Tuesday, July 21, 2009

வைகோ விற்கு ஒரு கடிதம்..


தானை தளபதி வைகோ அவர்களுக்கு

நீங்கள் தி.மு.க., விலிருந்து..பிரிந்ததோ...அல்லது பிரிக்கப் பட்டதோ கண்டு மன வேதனை அடைந்தவர்களில் நானும் ஒருவன்.

பிறகு தாங்கள் கட்சி ஆரம்பித்ததும்..உங்கள் தனித்தன்மை வெளிவரும் என்று நினைத்தேன்..ஆரம்பத்தில்..அப்படித்தான் தோன்றியது.பிறகு...காங்கிரஸ் கட்சியைப்போல் ஏதாவது ஒரு திராவிடக் கட்சியின் முதுகில் சவாரி செய்துதான் ஒரு சில இடங்களில் வெல்ல முடிந்தது.

இது எல்லாம் பழங்கதை..அதைப் பற்றி இப்போது பேசி பயனில்லை என்று எனக்குத் தெரியும்...

ஆனால்..அடுத்த மாதம் நடக்கவிருக்கும் சட்டசபைக்கான 5 தொகுதிகளில் போட்டியிடாமல்..புறக்கணிப்பதாக அ.தி.மு.க., அறிவித்துள்ளது.அதற்கு அவர்கள் ஆயிரம் காரணம் கூறினாலும்..உண்மையான காரணம் 'தோல்வி பயம்"

ஆனால்..அதற்காக அவர்கள் கூட்டணியில் உள்ள நீங்களும் தேர்தலை புறக்கணிக்கத் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.5 தொகுதிகளிலும் ம.தி.மு.க., போட்டியிடட்டும்.அ.தி.மு.க., வின் ஆதரவைக் கேளுங்கள்.தி.மு.க.,விற்கு சரியான போட்டியை உங்களால் கொடுக்க முடியும்.அதை விடுத்து..கூட்டணி தர்மம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தால்..அடுத்து தயாராக இருக்கும் விஜய்காந்த் கட்சி போட்டியிட்டு..சில இடங்களை வெல்லக்கூடும்.

அடுத்து வரும் தேர்தல்களில் உங்கள் கட்சி மிகவும் பின்னுக்குத் தள்ளப்படும்.மேலும் தேர்தலை புறக்கணிப்பது என்பது..அரசியல் கட்சிகளின் ஜனநாயக விரோத போக்கையே உணர்த்தும்.

நீங்கள் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில்..நாடாளுமன்றத்தில் 15000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோற்றுள்ளதாகக் கூறியுள்ளீர்கள்.அதாவது ஒரு சட்டசபைத் தொகுதிக்கு சராசரியாக 2500 வாக்குகளே குறைவு.அதனால் சட்டசபை இடைத்தேர்தலில் வெல்ல வாய்ப்பு இருப்பதாகத்தானே அர்த்தம்.

இந்நிலையில் நீங்கள் உங்கள் முடிவை மாற்றிக்கோண்டு..கூட்டணி கட்சிகளின் ஆதரவைக் கேட்டு பெற்று, எல்லாதொகுதியிலும் போட்டியிடுவதே..கட்சியின் எதிர்காலத்திற்கு சிறந்தது.

சற்று சிந்திக்கவும்..

இப்படிக்கு
உங்கள் நலம் நாடும் தோழன்

23 comments:

Unknown said...

Say MDMK contest and comes thrid after Vijaykanths party, Karunanidhi will make sure MDMK comes thrid after Vijaykanths party ..then MDMK will lose its negotation power in assembly election will considered next to Vijaykanths party ....so is it not better not to contest now and hold on till next assembly election.

Starjan (ஸ்டார்ஜன்) said...

வைகோ திரும்பவும் ஃபார்முக்கு வர வேண்டும்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வைகோ அவர்களின் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தோம்.

அண்மைய காலங்களில் அவரின் பேச்சுகள், அறிவிப்புகள் முழு பூசணிக்காயை சோத்துக்குள் மறைப்பது போன்று தெரிகிறது.

