Thursday, April 30, 2009

தி.மு.க., தேர்தல் நடத்தை விதிமீறல்..???

நேற்று தமிழகத்து பேருந்து பயணிகளுக்கு ..பேருந்தில் ஏறியதும்..ஆச்சரியம் ஏற்பட்டது.பேருந்து கட்டணங்கள் குறைக்கப்பட்டிருந்தது.

அதுவும்...சாதாரணமான குறைப்பு இல்லை...மிகவும் குறைப்பு.உதாரணமாக தாழ்தள பேருந்தில்...பாரிமுனையிலிருந்து...ஆவடிக்கு முன்னர் 13 ரூபாய் கட்டணம்...நேற்று முதல் அது 6 ரூபாயாகிவிட்டது.

தமிழகம் முழுதும் பேருந்துகளில் ஒரே சீரான கட்டணம் நேற்று முதல் அமுலுக்கு வந்தது.

முன்னர்..2 ரூபாய் கட்டணத்திற்கு..எல்.எஸ்.எஸ்.,எம் சர்வீஸ்,எக்ஸ்பிரஸ்,டீலக்ஸ்..ஆகியவற்றிற்கு முறையே 2.50.,3.,4., ரூபாய் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன.இது மறைமுகமாக கூடுதல் கட்டணம் ஏற்றப்பட்டுள்ளதாக மக்களிடையே கருத்து நிலவி வந்தது.இந்நிலையில்..நேற்று முதல்...எல்லா பேருந்துகளிலும் சாதாரண கட்டணமே வசூலிக்கப்படுகிறது.ஏ.சி. பஸ் கட்டணத்தில் மாற்றமில்லை.

இது..மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆனால்..இந்நிலை எதுவரை நீடிக்கும்..என்ற ஐயமும் உள்ளது.

எதிர்க்கட்சிகள்..இது தேர்தலுக்காக..தி.மு.க., அரசின் செயல் என்று கூறினாலும்..மெட்ரோ நிர்வாகிகள்...நிர்வாகம் சம்பந்தப்பட்ட விஷயம் எனக் கூறுகின்றனர்.

ஆனால்...தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவோ..பஸ் கட்டணத்தைக் குறைத்தது..கண்டிப்பாக தேர்தல் நடத்தை விதிமீறல் என்றும்..இது விஷயமாக தலைமை தேர்தல் கமிஷனுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளதாகவும் சொன்னார்.

நவீன் சாவ்லா..இது விதிமீறல் அல்ல என சொல்வார் என எதிர்ப்பார்ப்போம்.

Wednesday, April 29, 2009

வாய் விட்டு சிரியுங்க...

1.அந்தக் கல்யாணத்தில அரை மணிக்கொரு முறை..இந்நிகழ்ச்சியை வழங்கியவர்னு விளம்பரம் பண்றாங்களே ஏன்?
பொண்ணோட அப்பா மெகாசீரியல் தயாரிப்பாளராம்...கல்யாணத்திற்கும் ஸ்பான்சர் வாங்கிட்டார்.

2.எதிர்க்கட்சித் தலைவர் நான் பயந்தவன் என்று நினைக்கிறார்.அவருக்கு ஒன்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்..மனசாட்சிக்குக்கூட பயப்படாதவன் நான்.

3.அவன் பண விஷயத்தில் ரொம்ப மோசம்..நேற்று கேட்டப்போது இன்னிக்கு தரேன்னு சொன்னான்.இன்னிக்குக் கேட்டா நாளைக்குத் தரேன்னு சொல்றான்..
அவன் உனக்கு ஏதாவது கடன் தரணுமா?
இல்லை...நான் தான் அவன் கிட்ட கடன் கேட்டிருக்கேன்.

4.மனைவி- வர வர டி.வி.யிலே நிகழ்ச்சிகள் பார்க்கணும்னா போரடிக்குது...உங்களுக்கு..?
கணவன்-உன்னைவிடவா எனக்கு டி.வி.,

5.அந்த ஜவுளிக்கடை முதலாளி..எந்தத் துணி வாங்கினாலும்...மீட்டர் என்ன விலைன்னு சொல்லிட்டு...மேல 5 ரூபாய் போட்டுக்கொடுங்கன்னு சொல்லுவார்
ஏன்?
இதுக்குமுன்னால ஆட்டோ டிரைவராய் இருந்தாராம்.

6.என்னோட பையனுக்கு எல்லா கேள்விக்கும்...விடை பாதிதான் தெரியும்..
எப்படி சொல்ற..
இந்தியாவிற்கு யார் சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததுன்னா..சோனியா காந்தின்னு சொல்லுவான்...கீதாஞ்சலி எழுதியது ஷர்மிளா தாகூர்ன்னு சொல்லுவான்.

7.மொக்கை,கவுஜ,சகா,மச்சி,ரிப்பீட்டேய்...இப்படியெல்லாம் என்னடா புதுசா பேச ஆரம்பிச்சிருக்கே?
தமிழ்ல பிளாக்ஸ்பாட் எழுத ஆரம்பித்திருக்கிறேனே

Monday, April 27, 2009

நாடக விழாவில் எஸ்.வி.சேகர் பேச்சு...

சென்னை கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் 20 ஆவது நாடகவிழா 22ஆம் தேதி நாரத கான சபா அரங்கில் நடந்தது.தொடர்ந்து 9 நாடகங்கள் 30ஆம் தேதி வரை நடைபெறும்.விழாவிற்கு நல்லி செட்டியாரும், கிருஷ்ணாஸ்வீட்ஸ் முரளியும் வந்திருந்தனர்.ஆரம்ப விழாவில் பேச சேகரை...மைலாப்பூர் எம்.எல்.ஏ., பேசுவார் என்றனர்.

உடன் வந்த சேகர்..'என் கட்சியே நான் ஒரு எம்.எல்.ஏ., என்பதை மறந்து விட்டது' என்றார்.

மேலும்..'எனக்கு பச்சை ஷால் போர்த்துவதா..அல்லது மஞ்சளா என விழாக்குழுவினர் யோசித்தனர்' என்றார்.தனது அரசியல் நிலைப்பாடு...தான் எந்த கட்சியில் இருக்கப்போகிறேன் என்பதை மே 15ஆம் தேதிக்குபின் அறிவிப்பதாகக் கூறினார்..அனைவரையும்...தேர்தல் நாளன்று ஓட்டு போட்டு விடுங்கள் என்றார்.

விழாவில் முதல் நாடகமாக என் எண்ணம்,எழுத்து,இயக்கத்தில் 'பத்ம வியூகம்' என்ற நாடகம் நடந்தது.

Sunday, April 26, 2009

கலைஞருக்கு ஏன் ஓட்டு போட வேண்டும்...

இந்த என் பதிவிற்கு...பல கண்டன பின்னூட்டங்கள் வரலாம்.ஆனாலும்...சற்று ஆற அமர சிந்தித்தால் தெளிவு கிடைக்கும்.

ஒரு அரசை...அதுவும்...மாநில அரசை..ஆளும் கட்சி..அம்மாநில மக்களுக்கு ஆற்றும் தொண்டை வைத்தே அடுத்த தேர்தலில் அது வெற்றி பெறும் வாய்ப்பை பெறுகிறது என்பது பொதுவான கருத்து எனலாம்.

ஆனால்...நம் ஜனநாயகத்தில்...இப்போ எல்லாம்..வலுவான கூட்டணி எந்த கட்சி அமைக்கிறதோ அதுவே...வெற்றி பெறும் நிலை உள்ளது.இல்லாவிடின்..1996-01 வரையிலான கலைஞர் ஆட்சி திறமையான ஆட்சி...திறமையாக செயல் பட்ட ஆட்சி.அதனாலேயே..2001 சட்டசபை தேர்தலில் வெற்றி பெறலாம்..என்று நினைத்த அரசியல் சாணக்கியன் கலைஞர் தப்புகணக்கு போட்டார். ஜெ வோ மற்ற கட்சிகளுடன் வலுவான கூட்டணி அமைத்து 2001 தேர்தலில் வெற்றி பெற்றார்.

அப்போதுதான்..இதை உணர்ந்துக் கொண்ட கலைஞர்..2004,(நாடாளுமன்ற தேர்தல்)2006 தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்தார்.வெற்றி பெற்றார்.2006 தேர்தலில் விஜய்காந்த் ஓட்டுகளை பிரித்ததாலும்..பெரும்பான்மையான தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதாலும்...கலைஞர் அரசு...அறுதி பெரும்பான்மை பெறாவிடினும் , அதிக இடங்களை பெற்ற கட்சி என்பதால்..ஆட்சி அமைத்தது.

இன்று..பா.ம.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் விலகியதால்...தமிழகத்தில் அவர் ஆட்சி நீடிக்க காங்கிரஸ் தயவு கண்டிப்பாக தேவையானது.

மேலும்..இப்போது அணியில் காங்கிரஸ் மட்டுமே பிரதானக் கட்சி.காங்கிரஸை விரோதித்துக் கொண்டால்...கலைஞர் ஆட்சி இழக்க நேரிடும்.அதனாலேயே..இலங்கை பிரச்னையில்..கலைஞரால் தனிப்பட்டு எம் முடிவும் எடுக்கமுடியவில்லை.

சரி..இதெல்லாம்...தெரிந்ததுதானே என்கிறீர்களா? விஷயத்திற்கு வருகிறேன்...

நம் மக்கள் ..தேர்தல் என்று வரும்போது...கடந்த வருஷங்களில் ஆட்சி செய்தவர்களின் திறமையை நினைப்பதில்லை..அன்றைய பிரச்னையை மட்டுமே நினைக்கின்றனர்.

