Tuesday, October 27, 2009

Orphan ஆங்கிலப் படம்

தங்களின் மூன்றாவது குழந்தை இறந்தே பிறந்ததால்..9 வயது எஸ்தர் என்னும் ரஷ்யன் பெண்ணை தத்தெடுக்க முடிவெடுக்கின்றனர் அந்த தம்பதிகள்.ஆனால் அப்பெண் வீட்டிற்கு வருவதை மகன் விரும்பவில்லை.ஆனால்..வாய் பேசமுடியாத ,காது கேட்காத இளைய மகள் விரும்புகிறாள்.

ஆனால் எஸ்தர் பள்ளியில் யாருடனும் ஒட்டுவதில்லை.அவளால் உடன் படிக்கும் பெண் விழுந்து கால் காயம் எற்படுகிறது.அவள் போகும் இடமெல்லாம்..ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதால்..அதைப் பற்றி அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் கேட்க..அதன் தலைவி அதை ஒப்புக் கொண்டு..மேலும் சில தகவல் தர அவளை எஸ்தர் கொன்று விடுகிறாள்.பின் அவள் பற்றி ரகசியம் தெரியும் மகனை கொல்ல முயற்சிக்கிறாள்..ஒரு நாள் இரவு தந்தை கொல்லப்படுகிறார்.

பின் தாயும்..இளைய மகளையும் கொல்ல முயலுகிறாள்.

இந்த ஹாரர் திரில்லர் படத்தில் இதற்கு மேல் கதையைச் சொன்னால் பார்க்கும் இன்டெரெஸ்ட் போய் விடும்

படத்தின் கடைசிக் காட்சிகளில் சீட்டின் நுனிக்கு வந்து..நகைத்தை கடித்துக் கொண்டிருப்போம்..இது இயக்குநரின் வெற்றி.

கண்டிப்பாக படத்தை பாருங்கள்.

படத்தின் இயக்கம் jaune collet serra
இசை john ottman
ஒளிப்பதிவு jeff Cutter

வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பு

படத்தில் எஸ்தராக நடித்த 12 வயது Isabella Fuhrman நடிப்பு சூப்பர்



8 comments:

பீர் | Peer said...

இன்னிக்கே பார்த்துடணும் சார். டவுன்லோடு ஆகிட்டிருக்கு..

T.V.ராதாகிருஷ்ணன் said...

பார்த்துவிட்டீர்களா? Peer

ரவி said...

நானும் இன்னைக்கே பார்த்துவிடுவேன்.

சென்ஷி said...

நான் நாளைக்குப் பாத்துடறேன். இனிமேத்தான் டவுன்லோடு செய்யனும் :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

இந்த படத்திற்கு சற்று எதிர்ப்பு இருந்தது...இப்படிப்பட்ட படத்தால் குழந்தை சுவீகாரம் எடுக்கப்படுவது சந்தேகத்தை உண்டாக்கும் என்றும் கூறப்பட்டதாம்.
வருகைக்கு நன்றி ரவி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சென்ஷி

Cable சங்கர் said...

/இந்த படத்திற்கு சற்று எதிர்ப்பு இருந்தது...இப்படிப்பட்ட படத்தால் குழந்தை சுவீகாரம் எடுக்கப்படுவது சந்தேகத்தை உண்டாக்கும் என்றும் கூறப்பட்டதாம்.
//
உலகத்திலே எதுக்குத்தான் எதிர்ப்பில்லை..??

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Sankar