Monday, April 19, 2010

நளினி-பார்வதி அம்மா-சோனியா மற்றும் கலைஞர்

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா..ஒரு வேளை நாடாளுமன்றத்திலும்..நிறைவேறி விட்டால்..பல மாநில சட்டசபைகளும் ஒப்புதல் தெரிவித்து அடுத்த தமிழக சட்டசபை தேர்தலிலேயே அமுலில் வர நேரிடலாம்.

அப்படி நடந்தால் முதலில் மகளிர்களுக்கு வாழ்த்துகள்..கிட்சன் கேபினட் என்பது போல..வென்று வரும் எம்.எல்.ஏ.,க்களின் கணவர்கள் பினாமி எம்.எல்.ஏ.,க்களாக செயல் படாதிருக்கட்டும்.

அப்போது..தமிழகத்தில் 78 இடங்கள் மகளிருக்கு ஒதுக்க நேரிடும்..இதனால் தி.மு.க., மூத்தவர்கள் பலருக்கு தேர்தலில் டிக்கெட் கிடைக்காமல் போகலாம்..அப்படிப்பட்டவர்களுக்கு தஞ்சம் கொடுக்க மேலவை வரப்போகிறதே..ஐயா ஆர்.எம்.வி., பல ஆண்டுகளாக காத்திருக்கிறார்..ஆர்காட்டார்,பேராசிரியர்,வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர் மேலவை உறுப்பினர்கள் ஆகலாம்.

சட்டசபை தேர்தலில்..காங்கிரஸுடன் ஆன கூட்டணியை கலைஞர் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்..காங்கிரஸ் கேட்கும் அளவு சீட் ஒதுக்கப்பட முடியாவிட்டால்..அவர்கள் பலரையும் மேலவை வரவேற்கக் காத்திருக்கும்..

காங்கிரஸுடன் ஆன கூட்டு நிலைத்திருக்க மேலும் வழி..சோனியாவை திருப்தி படுத்த வேண்டும்..

நளினி 19 ஆண்டுகள் சிறையில் கழித்தாயிற்று..அவரை விடுவிக்க மறுத்து தமிழகத் தரப்பில் சொன்ன காரணம்..அவர் சிறையில் இருந்தே பட்டப் படிப்புப் படித்துள்ளார்..மேலும்..அவரை வெளியே விட்டால்..ராயப்பேட்டையில்தான் தங்குவார்..அதன் அருகேதான் யு.எஸ்.,கான்சுலேட் அலுவலகம் உள்ளது....அடடா..எப்படிப்பட்ட காரணம் என நாம் வியந்தாலும்..சோனியா சற்று திருப்தி அடைந்திருப்பார்..இந்திராவின் மருமகளே வா..உனது ஆதரவைத் தா..

அடுத்து..பிரபாகரனின் தாய்..எண்பது வயது மூதாட்டி..சிகிச்சைக்காக வருகிறார்..கணவனையும் சமீபத்தில் இழந்தவர்..பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்..எழுந்து நடமாட முடியாதவர்..கொடுத்த அனுமதி மறுக்கப் பட்டு..வந்த மலேஷிய விமானத்தில் இருந்து இறக்கக் கூடப் படாமல் திருப்பி அனுப்பப் பட்டுள்ளார்..குடியுரிமை அதிகாரிகளால்..இந்த விஷயம் கலைஞருக்கு தெரியாமல் நடந்து இராது..ஏதேதற்கோ..மைய அரசுக்கு கடிதங்கள் எழுதிக் குவிப்பவர்..எம்.பி.க்கள் குழுவை பிரதமரை சந்திக்கச் சொல்பவர் இந்த விஷயத்திலும் தலையிட்டிருக்கலாம்..தலையிடாததன் காராணம்..'சோனியாவே நமஹ..'வாய் இருக்கக்கூடும்.

ஒரு விதத்தில்..அனுமதி மறுத்தது நல்லதற்கே..அனுமதி அளித்திருந்தால்..ஒருவேளை..பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் குண்டு வெடிப்பிற்கு மூதாட்டிக்கு தொடர்பு என்று கூட சொல்லியிருப்பர்..

வெட்கம்..வெட்கம்...

13 comments:

vasu balaji said...