இலங்கை பிரச்னையால்...கலைஞருக்கு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெறமுடியா விடின்....தேர்தலுக்குப்பின் ஆட்சி கவிழ..வாய்ப்புள்ளது.பின் ஆட்சிக்கு வரும் கட்சியும்..இதே காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும்..இதையெல்லாம் கணக்குப் போட்டே..கலைஞர் காங்கிரஸை விட்டு வெளியே வர நினைக்கவில்லை.

இந்நிலையில்...கலைஞர் எதிர்ப்பு பதிவுகள் பல நான் இட்டிருந்தாலும்...அவர் ஆட்சிதான் தமிழகத்திற்கு இப்போது தேவை.அதற்காக தி.மு.க., போட்டியிடும் தொகுதிகளில் அவர்களுக்கு ஓட்டளிப்போம்.இலங்கை தமிழர் பிரச்னையில்..மெத்தனம் காட்டும் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் அவர்களை தோற்கடிப்போம்.

நம் எதிர்ப்பை காங்கிரஸ் கட்சிக்கு தெரிவிப்போம்.

FLASH NEWS:விடுதலைப் புலிகள் போர்நிறுத்தம் அறிவித்தும்...இலங்கை அரசு அதற்கு தயாராய் இல்லாததால்...உடன் போர் நிறுத்தம் கோரி..கலைஞர் இன்று திடீர் உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளார்.

Saturday, April 25, 2009

தேர்தல் சிப்ஸ்...

ஜெ யின் உடன் பிறவா சகோதரி சசிகலாவின் கணவர் நடராஜன் வீட்டில்...நேற்று போலீஸார் திடீர் சோதனை நடத்தினார்கள்.இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும்...காங்கிரஸிற்கு ஓட்டளிக்கக்கூடாது
என்றும் பெரியார் தி.க.வினர் சி.டி.க்களை வினியோகிக்கின்றனர். அதை தடை செய்ய வேண்டும் என காங்கிரஸ் போலீஸில் புகார் செய்யப்பட்டது.அதனால்..விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள்
வீடுகளில் சோதனை செய்யப்பட்டது.நடராஜனின் வீட்டிலும் நடந்ததாம்.

2.இலங்கை பிரச்னை காரணமாக..தனது பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்புவதாக பாரதிராஜா கூறினார்.அதுபற்றி கேட்டபோது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்...'அவர் யார் என சொல்லுங்கள்.ஒருகாலத்தில் இயக்குனராக இருந்தார்..அவ்வளவுதான்...' என்றார்.(நீங்கள் யார் என கேட்கும் காலம் வந்துவிட்டது)

3.இரண்டு மாதங்களாக சிறையில் இருந்த சீமானை...தேச பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ததை சென்னை உயர் நீதி மன்றம்..ரத்து செய்ததால்..சீமான் நாளை விடுதலை செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

4.பா.ம.க., போட்டியிடும் ஏழு தொகுதிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறக்கூடாது என கலைஞர்..அமைச்சர்களுக்கு..கட்டளை இட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

5.ராமதாஸ் தனியே வந்து தனி அணி அமைத்தால் ..தான் அவர் பின்னால் வரத்தயார் என திருமா தெரிவித்துள்ளார்.

6.டி.ஆர்.பாலுவை ஆதரித்து பேசிய வாசன்..'டி.ஆர்.பாலு தேர்ந்தெடுக்கப்பட்டால்...தொகுதி வளர்ச்சி பெறும் (??!!)...ஒட்டு மொத்த இந்தியாவே வளர்ச்சி பெறும் என்றார்.தேர்தலுக்கு தேர்தல் பச்சோந்தியாய் அணி மாறும் பா.ம.க., விற்கு பாடம் புகட்டுங்கள்..என்றார்.(முன்னர் மூப்பனார் கலைஞருடன் கூட்டணி,பின் ஜெ யுடன் கூட்டணி..அதனால் ப.சி., விலகல்...இதை எல்லாம் வாசன் மறந்திருப்பாறோ?!)

7.கடைசி நேரம் வரை பதவி சுகத்தை அனுபவித்து விட்டு...அணி மாறுபவர்களை தேர்தலில் தண்டியுங்கள் என்கிறார் தயாநிடி மாறன்...(குடும்பத்திற்குள் சமரசம் ஏற்படாவிட்டால்...இவர் என்ன செய்திருப்பார்?!)

Friday, April 24, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்..(24-4-09)

பேராசிரியர் ஆல்பர்ட் ஈன்ஸ்டீனிடம் 'வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி' ன்னு கேட்ட போது..அவர் கொடுத்த கணித சூத்திரம் A=X+Y+Z

A என்பது வாழ்க்கையில் வெற்றி
X என்பது கடின உழைப்பு
Y என்பது ஆரோக்யமான விளையாட்டு
Z என்பது என்ன தெரியுமா...
அதிகம் பேசாமல் வாயை மூடிக் கொண்டிருப்பது.

2.கால் தடுமாறினால் சமாளித்துக் கொண்டு விடலாம்.ஆனால் நாக்கு தவறினால் மீளவே முடியாது.

3.உடல் பருமனாய் இருப்பவர் இதயம் எவ்வளவு கஷ்டப்படுகிறது தெரியுமா? அநாவசியமாக அவர்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு பவுண்ட் சதைக்கும் ..அவர்கள் இதயம் 3 மைல் நீளமுள்ள இரத்தக் குழாய்களுக்கு இரத்தத்தை பாய்ச்ச வேண்டியிருக்கிறது. அதனால்தானோ என்னவோ பருமனாக உள்ளவர்களுக்கு அதிகமாக இதய நோய் வருகிறது.

4.நாம் சாதாரணமாக பேசும் வேகம் நிமிடத்திற்கு 125 வார்த்தைகள்.ஆனால் நாம் நினைக்கும் வேகம் நிமிடத்திற்கு 500 வார்த்தைகள்.அதாவது...நாம் பேசுவதைவிட நான்கு மடங்கு சிந்திக்கிறோம்.'வள வள' என பேசி நம்மை போரடிக்கும் நபர்...சிந்திக்கும் வேகத்தில் பேசவும் முடிந்தால்...நினைக்கவே பயமாய் இல்லை...

5.நாளும் பிரியாணி
நங்கைக்கு மூக்கூத்தி
சாராயத்திற்கு பணம்
ஏழை எதிர்ப்பார்க்கிறான்
மே 13வரை வரவை!!

6.தலைவா...புதுசா ஒரு லட்சம் பேரை சேர்த்துட்டோம்..வாக்காளர் பட்டியல்லே...ஆனா நீங்க 3 1/2 லட்சம் வித்தியாசத்திலே ஜெயிப்பேன்னு சொன்னீங்களே எப்படி...
அன்னிக்கு ஊருக்கு வரப்போகும் விருந்தாளிகளை வைச்சுதான்.

Thursday, April 23, 2009

பாவம்...பாவம்...பரிதாபம்...வைகோ..


வைகோ...என்னைப்போன்ற பலரால் ரசிக்கப்பட்ட அரசியல்வாதி...

கலைஞரைத் தவிர்த்து...குமரி அனந்தன், வைகோ பேச்சுக்களால் கவரப்பட்டவன் நான்.

தி.மு.க.,வில் இருந்த போது தன்மானம் பாதிக்கப்பட்டதாலும்...கொலைபழிச்சொல் சொன்னதாலும்..வெளியே வந்து மறுமலர்ச்சி கழகத்தை ஆரம்பித்தபோது...மறுபடியும்..அவர் அரசியல் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும் என எண்ணியவன் நான்.ஆரம்பகாலங்களில் அதற்கான சத்தியகூறுகள் இருந்தன.ஆனால்..மீண்டும்..தன்னை பழி சொல்லி அனுப்பிய தி.மு.க., வுடன் ஒரு சில இடங்களுக்காக கூட்டு வைத்த போது...சற்று தரம் தாழ்ந்தாலும்...ஏற்கனவே இருந்த கட்சியுடன் கூட்டு வைக்கிறார்...மறப்போம்..மன்னிப்போம்...பாணியில் என்றே எண்ணினோம்.

ஆனால்..அடுத்து வந்த தேர்தலில்...ஒரு சில இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும் என்றதும்...தன்னை பொடா..வில் தள்ளிய வரலாற்றை மறந்து ஜெ யுடன் கூட்டணி வைத்தார்.

அவரின் இன்றைய நிலை...

நேற்று ஜெ வைகோவிற்கு..ஆதரவாக சிவகாசி அருகே ஒரு கூட்டத்தில் பேசினார்...அப்போது வேட்பாளர் வைகோவை அறிமுகப்படுத்தினார்.ஒரு கட்சியின் தலைவர் ...அறிமுகப்படுத்தப்படுகிறார்.
அந்த புகைப்படத்தைப் பாருங்கள்.அதற்குமேல் எழுத்துக்களால் சொல்லமுடியப் போவதில்லை.

(இதே வைகோ..மனுதாக்கல் செய்தபோது...அதிகாரி உட்கார்ந்து மனுவை பெற்றுக்கொண்டார் என்பதற்காக...நின்று வாங்கமுடியாதா? என்று கேட்டார்.உட்கார்ந்து வாங்கினால் தனக்கு அவமானம்
என்ற ரீதியில்.)

Wednesday, April 22, 2009

சரத்பாபுவிற்கு நீங்கள் ஏன் ஓட்டு போடக்கூடாது...

