Monday, July 27, 2009

வேலைக்கு விண்ணப்பம் அனுப்பும்முன்...போலிகளிடம் ஏமாறாதீர்..

இப்போதெல்லாம்..கடைகளில் வேலை விண்ணப்ப படிவங்கள் விற்கப்படுகின்றன.

பல கடைகளில்...ஒரு படிவம் 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்கப்படுகின்றன.தவிர விளம்பரத் தாளில்..1000 வேகன்ஸி..2000 வேகன்ஸி என்றல்லாம்..பிரிண்ட் போட்டு..கடையில் தொங்கவிடுகிறார்கள்.

எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர்..இப்படித்தான்..ஒரு வங்கி வேலைக்கான படிவத்தை பத்து ரூபாய் கொடுத்து வாங்கி..அதில் சொல்லப்பட்டிருந்தார் போல 500 ரூபாய்க்கான டிரஃப்ட் இணைத்து..அந்த தேசிய வங்கியின் தலைமையகத்துக்கு அனுப்பினார்.

ஒரு மாதம் கழித்து...அவ்வங்கியிலிருந்து..'எங்கள் வங்கியில் நீங்கள் குறிப்பிடுள்ளது போல எந்த வேலைக்கும் ஆட்கள் எடுக்கவில்லை.இதுபோல் தவறுதலாக விண்ணப்பிக்க வேண்டாம் என எச்சரித்து..டிராஃப்டை திருப்பி அனுப்பியிருந்தனர்.ஏதோ அவர் நல்லகாலம்..டிராஃப்ட் திரும்பி வந்தது.சில நிறுவனங்கள் அதையும் கிடப்பில் போட்டுவிடும்.

கடையில் விசாரித்ததில்..'நாங்கள் வேறு ஒரு கடையில் இருந்து வாங்கிவந்து விற்கிறோம் .அவர்களைக் கேட்டுச் சொல்கிறோம்' என்றனர்.பலன் பூஜ்யம்.அந்த விண்ணப்பப் படிவமே போலியானது.

விண்ணப்பிக்க அவர் செலவு செய்த பணம்..டிராஃப்டை கேன்ஸல் செய்ய வங்கி கமிஷன்,சான்றிதழ்களில்..ஒப்புதல் கையெழுத்து வாங்க அலைந்த நேரம்..எல்லாம் விரயம்.எல்லவற்றையும் விட அடைந்த ஏமாற்றம் .

இளைஞர்களின் கனவுகளுடன் விளையாடும்..இந்த போலிகளை நம்ப வேண்டாம்.

விளம்பரங்களை..செய்த்திதாள்களில் படித்து...தெரிந்துக் கொண்டு விண்னப்பிப்பது சிறந்தது.

10 comments:

Unknown said...

காலத்திற்கு உகந்த பதிவு என்று நினைகிறேன். போலிகளைக் கண்டு ஏமாராதீர்கள் என்று எது எதற்கோ சொல்லி இன்று இதற்கும் சொல்ல வேண்டியதாகி விட்டது.

கோவி.கண்ணன் said...

இத்தகைய ஏமாற்று அரசியல் பின்புலம் இல்லாமல் நடக்காது

இரவுப்பறவை said...

உண்மையிலும் உண்மை , சரியான எச்சரிக்கை..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ananth said...
காலத்திற்கு உகந்த பதிவு என்று நினைகிறேன். போலிகளைக் கண்டு ஏமாராதீர்கள் என்று எது எதற்கோ சொல்லி இன்று இதற்கும் சொல்ல வேண்டியதாகி விட்டது.//

ஆம்..ஆனந்த்..எல்லாவற்றிலும் ஏமாற்றுக்காரர்கள் இருக்கின்றனர்...வருகைக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கோவி.கண்ணன் said...
இத்தகைய ஏமாற்று அரசியல் பின்புலம் இல்லாமல் நடக்காது//

வட்டம்...மாவட்டம் என்றுதான் ஆயிரம் இருக்கிறதே

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இரவுப்பறவை said...
உண்மையிலும் உண்மை , சரியான எச்சரிக்கை..//

நன்றி இரவுப்பறவை

*இயற்கை ராஜி* said...

விருது வாங்க என் வலைப்பூவுக்கு வாங்க‌

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இய‌ற்கை said...
விருது வாங்க என் வலைப்பூவுக்கு வாங்க‌//

நன்றி இய‌ற்கை

Starjan (ஸ்டார்ஜன்) said...

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு .


நிறைய பேர் இப்படிதான் ஏமாற்றுதாங்க...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு .


நிறைய பேர் இப்படிதான் ஏமாற்றுதாங்க...//

வருகைக்கு நன்றி ஸ்டார்ஜன்