இதுவே அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தும்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//vijayan said...
Say MDMK contest and comes thrid after Vijaykanths party, Karunanidhi will make sure MDMK comes thrid after Vijaykanths party ..then MDMK will lose its negotation power in assembly election will considered next to Vijaykanths party ....so is it not better not to contest now and hold on till next assembly election.//

அவர் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு நின்றால்..வெற்றி வாய்ப்பே கிடைக்கும்.விஜய்காந்த் இரண்டாம் இடத்திற்கு வரமுடியாது.இவர்கள் தேர்தலை புறக்கணிப்பதன் மூலம் விஜய்காந்திற்கு வழிவகுக்கிறார்கள்...என்பதே என் கருத்து.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
வைகோ திரும்பவும் ஃபார்முக்கு வர வேண்டும்//

வருகைக்கு நன்றி ஸ்டார்ஜன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
வைகோ அவர்களின் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தோம்.//

அதனால் தான் அவரது சமீபகால நடவடிக்கைகள் வேதனையை அளிக்கிறது.
வருகைக்கு நன்றி ஜோதிபாரதி

அக்னி பார்வை said...

ஆதிமுகா அல்லது அதன் கூட்டணியை பொருத்த வரை அம்மா பேச்சுக்கு மறு பேச்சு இருக்குமா என்று சந்தேகமாக உள்ளது

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்னி பார்வை said...
ஆதிமுகா அல்லது அதன் கூட்டணியை பொருத்த வரை அம்மா பேச்சுக்கு மறு பேச்சு இருக்குமா என்று சந்தேகமாக உள்ளது//


அந்த கட்டிலிருந்து வெளிவர வேண்டும்..என்றே சொல்கிறேன்.அதிமுக போட்டியிடா நிலையில்..ம.தி.மு.க., போட்டியிடின் அ.தி.மு.க., வாக்குகள் வைகோ விற்கே விழும்.

www.mdmkonline.com said...

ராதா கிருஷ்ணன் அவர்களுக்கு :

வைகோ அவர்களுக்கான உங்களின் பதிவிற்கு நன்றி.

முதலில் வைகோ அவர்களின் இந்த அறிக்கையை படியுங்கள் .

http://www.mdmkonline.com/news/latest/no-contest-in-bye-election-vaiko.html

இன்று இரவு மிக விரிவான பதிவை எழுதுகிறேன்.

ஸ்டார்ஜன் , விஜயன் ,ஜோதிபாரதி,அக்னிபார்வை அவர்களுக்கும் நன்றிஅவர்களுக்கான பதிலையும் நான்எழுதுகிறேன்.

நட்புடன்
தோழர்.
www.mdmkonline.com

T.V.ராதாகிருஷ்ணன் said...

//தி.மு.க.வின் ஊழல் பணத்தையும், வாக்குச்சாவடி தில்லுமுல்லுகளையும் மீறித்தான், 12 தொகுதிகளில் அண்ணா தி.மு.க.. அணி வெற்றி பெற்றது.//

அதுபோல சட்டசபை தேர்தலிலும் வெற்றிபெறலாம் என்பதே என் கருத்து

T.V.ராதாகிருஷ்ணன் said...

சங்கொலி said...
ராதா கிருஷ்ணன் அவர்களுக்கு :

//வைகோ அவர்களுக்கான உங்களின் பதிவிற்கு நன்றி.

முதலில் வைகோ அவர்களின் இந்த அறிக்கையை படியுங்கள் .

http://www.mdmkonline.com/news/latest/no-contest-in-bye-election-vaiko.html//

படித்த பின்னரே இப்பதிவிட்டேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சங்கொலி said... இன்று இரவு மிக விரிவான பதிவை எழுதுகிறேன்.//

கட்சி எடுத்த முடிவு சரியெனத்தானே நீங்கள் பதிய வேண்டும்.உங்கள் கைகள் கட்டிப்போடப்பட்டிருக்கின்றன.இப்போதைக்கு அவ்வளவே சொல்லமுடியும்.உங்கள் பதிவு பார்த்து..என் பதிலைக் கூறுகிறேன்

புரட்சிகர தமிழ்தேசியன் said...

தமிழக தமிழ்தேசிய உணர்வாளர்களுக்கு- இன்றைய தேவை சுயசார்புள்ள பொருளாதார கட்டமைப்பு,இனஉணர்வுள்ள சமுதாயமே!!