கடந்த சிலநாட்களாக சரத்பாபு என்ற பெயர் அடிக்கடி பதிவுகளில் காணமுடிகிறது.அவர் I.I.M.,ல் M.B.A.,படித்த இளைஞர் ..இட்லிக்கடைவைத்து அனேகருக்கு வேலை கொடுத்துள்ளவர் என்றெல்லாம் எழுதுகிறார்கள்.

இப்படி எழுதுவதையே கண்டிக்கிறேன்...ஐ.ஐ.எம்.,ல் அட்மிஷன் கிடைக்க எவ்வளவு கடுமையான போட்டி நிலவுகிறது...ஒரு பட்டதாரியை உருவாக்க அரசு பணம் லட்சக்கணக்கில் செலவாகிறது.அப்படி அரசு பணத்தில் படித்தவர்...(அம்மா கஷ்டப்பட்டு இட்லி விற்று படிக்கவைத்திருந்தாலும்)..ஒரு சிறந்த துறையில் ஈடுபட்டு...இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு தன் பங்கிற்கு ஏதேனும் செய்திருக்கலாம்.இட்லி வியாபாரம் செய்து தொழிலதிபர் ஆக இப்படிப்பை பயன்படுத்தி இருக்க வேண்டாம் என்றே தோன்றுகிறது.முருகன் இட்லி கடை அதிபர் ஐ.ஐ.எம்.படிக்காமலேயே அனேகருக்கு வேலை கொடுத்துள்ளார்.

சரி...அதுதான் போகட்டும்..என்றால்..எம்.பி., தேர்தலில் நிற்கிறாராம்..சுயேச்சையாக.கண்டிப்பாக வெற்றி அடைய முடியாது எனத் தெரியும்..இருந்தும் ஏன் நிற்கிறார்...இவருக்கும் அரசியல் ஆசை வந்து விட்டது எனலாம்.மக்களுக்கு சேவை செய்ய..அரசியலில் தான் ஈடுபட வேண்டும் என்று இல்லை.சமுதாயத்தில் பின் தங்கியவர்கள்..ஆதரவற்றோர் ஆகியவருக்கு இவர் தன்னால் முடிந்தவிதத்தில் உதவலாம்.ஒரு ராஜாராம்,ஒரு வித்யாகர் ஆக ஆகலாம்...அதைவிட்டு..ஒரு பாலு ஆக ஆசைப்படுவது...இப்போது...இவ்வயதில்...இவருக்கு தேவையில்லை.மலிவான விளம்பரத்திற்கு ஆசைப்படுகிறாரோ?

அப்படியே ஆசை இருக்குமானால்...ஒரு கட்சியில் சேரட்டும்...அடுத்து வரும் தேர்தல்களில் முயலட்டும்...

சுயேச்சைகள் வெற்றிபெரும் வாய்ப்பு இந்தியாவில் இல்லை.அப்படி வெற்றி பெறுவதானால்...எம்.எஸ்.உதயமூர்த்தி வெற்றி பெற்றிருப்பார்.ஜெயகாந்தன் வெற்றி பெற்றிருப்பார்.எஸ்.வி.,சேகர் அவருக்கு பழக்கமான...கிட்டத்தட்ட அனைவரையும் அறிந்த மைலாப்பூர் சட்டமன்ற தொகுதியிலேயே சுயேச்சையாக 1500 ஓட்டுகளே வாங்க முடிந்தது.சுயேச்சையாக வெற்றி பெற தாமரைக்கனியா இவர்?

ஆகவே...நண்பர் சரத்பாபு அவர்களுக்கு...அரசியல் ஆசை இவ்வளவு சீக்கிரம் வந்திருக்க வேண்டிய தேவையில்லை.

உங்கள் ஓட்டு வீணாகவேண்டுமானால்..அவருக்கு ஓட்டளியுங்கள்.

காங்கிரசிற்கு எதிராக ரஜினி ??

அரசியல் கட்சிகளே இதுவரை கிளப்பாத முழக்கத்தோடு ஈழப் போராட்டத்தில் ‘ரீ என்ட்ரி’ ஆகியிருக்கிறது தமிழ்த் திரையுலகம்.
”இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவிக்கும் போரை நடத்திவரும் சோனியாவை தமிழகத் துக்குள் விடமாட்டோம்!” என்பதுதான் தமிழ்த் திரையுலகத்தின் தடதட முழக்கம்.
ம.தி.மு.க. அலுவலகமான தாயகத்தில் உண்ணாவிரதம் இருக்கும் பெண்கள் அமைப்பினரைச் சந்திக்க இயக்குநர் பாரதிராஜா தலைமையில் சென்றனர் திரைத்துறை பிரமுகர்கள். அங்கேயே மைக் பிடித்து மத்திய அரசுக்கு எதிராகவும், குறிப்பாக சோனியாவுக்கு எதிராகவும் கொந்தளிக்கத் தொடங்கி விட்டார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட, சினிமாத் துறையின் முக்கிய ஆட்கள் பலருக்கும் ஈழத் துயரங்களின் படங்களும் செய்திகளும் மெயிலில் வந்துகொண்டே இருக்கின்றன. அதனால்தான் இயக்குநர் பாரதிராஜாவோடு உணர்வாளர்கள் பலரும் கலந்து பேசி, காங்கிரஸ் போட்டியிடும் பதினாறு தொகுதிகளிலும் திரையுலகத்தினர் தீவிரப் பிரசாரம் செய்ய முடிவெடுத்துள்ளோம்.
சோனியா தேர்தல் பிரசாரத்துக்காகத் தமிழகம் வரும் பட்சத்தில், எங்கள் எதிர்ப்பைக் கடுமையாக காட்டுவோம். அங்கே தமிழர்களையும், இங்கே தமிழர்களின் உணர்வுகளையும் கொன்றுவிட்டு, தமிழகத்துக்கு சோனியா வரக் கூடாது!” என்றவர்கள் தொடர்ந்தனர்.
”கட்சி சார்பான திரைப் புள்ளிகள் மூலமாக எங்களைப் பிளவுபடுத்தும் முயற்சிகளும் நடந்தது. அதை முறியடிக்கத்தான் ‘தமிழ்த் திரையுலக தமிழ் ஈழ ஆதரவு உணர்வுக் குழு’ என்ற பெயரில் தனி அமைப்பு தொடங்கியிருக்கிறோம். அதன் சார்பாக காங்கிரசுக்கு எதிராக இயக்குநர்கள் அமீர், சீமான் இருவரையும் தேர்தலில் போட்டியிட வைக்கவும் முடிவெடுத்திருக்கிறோம்.
ஈழப் போரைக் கண்டித்து நடந்த உண்ணாவிரதத்தில், ராஜபக்ஷேவுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த், எங்களுக்கு மிகப் பெரிய சக்தி.
பாரதிராஜா, சத்யராஜ், அமீர் போன்றோரின் வேண்டுகோளை ஏற்று, ரஜினிகாந்த்தும் காங்கிரசுக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொள்ள சம்மதித்திருக்கிறார்.
அதோடு, உண்ணாவிரதப் போராட்டத்தின்போது ரஜினி பேசிய பேச்சை கேஸட்டுகளாகப் போட்டு, எங்கள் பிரசாரத்துக்குப் பயன்படுத்துவோம்.
பெங்களூருவில் இருக்கும் ரஜினி மன்றங்கள் எல்லாம் ஈழ விவகாரத்தைக் கையில் எடுத்துப் போராடிக் கொண்டிருக்க, இங்கேயுள்ள ரஜினி மன்றங்களும், விஜய், அஜீத் போன்ற மற்ற நடிகர்களின் மன்றங்களும் எங்கள் போராட்டத்தில் இணைந்துகொள்ளும் என நம்புகிறோம்.
அஜீத்கூட தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களை ஈழத் தமிழர் விவகாரத்துக்காக ரத்து செய் திருக்கிறார்!” என்றனர்.
இயக்குநர்கள் இப்படிப் போராட… உதவி இயக்குநர்களும், ‘தமிழ் ஈழ ஆதரவு உதவி இயக்குநர்கள் சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, காங்கிரஸ் போட்டியிடும் பதினாறு தொகுதிகளுக்கும் போய்… காங்கிரஸ் எதிர்ப்புப் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனராம்.

சாவின் விளிம்பில் நிற்கும் தமிழினத்துக்கு இப்போதுகூட உதவ முன்வராமல், காங்கிரஸ் அரசு வேடிக்கை பார்த்தால்… அதற்கான விளைவுகளை அவர்கள் இந்தத் தேர்தலில் அனுபவித்தே தீருவார்கள்.
பிரசாரம், போட்டி குறித்தெல்லாம் இப்போதைக்கு ஏதும் சொல்ல முடியாது. தமிழ்த் திரையுலக தமிழீழ ஆதரவு உணர்வுக் குழு என்ன முடிவெடுத்தாலும் சரி, அதற்கு நானும் சீமானும் கட்டுப்படுவோம்!” என்றார்.
திரையுலக எதிர்ப்பு குறித்து தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்க பாலுவிடம் கேட்டோம். ”காங்கிரஸின் எத்தகைய முடிவையும் மேலிடத்திடம் கலந்து பேசித்தான் சொல்ல முடியும்!” என்றார் வழக்கமான காங்கிரஸ்குரலில்.
இதற்கிடையில் பி.ஜே.பி. தரப்பில் ரஜினியைத் தொடர்புகொண்ட சிலர், ‘ஈழ விவகாரத்தைக் கையில் எடுத்து காங்கிரஸை வீழ்த்துங்கள்!’ என சைலன்ட் அசைன்மென்ட் கொடுத்திருப்பதாகக் கிளம்பி இருக்கும் பேச்சும் காங்கிரஸை காய்ச்சலில் ஆழ்த்தி இருக்கிறது!