/ஒரு விதத்தில்..அனுமதி மறுத்தது நல்லதற்கே..அனுமதி அளித்திருந்தால்..ஒருவேளை..பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் குண்டு வெடிப்பிற்கு மூதாட்டிக்கு தொடர்பு என்று கூட சொல்லியிருப்பர்../

இது சூப்பர். என்னாஆஆஆஅ அடி:))

பிரபாகர் said...

என்ன சொன்னாலும் திருந்த மாட்டாங்கய்யா! உதுற சங்க உதி வெப்போம்.

பிரபாகர்.

Chitra said...

அவர் கடிதம் எழுதி, போய் சேர்ந்து, பதில் கடிதம் வரும் முன்னே.... விமானம் கிளம்பி போய் விட்டது. இல்லைனா......

நசரேயன் said...

//எனது 'சௌம்யா' குழுவினரின்'மனசேதான் கடவுளடா' என்னும் நாடகம்(என் கதை,வசனம்,இயக்கத்தில்)25-4-10 அன்று மாலை 7 மணிக்கு 'நாரத கான சபா; அரங்கில் நடைபெறுகிறது.நாடகத்திற்கு அன்புடன் அழைக்கிறேன் //

ஐயா டிக்கெட் அனுப்பி வையுங்க வாரேன், சபா டிக்கெட் இல்லை, விமான டிக்கெட்

ஹேமா said...

நடந்து முடிந்த நிகழ்வுக்கு நாங்கள்தான் அலட்டிக்கொள்கிறோம்.
அவர்களுக்கென்ன !

கோவி.கண்ணன் said...

//அப்போது..தமிழகத்தில் 78 இடங்கள் மகளிருக்கு ஒதுக்க நேரிடும்..இதனால் தி.மு.க., மூத்தவர்கள் பலருக்கு தேர்தலில் டிக்கெட் கிடைக்காமல் போகலாம்.//

:)

அம்புட்டு குடும்ப உறுப்பினர்கள் இருக்கிறார்களா ?

அவ்வ்வ்வ்

கோவி.கண்ணன் said...

//இந்த விஷயம் கலைஞருக்கு தெரியாமல் நடந்து இராது..//

நிருபர்: நேற்று நீங்கள் சட்டமன்றத்திற்கு செல்லாததற்கு ஏதேனும் சிறப்பு காரணங்கள் உண்டா ?

கருணாநிதி : நேற்று சட்டமன்றம் திறந்திருந்தது என்று இன்று தினகரன் நாளிதழைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். நேற்று சட்டமன்றம் திறந்திருந்ததாக யாரும் என்னிடம் சொல்லவே இல்லை.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

டும்..டும்..டும்..
அடிங்க சார்..

//ஒருவேளை..பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் குண்டு வெடிப்பிற்கு மூதாட்டிக்கு தொடர்பு என்று கூட சொல்லியிருப்பர்..//

சொன்னாலும் சொல்லுவானுக..

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்திற்கும்..பரிந்துரை வாக்களித்தவர்களுக்கும் நன்றி

வரதராஜலு .பூ said...

வர வர இந்த கிழவன் அட்டகாசம் தாங்கவே முடியாத அளவுக்கு போய்கொண்டிருக்கிறது. என்றைக்குதான் நமக்கு விடியுமோ தெரியவில்லை. பாவம் அந்த 80 வயது மூதாட்டி

//ஒரு விதத்தில்..அனுமதி மறுத்தது நல்லதற்கே..அனுமதி அளித்திருந்தால்..ஒருவேளை..பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் குண்டு வெடிப்பிற்கு மூதாட்டிக்கு தொடர்பு என்று கூட சொல்லியிருப்பர்..///

என்னாதான் சொல்லுங்க, ஒரு மயிறும் உரைக்காது இந்தாளுக்கு. கேட்டாக்கா நான் அரசியல்ல இதைவிட அதிகாமாவே கேட்டுருக்கேன்னு ஒரு வசனம் வரும்.

வெட்கம் வெட்கம் :(

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வரதராஜலு .பூ

"உழவன்" "Uzhavan" said...

அடுத்ததாக இங்கு திறக்கப்படும் பாலத்துக்கு சோனியாவின் பெயர் சூட்டப்படலாம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//உழவன்" "Uzhavan" said...
அடுத்ததாக இங்கு திறக்கப்படும் பாலத்துக்கு சோனியாவின் பெயர்//

:))))