உலகின் பல தேசிய இனங்கள் தோல்வி அடைந்த வரலாற்றினை கூர்ந்து கவனித்தால் ஒடுக்கும் தேசிய இனங்கள் தமது எதிரியாக கருதும் தேசிய இனங்களை ஒடுக்கும் போது அவர்கள் முதலில் கைவைப்பது அந்த இனத்தின் வாழ்வாதரத்தில் தான் உதாரணம் நம் கண்முன்னே உள்ளது சிங்கள இனவாத அரசானது போரில் வெற்றி கொள்ளபட்டதாக தானே அறிவித்து கொண்டு அம்மக்களை
மாக்கள் போல் முட்கம்பி வேலிகளில் அடைத்துள்ளது மீள்குடியேற்றம் என்ற பெயரில் சிங்களவரை அந்த பகுதியில் குடியேற்றி குடும்பதிற்கு 2 ஏக்கர் நிலம் தோட்டம் அமைக்க 1 ஏக்கர் நிலம் என பங்கிட்டு கொடுக்கபோகிறார்களாம்..யார் வீட்டு நிலம் நம்முடைய உறவுகளுடையதல்லவா? நம் பாட்டன் முப்பாட்டன் வளமையாக வாழ்ந்த நிலமல்லவா? ஏகாதிபத்தியங்கள் எப்போதும் ஒரே மாதிரியே சிந்தித்து வருகின்றன.

ஒடுக்கும் தேசிய இனங்கள் எப்போதும் ஒடுக்கபடும் தேசிய இனங்களை
தம்மிடம் கையேந்தும் நிலையையே வைத்திருக்கின்றன.. இன்று ஈழதமிழர்களை அரசியல் தீர்வு.. உணவு ..மருத்துவம் என அனைத்திற்கும் சிங்களத்தினை நோக்கியே கையேந்த வைத்துள்ளன..
இதற்கு சற்றும் குறைவில்லாதது நாம் வாழும் ‘இந்தி’ தேசியம்.. இன்று அடிப்படை வாழ்வாதரமான விவசாயத்திற்கு காவிரிக்கு கன்னடனையும்,முல்லை பெரியாறுக்கு மலையாளியையும்

http://siruthai.wordpress.com/தமிழக-தமிழ்தேசிய-உணர்வாள/

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி siruthaai

www.mdmkonline.com said...

விமர்சனம் செய்தால் மட்டுமே நல்ல பதிவு என்பதில்லை .

ராதாகிருஷ்ணனின் இரண்டு பதிவுகளையும் பார்த்தேன் .

முதலில்
//

தானை தளபதி வைகோ அவர்களுக்கு
//


வைகோ அவர்களுக்கு என்று எழுதினால் போதும் , விளித்து எழுதுவதை தலைவரும் விரும்பமாட்டார் நாங்களும் ரசிக்கவில்லை.

//
பிறகு தாங்கள் கட்சி ஆரம்பித்ததும்..உங்கள் தனித்தன்மை வெளிவரும் என்று நினைத்தேன்..ஆரம்பத்தில்..அப்படித்தான் தோன்றியது.பிறகு...காங்கிரஸ் கட்சியைப்போல் ஏதாவது ஒரு திராவிடக் கட்சியின் முதுகில் சவாரி செய்துதான் ஒரு சில இடங்களில் வெல்ல முடிந்தது.
//

இபோதுள்ள நிலைமை யாரும் தனியாக நிற்க முடியாது . யாராவது தனியாக இருக்கிறார்கள் , இருந்து வெற்றி பெற்றுள்ளார்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம் ?

காங்கிரஸ் கட்சிவேண்டும் என்றால் யாருடைய முதுகில் சவாரி செய்யலாம் நாங்கள் பிறருடன் கைகோர்த்துதான் செல்வோம். எனென்றால் எங்களின் கால்கள் வலுவான கால்கள் உள்ளது.

ஏன் தேர்தலில் நிற்கவில்லை :
பழைய நிகழ்வுகள் பலவற்றை நீங்கள் உங்களின் இன்னொரு பதிவில் இட்டுள்ளீர்கள்.

பழைய நாட்களில் நடந்ததைபோல தேர்தல் இப்போது நடத்தப்படவில்லை.