(எனக்கு வந்த மின்னஞ்சல் )

Tuesday, April 21, 2009

பூனைக்கும் தோழன்..பாலுக்கும் காவலா கலைஞர்?

இலங்கை தமிழருக்காக நான் குரல் கொடுப்பதை நாடகம் என்றும்..மோசடி என்றும்...விமரிசனம் செய்வதை என்னால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை.

மத்திய அரசை நான் வலியுறுத்தவில்லையா?

கடிதம் எழுதவில்லையா?

பிரதமரை சந்திக்கவில்லையா?

சோனியாவை பார்க்கவில்லையா?

பிரணாப்முகர்ஜியை சென்னைக்கு வரச்செய்து பேசவில்லையா?

ப.சிதம்பரத்திடம் விவாதிக்கவில்லையா?

தந்திகள் கொடுக்கவில்லையா?

அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தவில்லையா?

மனித சங்கலி நடத்தவில்லையா?

நீதி அரசர்கள் கொண்ட குழுவை..தில்லிக்கு அனுப்பி குடியரசு தலைவர், சோனியா ஆகியோருடன் பேசச் செய்யவில்லையா?

என்ன செய்யவில்லை? இவ்வளவு செய்தும் ..அரசியலுக்காக நான் நாடகம் ஆடுகிறேன் என இவர்கள் கூறலாமா?

(சமீபத்தில் நடந்த பேரணி...நாளைக்கு நடக்க இருக்கும்..பொது வேலைநிறுத்தம்..இதை சொல்ல ஏன் மறந்தார்?)

கூறுபவர்கள் கூறட்டும்...கூர்த்த மதி படைத்தோர்க்கு..உண்மை புரியும் ...என...இலங்கை தமிழர் பிரச்னைக்காக கண்ணிர் வடிக்கும் கலைஞர் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்...மத்திய அரசைப் பொறுத்தவரை இது இன்னொரு நாட்டு பிரச்னை.மிகுந்த எச்சரிக்கையுடனும்..கவனத்தோடும் அணுகிட வேண்டிய பிரச்னை..என்றும் கூறியுள்ளார்.

Monday, April 20, 2009

மாறன் துதி பாடும் ஆற்காட்டார்...

இந்தியா முழுதும் ஒரு ரூபாயில் ஃபோனில் பேச வசதி செய்தவர் தயாநிதி மாறன் என மாறன் புகழ் பாடுகிறார் வீராசாமி.

அவருக்கும்...மாறன் பிரதர்ஸிற்கும் ஏழாம் பொருத்தம் என நாம் அறிவோம்.கலைஞருடன் மாறனை ஒட்டவிடாமல் தடுத்ததில் அவருக்கும் பங்கு உண்டு.

இந்நிலையில்...நேற்று அண்ணாநகரில் தேர்தல் அலுவலகம் திறந்த ஆற்காட்டார் பேசுகையில்...'தகவல் தொடர்புத்துறைக்கு எத்தனையோ அமைச்சர்கள் இருந்திருக்கின்றனர்.ஆனால் அனைத்திலும் முதன்மையாக திகழ்ந்தவர் மாறன்.அவரது திறமையால் இப்பொது 40 கோடி பேர் செல்ஃபோன் வைத்திருக்கிறார்கள்.கிராமங்கள்தோறும் டெலிஃபோன் வசதி உள்ளது..என மாறன் புகழ் பாடினார்...

இதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் ஏன் கீழ்க்கண்டவற்றை கேட்கவில்லை...

அவர் திறமையானவர் என தெரிந்தும்...அவர் பதவியை ஏன் பறித்தீர்கள்?

தினகரன் சர்வேயாலா...அப்படியெனில்...திறமையைவிட குடும்ப நலன் முக்கியமா?

அவர் தி.மு.க.வில் இருந்தபோதே...அவரை விலக்கிவிட்டு அவரைவிட திறமை குறைந்த (??!!)வரை அவர் பதவிக்கு ஏன் நியமிக்க வேண்டும்..

திறமையானவர்களுக்கு...மக்களுக்கு நன்மை செய்தவர்க்கு...இப்படிப்பட்ட பரிசைதான் கட்சி வழங்குமா?

இல்லை...ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு துணைபோக மாறன் மறுத்தாரா?

குடும்ப சர்ச்சை தீர்ந்ததும்தான்...மீண்டும் திறமை கண்களில் பட்டதா?

இப்பதிவு திரித்துக் கூறப்பட்டது என சொல்லமுடியாது என எண்ணுகிறேன்.

கருணாநிதியின் பல்டி...

என்டிடிவிக்கு கலைஞர் பேட்டி கொடுத்துவிட்டு...பின்னர்...அவர் பேட்டி திரித்துக் கூறப்பட்டது..என்று பல்டி அடித்தாரே அதைப்பற்றிய பதிவு அல்ல இது.உடன் NDTV யே..தி.மு.க.விற்கு எதிரானது என்றும் கூறினார்.அப்படியென்றால் அவர் ஏன் பேட்டி கொடுக்க வேண்டும்.

இருப்பினும்..அப்பேட்டி பற்றி..எனது சிறு கருத்து...பேட்டியாளர் தமிழில் கேள்வி கேட்டிருக்கலாம்.அவர் ஆங்கிலத்தில் கேள்வி கேட்கப்போக..கலைஞரும் ஆர்வத்தில்..ஒரிரெண்டு ஆங்கிலத்தில் பேசினார்.பின் கேள்வியை சரியாக புரிந்துக்கொள்ளாமல் பதிலளித்து ம் விட்டார் என்றே எண்ணுகிறேன்..ஏனெனில்..கனிமொழியின் முகத்தில் அப்போது கவலை ரேகைகள் படிந்ததைப் பார்க்கமுடிகிறது.உடன் பேரன் இருந்திருந்தால்,
வயதான காலத்தில் பல்டி அடிக்கும் நிலை ஏற்பட்டிருக்காது என்றே எண்ணுகிறேன்.

சரி..தலைப்புக்கு வருவோம்...

ஆரம்பத்திலிருந்தே..வெற்றி நமதே...40ம் நமதே என்றவர்..இப்போது 30 இடங்களில் நாங்கள் வெல்வோம்..என்கிறார்.சுருதி சற்று குறைந்து விட்டது.

மேலும் ..கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு என்பதுபோல...காங்கிரஸ்காரர்களுக்கு செல்லும் இடமெல்லாம்...எதிர்ப்பு வலுக்கிறது.

இனிவரும் காலங்களில் கலைஞர் மீண்டும் ஒரு பல்டி அடித்து..தன் வேட்பாளர்களைப்பற்றி மட்டுமே கவலைப்பட ஆரம்பிப்பார் எனத் தெரிகிறது.

Sunday, April 19, 2009

ஒற்றுமையாய் இருங்கள்..காங்கிரஸிற்கு தி.மு.க.அமைச்சர் அறிவுரை..

தமிழக காங்கிரஸ் தலைவரும்...சேலம் நாடாளுமன்றத்திற்கான வேட்பாளருமான தங்கபாலு நேற்று சேலத்தில்...கூட்டணி கட்சி உறுப்பினர்கள்...மற்றும் கட்சி ஊழியர்களுடன் பேசினார்.

அப்போது காங்கிரஸ் ஊழியர்கள் அவரை பேசவிடாது தடுத்தனர்.அவருக்கு எதிராக கோஷங்கள் போட்டனர்.

கூட்டத்திற்கு...தி.மு.க., அமைச்சரும், சேலம் மாவட்ட தி.மு.க., தலைவருமான வீரபாண்டி ஆறுமுகம் வந்திருந்தார்.நிலைமை கட்டுக்கடங்காமல் போவதைக் கண்ட அவர்...'இது தனிப்பட்ட மனிதருக்கான எதிர்ப்பை காட்டும் நேரமில்லை என்றும்..அனைவரும் தங்கபாலு வெற்றிக்கு பாடுபடவேண்டும்'என்றும் கூறினார்.

காங்கிரஸ் ஊழியர்களை சமாதானப் படுத்திய அவர்...மேலும் கூறுகையில்..'வேட்பாளர் யார் என்பது முக்கியமில்லை..யார் வேட்பாளராயிருந்தாலும்..அவர் சோனியா காந்தியால் நியமிக்கப்பட்டவர்.அவர் வெற்றிக்கு நாம் பாடுபட வேண்டும்.காங்கிரஸ்காரர்கள் ஒற்றுமையாய் இருக்க வேண்டும்.அதுதான் முதலில் அவசியம்...அப்போதுதான்...நம்முடன் 5 ஆண்டுகள் இருந்து பதவி அனுபவித்துப் போனவர்களுக்கு பாடம் கற்பிக்க முடியும்' என்றார்.

ஒரு மாநில தேசிய கட்சியின் தலைவரால்..தன் கட்சி ஊழியர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை...வேறு கூட்டணிக் கட்சி தலைவரால்தான் அது முடிகிறது..என்றால்...ஒரு திறமையற்றவரை தலைவராக்கியது யார் குற்றம்.

