.

சிநேகிதன் அக்பர் said...
This comment has been removed by the author.
T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
பாலா
சித்ரா
அக்பர்