மதிமுகவை பொறுத்தவரை மிகசாதாரனமானவர்கலே தேர்தலில் போட்டியிட்டுள்ளார்கள். பண முதலைகளோ அல்லது பெரும் வியாபாரிகளோ அல்ல.

எங்களைபோருத்தவரை கூடுமானவரை அரசியல் தர்மத்தை கடைபிடிப்பவரை தேர்ந்தெடுத்துதான் தேர்தலில் நிறுத்தியுள்ளோம் .
எப்பொழுதும் எந்த காலத்திலும் இவ்வளவு செலவு செய்ய இயலுமா என்று கேட்டு யாரையும் தேர்ந்தெடுத்த தில்லை .

அனால் இப்போது இடைதேர்தல் என்றாலே குறைந்தது ஒரு வாகிற்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து , மக்களின் வறுமையை விலை பேசி வாங்கும் போட்டிக்கு நாங்கள் தயார் இல்லை என்பதை விட , அந்த அசிங்கத்தை அரங்கேற்ற நாங்களும் தயார் இல்லை.


திருமங்கலம் போன்ற இடைதேர்தல் எப்படி நடந்தது என்பது பதிவருக்கு தெரியுமா? என்பது எனக்கு தெரியாது !

அங்கு வாகு பதிவு தொண்ணூறு சதவீதம் ?! இந்தியாவிலே இல்லாதது . மொத்த வாக்கு , உண்மையான வாக்கு என்பது அறுபது சதவீதம் தான் , வாகு பதிவு எந்திரத்தின் துணையுடன் ஒரு மணி நேரத்தில் கள்ளத்தனமாக எங்களின் எதிர்தரபிர்க்கு முப்பது சதவீத வாக்கு பதியப்பட்டது.

அதற்கும் முன்னாள் , அந்த இடைதேர்தலில் மட்டும் எங்கள் இயக்க தோழர்கள் முப்பது பேர் ரத்த வெட்டுக்காயங்கள் பட்டார்கள்.
நூறு பேருக்கும் மேல் போலியாக வழக்கு பதியப்பட்டு இன்றும் அலைகளிக்கபடுகிறார்கள்.

இதனையும் நாங்கள் பட்டு , வெற்றி கிடைத்தால் நியாயம் வென்றால் சந்தோசபட்டிருப்போம்.

அந்த தேர்தலில் அரசு இயந்திரம் அத்துனையும் பெரும் மக்கள் துரோகம் செய்தது.

இப்போதும் அந்த நிலை கொஞ்சமும் மாறவில்லை .

இப்படிப்பட்ட சூழலில் மறுபடியும் தேர்தல் என்பது கேலியான , போலியான கீழ்தட்டு மக்களை ரத்தக்களறி விளையாட்டுக்கு தூண்டி விட்டதாய் தான் இருக்கும்.

இந்த அசிங்கமான போட்டிக்கு நாங்கள் தயார் இல்லை அவ்வளுவுதான் .


///
ஜோதிபாரதி said...

வைகோ அவர்களின் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தோம்.

அண்மைய காலங்களில் அவரின் பேச்சுகள், அறிவிப்புகள் முழு பூசணிக்காயை சோத்துக்குள் மறைப்பது போன்று தெரிகிறது.

இதுவே அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தும்...
///


முழு பூசணிக்காய் என்று எதை சொல்லுகிறார் ?

எத்தனையோ பின்னடைவுகளை மதிமுக சந்தித்து மீண்டு வந்துள்ளது , மதிமுகதொண்டகளின் பலத்தில் உள்ள இயக்கம் , மதிமுக வின் உள் கட்டமைப்புஇப்போதுள்ள எந்த கட்சிகளை விடவும் மிக சிறந்தது. வரும் நாட்களில் மதிப்புடைய அங்கீகாரத்தை பெரும்.