காங்கிரஸின் முதல் தோல்வி சேலத்தில் ஆரம்பிக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

Friday, April 17, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் - 8

1961ல் வந்த படங்கள்
பாவமன்னிப்பு
புனர்ஜென்மம்
பாசமலர்
எல்லாம் உனக்காக
ஸ்ரீவள்ளி
மருத நாட்டு வீரன்
பாலும் பழமும்
கப்பலோட்டிய தமிழன்

சிவாஜி ரசிகர்களுக்கு மட்டுமின்றி...தமிழ்த் திரை உலகிற்கே மறக்க முடியா ஆண்டு. சிவாஜியின் அமர காவியங்கள் வெளியான ஆண்டு.

பாவமன்னிப்பு...சிவாஜி..பீம்சிங் கூட்டணி...ஜெமினி, சாவித்திரி,தேவிகா,ராதா..என நட்சத்திர கூட்டம்.தவிர அனைத்து பாடல்கலும் தேன்.விஸ்வனாதன்-ராமமூர்த்தி இசை.முதன்முறையாக இசைத்தட்டுகள் அதிக அளவில் விற்கப்பட்டது..இந்த படத்திற்குத்தான்.சாந்தி திரை அரங்கில் வெள்ளிவிழா கொண்டாட்டம்.தேசிய அளவில் இரண்டாம் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு வெள்ளிபதக்கம் பரிசு பெற்ற படம்.

பாசமலர்...அண்ணன் தங்கை பாசம்...இன்று பாசத்துடன் இருக்கும் அண்ணன்-தங்கைகளைப் பார்த்து அவர்கள் பாசமலர்கள்..என்று சொல்லும் அளவு அனைவரையும் பாதித்த படம்.அருமையான பாடல்கள்..வெள்ளிவிழா படம்.தமிழின் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட படம்.சாவித்திரி...சிவாஜி..இருவரும் நடிக்கவில்லை...பாத்திரங்களாகவே வாழ்ந்தார்கள்.

பாலும் பழமும்...சரோஜாதேவியுடன் நடிகர்திலகம்..நல்ல பாடல்கள்..திறமையான நடிப்பு..ஆகியவற்றிற்காக 100 நாட்கள் ஓடிய வெற்றி படம்.

கப்பலோட்டியதமிழன்....படம் பார்த்த வா.உ.சி., குடும்பமே சிவாஜி அந்த பாத்திரத்தில்..வா.உ.சி., போலவே இருந்ததாக பாராட்டினர்.படம் ஆனால் உழைப்பிற்கேற்ற பலன் தரவில்லை.தோல்வி. ஆனாலும்..தேசிய அளவில் தேசிய ஒற்றுமைக்கான பட விருது பெற்றது.

மற்றபடி...ஸ்ரீதரின் புனர்ஜென்மம்,எல்லாம் உனக்காக,ஸ்ரீவள்ளி, மருதநாட்டுவீரன் ஆகியவை எண்ணிக்கையை மட்டுமே அதிகரித்தன.

இந்த ஆண்டு..கடந்த இரு வருடங்களில் 5 வெள்ளிவிழா படத்தைக் கொடுத்த சிவாஜி ஆண்டு
கட்டபொம்மன்,பாகப்பிரிவினை,இரும்புத்திரை,பாவமன்னிப்பு,பாசமலர்.
சிவாஜி படத்திற்கே 3 தேசிய விருதுகள் கிடைத்த ஆண்டு.

1962 படங்கள் அடுத்த பதிவில்.

Thursday, April 16, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (17-4-09)

1.தமிழ்மீது பற்றுக்கொண்ட சூரிய நாராயண சாஸ்திரியார் தன் பெயரை பரிதிமாற்கலைஞர் என மாற்றிக்கொண்டார்.அவர் ஒரு நாள் இலக்கணப்பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.அப்போது ஒரு மாணவன் எழுந்து 'ஐயா..நீங்கள் நடத்திய பாடத்தில் சீர் புரிகிறது.தளை புரிகிறது..தொடை புரிகிறது...அதற்கு மேல் ஒன்றும் புரியவில்லை...அதை சற்று விளக்கமாகக் கூறுங்கள் என்றான்.
அவனது கிண்டலைப் புரிந்துக் கொண்ட ஆசிரியர் 'தனியே என் அறைக்கு வா...விளக்குமாற்றால் விளக்குகிறேன்' என்றார்.வகுப்பு முழுதும் சிரித்தது.மாணவன் வெட்கி தலை குனிந்தான்.
(விளக்குமாற்றால்..இரு பொருள்..ஒன்று..துடைப்பத்தால்..மற்றும் ஒன்று..விளக்குமாற்றால்...விளக்கும் வழியில்)

2.ஆறறிவு என்கிறோமே..அப்படி என்றால்? உடல்,நாக்கு,மூக்கு,கண்,காது,இதயம் ஆகியவற்றால் அறிவதே ஆகும்.இது மனிதர்களுக்கு சரிதானே.

3.அம்மாவோ..அப்பாவோ..கட்டுப்பாடு என்ற பெயரில்..தங்கள் குழந்தைகளை அடித்து நொறுக்குவார்கள்.பெற்றோரை எதிர்த்து..பதில் தாக்குதல் நடத்த முடியாத குழந்தைகள் மனதில் ஆற்றாமை இருந்துக்கொண்டே இருக்கும்.அதனால் பெற்றோரை பழி வாங்குகிறேன் என நமக்கு விருப்பமில்லா காரியங்களை செய்துக்கொண்டிருப்பார்கள்.இப்படிப்பட்ட குழந்தைகள் வளர்ந்த பின்னும்..சட்டத்துக்கு புறம்பான காரியங்களை சர்வசாதாரணமாக செய்வார்கள்.

4.ஒரு கட்சியினுடைய வலிமை..அதனுடைய சுய பலத்தில் இல்லை.,அந்தக் கட்சியை எதிர்க்கிற எதிர்க்கட்சிகளின் வலிமையில்தான் இருக்கிறது. _ அண்ணா

5.எப்போதும் விருப்பத்திற்குரியதாக இருப்பது சமயத்தில் அதிக பட்ச வெறுப்புக்கு உள்ளாகும்.

6.தேர்தல் நடக்கிறது
நாடெங்கும் நடக்கிறது
பணபரிமாற்றங்கள்
கறுப்பு வெள்ளையாகிறது
களங்கமில்லா காந்தியின்
சிரிப்புடன்.

7.தலைவா...நம்ம கட்சியில கேடிகள் அதிகமாயிட்டாங்க..
அதனால் என்னா..அவர்களுக்கும் சில கோடிகளை தள்ளிவிடுவோம்.

அம்மன் துதி பாடும் மருத்துவர் அய்யா...

நேற்று சென்னையில் அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகம் செய்யும் கூட்டம் நடந்தது.இனி மேல் வேட்பாளர் மாற்றம் வராது என நம்புவோமாக.

வெளியூர்களிலிருந்து பல வேன்களில் தொண்டர் கூட்டம் குவிந்தது.அலுவலகம் முடிந்து வீடு திரும்பும்...சாமான்யர்கள் பேருந்தில்...வாகன நெரிசல்களில் மாட்டிக்கொண்டு..வழக்கத்தைவிட ஓரிரு மணிகள் தாமதமாக வீடு போய் சேர்ந்தனர்.மே 13 வரை...இந்த நிலைதான்...என ஆங்காங்கே முணுமுணுப்புகள் இருந்தன.

கூட்டணி தலைவர்கள் பிரகாஷ் காரத்,ஏ.பி.பரதன்,ராஜா,வைகோ,வரதராஜன்,பாண்டியன் ஆகியோர்கள் பேசினர். வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி ஜெ பேசினார்.

ஆமாம்...முக்கியமான ஒருவர் எங்கே என்கிறீர்களா?

அந்த தலைவர் பேசவில்லை...ஜெ துதி பாடினார்.அவர் பேச்சின் சாரம்..

ஜெ..யின் பக்கம்தான் மக்கள் சக்தி இருக்கின்றது.தி.மு.க.,விற்கு எதிர் அலை வீசத் தொடங்கிவிட்டது.2008ல் வெள்ளம் வந்த போது கலைஞர் 1510 கோடி கேட்டார்...200 கோடிதான் கிடைத்தது.2005 வெள்ளத்தின் போது..முதலில் 500 கோடிகேட்டார் ஜெ அந்த தொகை கிடைத்தது.மீண்டும் 500 கோடி கேட்டார்.அதுவும் கிடைத்தது.காரணம் ராசி ஒருபக்கம் இருந்தாலும்..முகராசி என்ற ஒன்றும் உண்டு.(கலைஞருக்கு முகராசி இல்லை என்கிறாரோ?)

ஜெ பேசுகையில்...தமிழகம் சுட்டிக்காட்டுபவரே...இந்தியாவின் அடுத்த பிரதமர் ஆவார் என்றார்.???!!!

ராகுல் திராவிடும்...காம்பீரும்...மற்றும் நானும்

இந்திய கிரிக்கட்டில் சுவர் என்று வர்ணிக்கப்பட்டவர் ராகுல் திராவிட்..ரன் எடுக்காமலேயே..களத்தில் அதிக பந்துகளையும் சந்தித்து..மேட்சை டிரா செய்துள்ளார்.

இதற்கு முன்னால் ஓட்டங்கள் எடுப்பதில் ஆமையுடன் ஒப்பிடப்பட்டவர் ரவிசாஸ்திரி..

ஒருநாள் போட்டியில்37 ஓட்டங்களே எடுக்க அதிக பந்துகளை சந்தித்த சாதனையாளர் கவாஸ்கர்.

சமீபத்தில் நியூஸிலாந்த்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில்...இரண்டாவது மேட்சில்...காம்பீர்..நின்று நெடு நேரம் களத்தில் நின்றதால்...அந்த மேட்ச் டிரா ஆனது.காம்பீரும் திராவிடுடன் ஒப்பிடப்பட்டு இரண்டாவது சுவர் என அழைக்கப்பட்டார்.

