Wednesday, June 17, 2009

நெஞ்சிருக்கும் வரை..யும்..பூ வும்..

சமீபத்தில் பூ படம் பார்த்தேன்..சமீப காலமாக..சில நல்ல திரைப்படங்கள் தமிழில் வந்துக் கொண்டிருக்கின்றன.அவற்றில் பூ படமும் ஒன்று.

சிறு வயது முதல் நண்பர்கள் அவர்கள்.அவன் நலனில் அக்கறை உள்ள அவளின்..தினசரி பிரார்த்தனையே..அவனின் நலமே..அதற்காக அவள்..எதையும் செய்ய தயார்.அப்படிப்பட்ட நாயகன்...திருமணத்திற்கு பின்..சந்தோஷமாக இல்லை என்று..தெரிந்ததும்...இத்த்னைநாட்கள்...கவலைகளை முழுங்கி..சிரித்துக்கொண்டே இருந்தவள்..பொங்கி அழுகிறாள்.இதுவே கதை.

நாயகியாக நடித்தவர் புதுமுகம்..யதார்த்த நடிப்பு..

இப்படத்தைப் பார்த்த தாக்கம் ..மனதில்..இரண்டு நாட்களாக இருந்து வந்தது..

இந்நிலையில்..திடீரென..இப்படத்தை..ஸ்ரீதரின் 'நெஞ்சிருக்கும் வரை' படத்துடன் ஒப்பிடத் தோன்றியது.

அப்படத்தில்..சிவாஜி விஜயாவை காதலிப்பார்.. விஜயாவோ..சிவாஜியின் நண்பன் முத்துராமனை காதலிப்பார்..விஜயாவின் நலமே முக்கியம் என எண்ணி சிவாஜி..தானே முன்னின்று திருமணத்தை முடிப்பார்.பின்..முத்துராமனுக்கு..சிவாஜி அவரை காதலித்த செய்தி தெரிய வர..விஜயாவை வெறுப்பார்..முத்துராமன்.

விஜயாவின் நலம் மட்டுமே..குறிக்கோளுடன் இருக்கும் சிவாஜி...அவர் நன்கு வாழ வேண்டும் என்பதற்காக வேறு வழி தெரியாது..தன்னையே மாய்த்துக் கொள்வார்.

ரகுராமன்,ராஜேஸ்வரி,சிவராமன்..இந்த பாத்திரப் படைப்புகளாகவே..மாறிவிட்டனர்..அந்த நடிகர்கள்.இந்த இடத்தில்..பீட்டர் என்ற நண்பர் வேடத்தில் நடித்த வி.கோபாலகிருஷ்ணனையும் குறிப்பிட வேண்டும். இப்படத்தில் அனைவரும் மேக்கப் இன்றி நடித்திருப்பர்.

ஆனால்..அந்த படம்..நல்லதொரு படமாக இருந்தும்...அதிகம் பேசப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

18 comments:

வம்பு விஜய் said...

அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...

உங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு

அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!

ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்

- வம்பு விஜய்

யாத்ரீகன் said...

http://yaathirigan.blogspot.com/2009/03/blog-post.html - Oru Siru Vilambaram :-)

அக்னி பார்வை said...

நெஞ்சிருக்கும் வரை படத்துடன் பூவை ஒப்பிட்டது அருமை

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி..
வம்பு விஜய்
உங்கள் பதிவுகளை படிக்கிறேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி..யாத்ரீகன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// அக்னி பார்வை said...
நெஞ்சிருக்கும் வரை படத்துடன் பூவை ஒப்பிட்டது அருமை//

நன்றி அக்னி

Thamira said...

நானும் சமீபத்தில்தான் பூ பார்த்தேன். நல்லதொரு படம்.!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
நானும் சமீபத்தில்தான் பூ பார்த்தேன். நல்லதொரு படம்.!//

அருமை

நசரேயன் said...

நல்ல படத்தை ரசிக்கிற அளவுக்கு இன்னும் நான் வளரலை

T.V.ராதாகிருஷ்ணன் said...

// நசரேயன் said...
நல்ல படத்தை ரசிக்கிற அளவுக்கு இன்னும் நான் வளரலை//

அதுக்குத்தான் அப்பப்ப நம்ம மாதிரி ஆள் கிட்ட பேசணும்

:-)))

கோவி.கண்ணன் said...

:)

இது மாதிரி முக்கோண (சிக்கல்) காதல் கதைகளில் ஒருவரை தியாகி ஆக்கிடுவாங்க.

காதலிப்பது என்பது ஒரு எக்ஸ்பீரியன்ஸ் கைகூடவில்லை என்றால் பெற்றோர் பேச்சைக் கேட்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
மற்றதெல்லாம் மடத்தனம் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கோவி.

நையாண்டி நைனா said...

நல்ல ஒப்பீடு...

கார்க்கிபவா said...

//
அதுக்குத்தான் அப்பப்ப நம்ம மாதிரி ஆள் கிட்ட பேசணும்//

:))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நையாண்டி நைனா said...
நல்ல ஒப்பீடு...//

நன்றி நைனா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கார்க்கி said...
//
அதுக்குத்தான் அப்பப்ப நம்ம மாதிரி ஆள் கிட்ட பேசணும்//

:))))//

நம்ம கடைப்பக்கம் வந்ததற்கு நன்றி கார்க்கி

உண்மைத்தமிழன் said...

நெஞ்சிருக்கும் வரை படத்தினை நான் இதுவரையில் பார்க்கவில்லை..!

உங்களுடைய உதவியால் கதையைத் தெரிந்து கொண்டேன்.

நன்றி..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
நெஞ்சிருக்கும் வரை படத்தினை நான் இதுவரையில் பார்க்கவில்லை..!

உங்களுடைய உதவியால் கதையைத் தெரிந்து கொண்டேன்.

நன்றி..//

நம்ம கடைப்பக்கம் வந்ததற்கு நன்றி
உண்மைத் தமிழன்