Friday, July 31, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (31-7-09)

1.துணை மின்நிலையம் மற்றும் மின் கடத்தி பணிகளை தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணய காலக் கெடுவைவிட தாமதமாக முடித்ததால்..தமிழக மின்வாரியத்திற்கு 5 ஆண்டுகளில் 123 கோடியே 97 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதன்மை கணக்காயர் சங்கர்நாராயண் தெரிவித்துள்ளார்.

2. திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில்..அவருக்கு அணிவிப்பதற்கு மட்டும் 11 டன் அளவுக்கு தங்கம்,வெள்ளி,வைர,வைடூரிய நகைகள் உள்ளனவாம்.தினமும் ஏழுமலையானுக்கு 70 கிலோ நகைகள் அணிவிக்கப்படுகின்றன.இவ்வளவு எடை உள்ள நகைகள் அணிவிக்கப்படுவதால் சிலையில் விரிசல் உண்டாகும் அபாயம் உள்ளதாம்.

3.ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டால்..மாரடப்பு வர வாய்ப்புள்ளது.பக்கவாதம்,மூளையில் பாதிப்பு ஆகியவை ஏற்படலாம்.தவிர, கண்கள்,சிறுநீரக கோளாறுகள்..என உடலின் பல பாகங்கள் பாதிக்கப்பட வாய்ப்புண்டு.ஆகவே உங்கள்..வயது எதுவாயினும் ரத்த அழுத்தத்தை 140/90 என்ற அளவிலேயே வைத்திருங்கள்.

4.கடுமையான நிதி நெருக்கடி காரணமாக அமெரிக்காவில் கடந்த 7 மாதங்களில் 64 வங்கிகள் திவாலாகி உள்ளன.மாதம் சராசரியாக 9 வங்கிகள் மூடப்படுகின்றனவாம்.பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அமெரிக்கா அதிலிருந்து மீள இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் எங்கின்றனர் வல்லுநர்கள்.

5.எந்தத் தொழிலும்..முழு ஈடுபாட்டுடன் செய்தால் பணம் சம்பாதிக்கும் தொழிலே..மும்பை தாஜ் ஓட்டல் சலவையாளர் சாகர் என்பவர் ஓராண்டிற்கு 1 கோடியே 53 லட்சம் சம்பாதிக்கிறார்.இவர் 33 வருடங்களாக அந்த ஓட்டலில் வேலை செய்கிறார்.அதே ஓட்டல் சமையல்காரரின் ஆண்டு வருமானம் 60 லட்சத்து 53 ஆயிரமாம்.

6.பொருள் தேடும்வரை சுற்றத்தினர் நம் மீது அன்பு வைத்திருப்பார்கள்.நோயில் தளர்ந்து போனப் பின் யாரும் நம்மை கண்டுக் கொள்ள மாட்டார்கள்.

7. பொருத்துக..

திருவள்ளுவர் -இலவுகாத்த கிளி
ஒகேனக்கல் - சர்வக்ஞர்
முல்லைபெரியார் - எடியூரப்பா
இலங்கை தமிழர் - அச்சுதானந்தன்
எல்.கணேசன் - கலைஞர்

11 comments:

SUBBU said...

ஆறாவது நச்

SUBBU said...

மீ த firsட்

மணிகண்டன் said...

இந்த வாரம் பல்சுவை சுண்டல். Good one.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
SUBBU
மணிகண்டன்
Ram

Starjan (ஸ்டார்ஜன்) said...

\\\ 6.பொருள் தேடும்வரை சுற்றத்தினர் நம் மீது அன்பு வைத்திருப்பார்கள்.நோயில் தளர்ந்து போனப் பின் யாரும் நம்மை கண்டுக் கொள்ள மாட்டார்கள்.////

அருமையான வரிகள்

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்

ஊசவில்லை

:-))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி starjan

Starjan (ஸ்டார்ஜன்) said...

7வ‌துக்கு விடை என்ன‌

சிநேகிதன் அக்பர் said...

சுண்டல் நல்லா இருந்தது.

cheena (சீனா) said...

ஆகா ஆகா - தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் - அனைத்தும் அருமையே

நல்வாழ்த்துகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
7வ‌துக்கு விடை என்ன‌//

வருகைகு நன்றி ஸ்டார்ஜன்..
முதல் சொல்லப்பட்ட சொல்..அடுத்து சொல்லப்பட்டுள்ள சொல்லுடன் தொடர்பு உடையது.அதைக் கண்டுபிடியுங்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
அக்பர்
cheena sir