ஆமாம்...இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்கிறீர்களா...கிட்டத்தட்ட 10 மாதங்களாக தமிழ்மணத்தில் பதிவிட்டு வரும் எனக்கு...இன்று 50 ஆவது ஃபாலோயர் வந்திருக்கிறார்.

இது...திராவிடின் சாதனையையும் முறியடிக்கும் சாதனைதானே..

(இப்பதிவிடும்போது 50 பேர்..சொல்லமுடியாது...இந்நேரம் ஓரிருவர் கழட்டிக்கோண்டிருந்தாலும் கழட்டிக்கொண்டிருப்பர்.)

Wednesday, April 15, 2009

தேர்தலுக்குப் பின் தி.மு.க.வை, கழற்றிவிடுமா காங்கிரஸ்...

காங்கிரஸை ஜெ தி.மு.க., விட்டு..தன்னிடம் வருமாறு சில தினங்களுக்கு முன் அழைப்பு விடுத்தார்.

ராமதாஸ்...தி.மு.க.,கூட்டணியில் இருந்தாலும்...அது..காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி என்று சொல்லிக் கொண்டிருந்தார்.அ.தி.மு.க.,வில் சேர்வதற்கு முன் அன்புமணி தில்லி சென்று காங்கிரஸ் தலைவர்களை சந்தித்துவிட்டு வந்தார்.

இந்நிலையில் ஜெ...நேற்று தேர்தலுக்குப் பின் அணிகள் மாறும் என்று கூறியுள்ளார்.இதனால் பா.ஜ.க., கனவு கண்டுக் கொண்டிருக்கிறது.

ராமதாஸோ...மக்களவைத் தேர்தலுக்குப் பின் ஆட்சி மாறும் என்று கூறிவிட்டு...தமிழகத்தில் காமராஜர் ஆட்சி மீண்டும் உருவாக வேண்டும் என்பது காங்கிரஸ்காரர்கள் கனவு..அவர்கள் கனவு நிறைவேற வேண்டும் என கூறியதாக கூறுகிறார்.

ஜெ வோ தி.மு.க., வினரை விமரிசிப்பது போல காங்கிரஸை விமரிசிப்பதில்லை.

இதைஎல்லாம் பார்க்கையில்...தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் அதிகத் தொகுதிகளில் வெற்றி பெற்று..அறுதிப்பெரும்பான்மை கிடைக்காவிடில்....ஆட்சி அமைக்க..தி.மு.க., வை கழட்டிவிட்டு...அ,தி.மு.க.உடன் கூட்டு சேரும் நிலையும் உருவாகலாம்.அப்போது தமிழகத்திலும் மாற்றங்கள் ஏற்படலாம்...என தெரிகிறது.

கூட இருந்து...யார்..யார்...யார்..யாருக்கு குழி பறிக்கப் போகிறார்கள் என்பது போகப்போக தெரியும்.

Tuesday, April 14, 2009

ஐ.டி. ஊழியர்கள் இனி டீ..காஃபி குடிக்கக்கூடாது

சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக...ஐ.டி., நிறுவனங்கள் பல சிக்கன நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இது தொடர்பாக ஒரு பெரிய நிறுவனம்...தனது ஊழியர்களுக்கு ஒரு இ மெயில் அனுப்பியுள்ளதாம்.அதில்...அந்நிறுவனம் தற்போது சந்தித்து வரும் பிரச்னைகளையும்...அதனால் செலவுகளை குறைக்க எடுத்துள்ள சிக்கன நடவடிக்கைகளையும் பட்டியலிட்டுள்ளதாம்.அதன்படி...

மே மாதம் ஒன்றாம் தேதி முதல்...ஊழியர்களுக்கு பணியின் போது வழங்கி வரும் டீ, காஃபி போன்றவை நிறுத்தப்படுமாம்.

வீட்டில் இருந்து அலுவலக பணியில் ஈடுபடுவோர்க்கு..இன்டெர்னெட் கட்டணத்தை இதுவரை நிறுவனம் வழங்கி வந்ததாம்.அதுவும் இனி ரத்து செய்யப்படுமாம்.அக்கட்டணத்தை இனி ஊழியரே செலுத்த வேண்டுமாம்...

தவிர...இனி அவர்கள் பெற்றுவரும் பல் வேறு சலுகைகளும் ..பல கட்டங்களில் ...படிப்படியாக குறைக்கப்படுமாம்.

இப்படி தகவல்களை அனுப்பியுள்ளது...சாதாரண நிறுவனம் இல்லை...

மிகப்பெரும்..ஐபிஎம் நிறுவனமே..

அட தேவுடா......

Monday, April 13, 2009

வாய் விட்டு சிரியுங்க...(சித்திரை முதல்நாள் ஸ்பெஷல்)

அதோ போறானே அவன் தமிழின துரோகி..
எதை வச்சு சொல்ற
இன்னிக்கு சித்திரை திருநாள்னு சொல்லாமே...தமிழ் புத்தாண்டுன்னு சொல்றான்.

2.ஆமாம்...இன்னிக்கு வெறும்..சித்திரை மாதம் பிறப்புதானே...பின் டி.வி.யில் ஏன் பண்டிகைநாள் போல நிகழ்ச்சிகள்.அவர்களை என்ன துரோகிகள்னு சொல்லணும்னு அதி புத்திசாலி அண்ணாசாமியின் சந்தேகம்.

3.தமிழ் புத்தாண்டை மாத்தினதாலே...புத்தாண்டும் விரோதியா பிறக்குது.

4.இன்று எந்த படமும் வெளியாகவில்லை..-செய்தி
அதனால் என்ன...கலைஞர்..சன் எல்லாவற்றிலும்..காலை..மாலை..இரவு என 3 படங்கள் உண்டே..

5.மயிலைக் கண்டு ஆடும் வான்கோழி போல ஏண்டா ஆடிக்கிட்டு இருக்க
மானாடா...மயிலாட நிகழ்ச்சில ஆடப்போறேன்..

6.இன்னிக்கு சந்திரன் பிரகாசமா இருக்கே ஏன்?
சூரியன் முன்னால நிற்கப்போகுதே..அதுதான்..ஆனால் அதன் ஒளியே சூரியனாலேன்னு மறந்து போச்சே..

7.இன்னிக்கு அம்பேத்கர் பிறந்த நாள்..நல்லவேளை அதையும் தைத்திங்களன்று மாற்றவில்லை...என்கிறார் ஒரு அபிமானி.

மீண்டும் கிளம்பிய இடத்திற்கு வரும் இயக்குர் பாலசந்தர் ..

ரவிஷங்கர் இதைப்பற்றி ஒரு பதிவு போட்டு, என் கருத்தைக் கேட்டிருந்தார்.அதனால் இப்பதிவு...நன்றி ரவி...

பாலசந்தர் கதை , இயக்கத்தில் 'பௌர்ணமி' என்ற நாடகம் 18-4-09 அன்று அரங்கேறுகிறது.

தன் பயணத்தை தொடக்கிய இடத்திற்கு அவர் மீண்டும் வந்துள்ளார்.நாடக உலகிலிருந்து...நாகேஷ்,சௌகார் ஜானகி,மேஜர் ஆகியவர்கள் துணையுடன் வெள்ளித்திரையில் நுழைந்தார்.அனந்து இவரின் வலதுகரமாக திகழ்ந்தார்.(அவர் மறைவிற்கு பின்..இவரால் வெற்றிப்படத்தை தரமுடியவில்லை என்பது மறுக்கமுடியா உண்மை)

இவரின் பல படங்களின் ஆங்கில படங்களின் பாதிப்பு இருந்ததுண்டு.தாமரை நெஞ்சம்..வங்கக்கதை....சத்யகம் ஹிந்தி படம் புன்னகை ஆயிற்று.தண்ணீர் தண்ணீர் கோமலின் எழுத்து..இருகோடுகள் ஜோசப் ஆனந்தன்...அவள் ஒரு தொடர்கதை..எம்.எஸ்.பெருமாளுடையது.இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.பின் சில காலம் விசுவுடன் காலம் தள்ளினார்.

வெள்ளித்திரை வெற்றி சற்று மங்கியதும்...சின்னத்திரைக்கு வந்தார்.இதனிடையே பல இயக்குநர்கள் மூலம்...ரஜினி போன்றோரை வைத்து படமெடுத்து காசு பார்த்தார்.சின்னத்திரையில் இளைப்பாறி முடிந்ததும்..மீண்டும் நாடகத்திற்கு வந்திருக்கிறார்.

திரையுலகில்..பிரபலமாகியும் நாடகத்தை மறக்காதவர்கள்...சிவாஜி,மனோகர்,சகஸ்ரநாமம் போன்றோரே.இன்று இந்த பட்டியலில் எஸ்.வி.சேகர்,மகேந்திரன்,மோகன் ஆகியோரைச் சொல்லலாம்.மற்றவரெல்லாம்...வசதி வந்ததும் தாய் வீட்டை மறந்தவர்கள்தான்.

இந்நிலையில்...நலிந்து..மரணப்படுக்கையில் கிடக்கும் நாடகத்தை சாகவிடாமல்..அமைச்சூர் நாடகக் குழுக்களே காத்து வருகின்றன.லாப..நஷ்டம் பாராது...இவர்கள் இன்று நாடகக் குழுக்களை நடத்தி வருகின்றனர்.