\\\

கட்சி எடுத்த முடிவு சரியெனத்தானே நீங்கள் பதிய வேண்டும்.உங்கள் கைகள் கட்டிப்போடப்பட்டிருக்கின்றன.இப்போதைக்கு அவ்வளவே சொல்லமுடியும்.உங்கள் பதிவு பார்த்து..என் பதிலைக் கூறுகிறேன்
\\\

எங்களை போன்றவர்களின் கருத்துகள்தான் கட்சியின் அல்லது எங்களின்தலைவரின் கருத்தே ஒழிய எப்பொழுதும் எங்கள் தலைவர் அவரின்கருத்துக்களை ஒரு துளியேனும் திணித்ததில்லை. எந்த முடிவும் மூன்று கட்ட கட்சிஅமைப்பின் முடிவே ஒழிய கட்சியோ அல்லது தலைவரோ எப்பொழுதும்எதையும் யார் மீதும் திணிக்காது .

இதிலும் பதிவர்கள் கருத்து நிறைவு பெற வில்லை என்றால் நான் இனொன்று சொல்லிக்கொள்ள விரும்புவது, இங்கே கணனியில் நாம் பதிவது மிக எளிது , களம் என்பது வித்தியாசமானது. அதை அந்த களத்தில் உள்ளவர்களை கொண்டுதான் நாம் மதிப்பிட வேண்டும் . நமக்கு விஷயம் தெரியும் என்பதை காட்டிக்கொள்ள அல்லது எதோ தெரிந்த அரைகுறை அரசியலை வைத்துக்கொண்டு யாரையும் கண்டபடி விமர்சனம் seivathu மிக எளிது.

தோழர்.
www.mdmkonline.com

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சங்கொலி said...
எதோ தெரிந்த அரைகுறை அரசியலை வைத்துக்கொண்டு யாரையும் கண்டபடி விமர்சனம் seivathu மிக எளிது.//

நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...
This comment has been removed by a blog administrator.
உடன்பிறப்பு said...

அம்மா பேச்சை மீறீனால் அம்மா கூட்டணியில் இருந்து கழட்டிவிட்டுவிடுவார் அய்யாவும் இப்போதைக்கு சேர்த்து கொள்ளமாட்டார் அப்புறம் எப்படி அரசியல் நடத்துவது. அதான் வைகோ அப்படியே ஆப் ஆகிவிட்டார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//உடன்பிறப்பு said...
அம்மா பேச்சை மீறீனால் அம்மா கூட்டணியில் இருந்து கழட்டிவிட்டுவிடுவார் அய்யாவும் இப்போதைக்கு சேர்த்து கொள்ளமாட்டார் அப்புறம் எப்படி அரசியல் நடத்துவது. அதான் வைகோ அப்படியே ஆப் ஆகிவிட்டார்//
வருகைக்கு நன்றி உடன்பிறப்பு

Anil said...

//உடன்பிறப்பு said...

அம்மா பேச்சை மீறீனால் அம்மா கூட்டணியில் இருந்து கழட்டிவிட்டுவிடுவார் அய்யாவும் இப்போதைக்கு சேர்த்து கொள்ளமாட்டார் அப்புறம் எப்படி அரசியல் நடத்துவது. அதான் வைகோ அப்படியே ஆப் ஆகிவிட்டார்//

உட‌ன்பிற‌ப்பே, ஈழ‌ விவ‌கார‌த்தில் அதிமுக‌விர்க்கு இருக்கும் ரோச‌ம், அய்யாவுக்கு இல்லையே. உப்பு என்கிற‌ பொருள் இருப்ப‌து தெரியுமா...?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பொதுவாக வைகோ அவர்களைப் பற்றி விமர்சிப்பதை எப்படி ஆரோக்கியமாக எடுத்துக் கொள்கிறோமோ, அதேபோல் மற்ற அரசியல் வாதிகள் எந்த விதத்திலும் புனித பிம்பம் இல்லை என்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

வைகோவிடம் பத்து மடங்கு விமர்சனம் வைத்தால் மற்றவர்களிடம் நூறு மடங்கு விமர்சனம் வைக்க முடியும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி anil

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஜோதிபாரதி ஐயா..மீங்க சொலவது உண்மை.எந்த அரசியல்வாதியும் இன்று உத்தமன் இல்லை.ஆனால் ஒருவரை விமரிசனம் செய்கிறோம் என்றால்..அவர் மீது சற்று ஈர்ப்பு நமக்கு இருப்பதால்தான்..சங்கொலிக்கு இது எல்லாம் புரியாது