வெள்ளித்திரைக்கு போனதும்...100 படங்களுக்கு மேல் இயக்கிவிட்டு... பின் தொலைக்காட்சி தொடர்கள் பக்கம் வந்து...சமீபகாலமாக வெற்றியை சுவைக்காதவர் பழைய குருடி... யாய் நாடகத்திற்கு வந்திருக்கிறார்.

உண்மையிலேயே..இவருக்கு நாடகப் பற்று இருக்குமேயாயின்...தன் கதை, இயக்கத்தில்..இன்று இயங்கிவரும்..அமைச்சூர் குழுக்களை வைத்துக் கொண்டு நாடகம் நடத்த வேண்டும்.

அதை விடுத்து..சின்னத்திரை நடிகர்களான ரேணுகா, பூவிலங்கு மோகன் (இவர் கோமல் குழுவில் இருந்தவர்..வெள்ளித்திரை,சின்னத்திரை நடிகர் ஆனதும் நாடகத்தை மறந்தவர்)போன்றோரை வைத்து நாடகம் போடுவதென்பது...வியாபார நோக்கோடுதான் இருக்க முடியும்.

இவரால்...மாதம்..ஒன்றிரெண்டு நாடகத்திற்கான சந்தர்ப்பங்கள் கிடைத்துக் கொண்டிருந்த குழுக்களுக்கு அவை இல்லாமல் போவதற்கான சாத்தியகூறுகள் உள்ளன.

இதைத்தவிர...இவரால் இன்று ஒன்றையும் சாதிக்க முடியப் போவதில்லை.

பாரதிராஜாவும்...பொம்மலாட்டமும்...

பாரதிராஜாவின் 'பொம்மலாட்டம்' படம் வந்த போது...நான் சென்னையில் இல்லை..ஆனால்..படத்திற்கான விமரிசனங்கள் கண்டு..அப்படம் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என எண்ணியிருந்தேன்.

சென்னைக்கு நான் வந்ததும்...விசாரித்ததில்..படம் தோல்வி...தியேட்டர்களில் இருந்து படத்தை எடுத்துவிட்டார்கள் என்றனர்.

செகண்ட் ரன் ..வருமா..என பார்த்தேன் அதுவும் இல்லை..

நேற்றுதான் பார்த்தேன்..ஆச்சர்யம் அடைந்தேன்...

என்னவொரு அருமையான கதை அமைப்பு, திறமையான எடிட்டிங், நானாபடேகரின் மிகையில்லா அற்புத நடிப்பு, எதிர்பாரா முடிவு...

பாரதிராஜா...சார்...உங்களுக்கு என் சல்யூட்..

படிக்காதவங்களும்...வில்லுகளும்..நிறைந்துள்ள இந்நாளில் உங்கள் பொம்மை விலைபோவது சிரமம்தான்..யாவரும்நலம் என்பார்கள்..ஆனால் நலம் இல்லை.

பணநெருக்கடியிருந்தும்...படம் முடிந்தும்...வெளியிட சிரமப்பட்டீர்கள் என படித்தேன்...

உங்கள் திறமையை புரிந்துக்கொள்ளா..ரசனை...இதில் தரமான உங்கள் படம் ஓடாதது ஆச்சர்யம் தரவில்லை.

மீண்டும் ஒரு அருமையான படத்தை செதுக்கி...செதுக்கி தந்ததற்கு நன்றி.

படம் பார்க்காதவர்கள்...திரைக்கு வந்து சில மாதங்களே ஆன...என்று சூரிய,கலைஞ தொலைக்காட்சியில் விரைவில் வரும்...

தவறாமல் பாருங்கள்...அதுதான் அந்த படைப்பாளிக்கு நம்மால் தர முடிந்த மரியாதை.

Sunday, April 12, 2009

ஐயா..சாமிகளே..இனி இலங்கை தமிழர் பற்றி பேசாதீர்கள்...


சமீப காலமாக...இலங்கை தமிழர் பிரச்னைக்கான உருப்படியான காரியம் ஏதும் செய்யாமல்...அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் இந்த விஷயத்தில் குறை சொல்வதையே காணமுடிகிறது.

தேர்தல் அறிவிப்பு வந்ததும்...இந்த செயல் அதிகமாகவே ஆகிவிட்டது..

ஒருவர்...அந்த கட்சியின் மீது பயங்கரமாக பாய்ந்ததுடன்..அவர்களது அலுவலகத்தையே சூறையாடிவிட்டு...இன்று அதே கட்சியினருடன் கூட்டணியில் சேர்ந்து..இரு தொகுதிகள் பெற்றுவிட்டு...40ம் எங்களுடையதே...அதிலும் என் வெற்றி முதல் வெற்றி என கொக்கரிக்கிறார்.

இன்னும் ஒருவர்...நேற்றுவரை அவர்களுடன் இருந்துவிட்டு...பதவி, சுகம் என அனுபவித்துவிட்டு..இன்று வெளியே வந்து...கலைஞர் மத்திய அரசை..இவ்விஷயமாக நிர்பந்திக்க வேண்டும் என வோட்டுக்காக நாடகம் போட்டுக்கொண்டிருக்கிறார்.

ரத்தஆறு ஒடும்..என சீறும்..இவரோ...போர் என்றால்..அப்பாவி மக்களும் உயிர் இழக்கத்தான் நேரிடும்..என்று..சொன்னவருடன்...நான்கு தொகுதி ஆசையில் பூனையாய் விட்டார்.மக்களிடம் புலி..போயஸ்ஸிலோ பூனை.

தேர்தல் அறிவிப்புக்கு முன் ஒரு மாதிரியும்...அறிவிக்குப் பின் ஒருமாதிரியும்..நடந்துக் கொண்ட இவர்..திடீரென அவர்களை ஆதரித்து 8 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து ஆதரவை தேடுகிறார்.

இது விஷயமாக வாயையே திறக்காத இந்திய புஷ்..திடீரென...தமிழருக்கென இலங்கையில் தனி ஒன்றிரெண்டு மாநிலம் வேண்டும் என்கிறார்.அதுவும் யாரிடம்..அவர் போட்டியிடப்போகும் தகுதி மக்களிடம்.உள்ளூரிலாவது விலை போக வேண்டிய ஆசையில்.

60 வருஷ பொது வாழ்க்கை என்றும்..இதற்காக பதவி துறந்தேன் என வாய்க்கு வாய் கூறும்...தமிழின தலைவரோ..'அம்மா தாயே..." என்கிறார்.

அகில இந்திய கட்சிகளான மற்ற இரு கட்சிகள் தொகுதிகளுக்காக தங்கள் கொள்கைகளை அடமானம் வைத்துவிட்டன.தேர்தலுக்குப் பின் கொள்கைகளை மீட்டுவிடும்.

இன்னொரு பிரதமர் ஆகும் ஆசையில் உள்ள கட்சி ராமர் நினைப்பிலேயே..ஆட்சி கனவு காணுகிறது.அதற்கு அதன் கவலை...

நாடாளுமன்ற தேர்தலில்...இலங்கை தமிழர் பிரச்னை..பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும்...இந்த தலைவர்கள் பேசும் வசனங்களும்...போடும் நாடகங்களும்..போறும்டா சாமி என்ற நிலை பொதுமக்களிடம் ஏற்படுத்தி விட்டது.

அமெரிக்க பொருளாதாரம் மேம்பட ஐடியில் அமெரிக்கருக்கு வேலை

ஜென்பேக்ட் பீபிஓ நிறுவனத் தலவரும்..நாஸ்காம் தலைவருமான பிரமோத் பாசின்.. ஒரு பேட்டியில் ...

கடந்த ஆண்டில் சர்வதேச நிதி நெருக்கடியால் அமெரிக்காவில் அநேகம் பேர் வேலை இழந்தனர்.இதற்கு இந்தியாவும் ஒரு காரணம் என்று கூறப்பட்டது.இதன் அடிப்படையில் எச் 1 பி விசாவிற்கு கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்தது.தகவல்,தொழில் நுட்ப சேவையில்..இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவை நம்பி உள்ள நிலையில் இக் கட்டுப்பாடு கவலை அளிக்கிறது.

ஆனால்...உலகம் முழுதும்... பொருளாதார சரிவு உள்ளது..வேலை இழப்பு உள்ளது.ஆகவே யு.எஸ்.ஸில் வேலை இழப்புக்கு இந்தியா காரணம் இல்லை.இந்நிலையில் விசா கட்டுப்பட்டை நீக்க சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்துள்ளோம்.

தகவல், தொழில் நுட்பத் துறையில், அமெரிக்கா முக்கியமான சந்தையாக விளங்குவதால்...அவர்களை சரிவிலிருந்து மீட்க இந்தியா உதவ வேண்டும்.

இந்திய ஐ.டி., நிறுவனங்கள், அமெரிக்கர்களை அதிக அளவில் வேலைக்கு அமர்த்த வேண்டும்.இதன் மூலம் அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சி அடையும்... என்று கூறியுள்ளார்.

Saturday, April 11, 2009

கருத்து வேறுபாடுகள்

மனிதன்..ஆறறிவு படைத்தவன். அவனுக்கென்று விருப்பு,வெறுப்புகள் உண்டு.
சாதாரண விஷயங்களையே எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒருவருக்கு இட்லி.காலை உணவிற்கு பிடிக்கும்..ஒருவருக்கு தோசை இப்படி..
எனக்கு வெளியே செல்ல பேண்ட் போட்டு செல்லப் பிடிக்கும்.
ப.சிதம்பரத்துக்கு பொதுக்கூட்டம்..பார்லிமெண்ட் என்றால் வேஷ்டி பிடிக்கும்.,குடும்பத்துடன் வெளியே செல்ல பேண்ட்..சூட்.,
கலைஞருக்கு மஞ்சள் சால்வை.
ஜெயலலிதாவிற்கு..திலகம் இட்டு..அதை சற்றே அழித்து மேலே நீட்டினாற்போன்று இடுதல் பிடிக்கும்.
ஒருவருக்கு சூப்பர் ஸ்டாரை பிடிக்கும்
மற்றவர்க்கு கமலைப் பிடிக்கும்..
ஒவ்வொருவருக்கும் ஒரு மாறுபட்ட ரசனை..
தான் விரும்புபவரை..மற்றவர் விமரிசத்தால் ..அவரை கீழ்த்தரமாக பேசுவது..அவர் மதத்தை இழுப்பது..அவர் ஜாதியை இழுப்பது எல்லாம் இன்று நம்மிடையே சர்வ சாதாரணம்.
நமக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை..அடுத்தவனுக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என எண்ணுபவர்கள்.
இவர்களெல்லாம்..ஏன் புரிந்து கொள்ளமாட்டேன் என்கிறார்கள்.
உனக்கு பிடிப்பது..மற்றவனுக்கு பிடிக்க வேண்டிய அவசியமில்லை.
அவன் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்...அவன் சுதந்திரத்தில்...எண்ணத்தில் தலையிட நாம் யார்.
ஒரு கணம்...மற்றவர்கள் பற்றி பேசும் முன்

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்ற அண்ணாவின் வாசகத்தை நினைவில் கொள்ளுங்கள்.

நமக்கு பிடிக்காததை ஒருத்தர் செய்தால்...அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுங்கள்.

ஒருவன் தவறிழைத்தால்..சாத்வீக முறையில் திருத்தப்பாருங்கள்.

உங்களுக்கு ஒருவன் தவறிழித்தால்..நீங்கள் உடனே பழிக்குப்பழி வாங்க எண்ணாதீர்கள்.

அவனை மன்னியுங்கள்..முடிந்தால் அவனுக்கு நல்லது செய்யுங்கள்.



கோபத்தை அகற்றுங்கள்.

அப்படியும் அவன் திருந்தவில்லையென்றால் உங்களை மலையாக நினையுங்கள்...

(மீள்பதிவு)

Friday, April 10, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் - 7

1960 ல் வெளியான படங்கள்
இரும்புத்திரை
குறவஞ்சி
தெய்வப்பிறவி
ராஜபக்தி
படிக்காதமேதை
பாவை விளக்கு
பெற்றமனம்
விடிவெள்ளி

சென்ற ஆண்டு கட்டபொம்மன்,பாகப்பிரிவினை..வெள்ளிவிழாவை தொடர்ந்து.ஹேட்ரிக்காக இரும்புத்திரை வெள்ளிவிழா படம்.வைஜெயந்திமாலா கதாநாயகி. ஜெமினி தயாரிப்பு.

தெய்வப்பிறவி..கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கதை வசனம்..சிவாஜி,பத்மினி..கமால் பிரதர்ஸ் உடன் ஏ.வி.எம்.,கூட்டு தயாரிப்பு.சிவாஜி,பத்மினி,எஸ்.எஸ்.ஆர்., நடித்த படம்.அருமையான பாடல்கள்.,

படிக்காத மேதை..சிவாஜி., சௌகார்..நடித்தது..சிவாஜியின் அற்புத படைப்பு.அனைத்து பாடல்களும் அருமை.

விடிவெள்ளி..ஸ்ரீதர் இயக்கத்தில் முதல் சிவாஜி நடித்த படம்.சரோஜா தேவி கதாநாயகி. ஏ.எம்.ராஜா வின் 'கொடுத்துபார் உண்மை அன்பை' என்ற அருமையான பாடல்.

தெய்வப்பிறவி,படிக்காதமேதை,விடிவெள்ளி மூன்றும் 100 நாட்கள் படம்.

குறவஞ்சி,ராஜபக்தி,பாவைவிளக்கு,பெற்றமனம் ஆகியவை தோல்வி படங்களாக அமைந்தன.

பாவைவிளக்கு...அகிலன் எழுதிய நாவல்..இப்படத்தில்..நடிகர்கள் முதலில் அவர்களாகவே வருவார்கள்...அதாவது சிவாஜி சிவாஜியாகவே..பின் நாவலை படிக்கையில் அந்தந்த கதா பாத்திரமாகவே மாறுவர். சிதம்பரம் ஜெயராமனின்..'வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி ' பாடல் இடம் பெற்ற படம்.

பெற்றமனம்..மு.வ.,வின் எழுத்தில் வந்த படம்.

அடுத்த பதிவில் 1961 படங்கள்.

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (10-4-09)

உலகத்திலே ஒருத்தன் பணக்காரன் வீட்லே பிறக்கறது பலம்...அப்போதான் அவன் எதிர்காலம் சிறப்பா அமையும்னு சொல்லுவாங்க..அதெல்லாம் சாசுவதமான பலம் இல்லை.ஒவ்வொருவருக்கும் பலம் அவங்க மனசுதான்.அதை தெளிவாகவும்,உறுதியாகவும் வைச்சுக்கிட்டா மற்ற எதைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை.

2.தொலைக்காட்சிப் பெட்டியை இடியட் பாக்ஸ் என்கிறோம்.அந்த அற்புதமான அறிவியல் கண்டுபிடிப்பை புத்திசாலித்தனமாக பயன்படுத்தத் தெரியவில்லை நமக்கு.

3.பறவைக்கு கூடு போதும்..குகை தேவையில்லை..சிங்கத்தின் குகை அதற்கு தேவைப்பட்டால்..சிங்கத்திற்கு அது தேவைப்படும்.

4.கூண்டிலிருந்து வெளியே வா..சாதிக்கலாம்...கூண்டிற்குள் இருக்கும் சிங்கத்தை பார்த்திருக்கிறாயா...ஒரு மூலையிலிருந்து...இன்னொரு மூலைக்கு நேராக நடந்துக் கொண்டிருக்கும்.அதைத்தவிர அதனால் வேறு எதுவும் செய்ய முடியாது.

5.ஒரு கவிதை


துணைநடிகை

இவள் வீட்டுப் பாத்திரத்தில்
சிலநாளே சுடுசோறு
என்றாலும் நடிக்கிறாள்
திரைப்படத்தில் பலவாறு..

வயிற்றுக்கு மிகநெருங்கி
வருகின்ற காமிராவில்
தெரியாது இவள் பசியும்
தெய்வத்தின் வஞ்சகமும்.

-யுகபாரதி

6.ஒரு ஜோக்..

தலைவா..உன்னை எதிர்க்கட்சில அவமானப்படுத்திட்டாங்க
எப்படி?
உனக்கு எதிரா போட்டிபோட சொத்தை கேண்டிடேட்டை போட்டுட்டாங்க.

Thursday, April 9, 2009

நாடாளுமன்ற தேர்தல்...தமிழகத்தில் வெற்றி யாருக்கு...

இந்த தேர்தலில்...கண்டிப்பாக தொங்கு நாடாளு மன்றமே அமையும் என்றே தெரிகிறது.மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்குள் மறு தேர்தல் வர வாய்ப்பிருப்பதாக பல பத்திரிகைகளின் சர்வே தெரிவிக்கிறது.

சென்ற தேர்தலில்..தி.மு.,க., காங்கிரஸ்,இரு கம்யூனிஸ்ட்,பா.ம.க., ம.தி.மு.க.,ஆகியவை ஒரு அணியில் இருந்ததால் வெற்றிக்கனியை முழுதுமாக பறிக்க முடிந்தது.இந்த அணி பெற்ற மொத்த வாக்குகள்....1,64,83,390 .

ஆனால்..அ.தி.மு.க.,வும் பி.ஜே.பி., அணியும் பெற்ற வாக்குகள்1,00,02,913.. வாக்குகள் வித்தியாசம் கிட்டத்தட்ட 64 லட்சம்.

ஆனால் இந்த முறை..கம்யூனிஸ்ட்களும்,பா.ம.க.,வும்,ம.தி.மு.க.,வும் அ.தி.மு.க., அணியில் உள்ளன.

இந்த வாக்கெடுப்புப் படி முடிவு செய்வது என்பது தவறு என்றாலும்...இதன்படி தி.மு.க., அணிக்கு 52 லட்சம் வாக்குகள் குறைகின்றன.தி.மு.க.,விற்கு இது இழப்பு..

ஆனாலும்...இம்முறை எக்கூட்டணியும் 40 க்கு 40 என்பது முடியாது.

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் அது வெற்றி பெறுவது கடினமே...வெற்றி பெறும் வேட்பாளரும் குறைந்த வாக்குகள்வித்தியாசமே இருக்கும்..

இம்முறை அ.தி.மு.க., கண்டிப்பாக கணிசமான வெற்றியுடன் நாடாளு மன்றத்தில் நுழையும் என எதிர்ப்பார்க்கலாம்.

Wednesday, April 8, 2009

இறுதி வேண்டுகோளும்...அப்பாவி தமிழர்களும்


இறுதி வேண்டுகோள்..என்றால் என்ன...ஆங்கிலத்தில் சொல்வதானால் Last request.அதாவது கடைசியாக பணிந்து கேட்டுக் கொள்ளுதல்.

உதாரணமாக...உங்கள் நண்பனால்..உங்களுக்கு ஒரு காரியம் ஆக வேண்டும், அக்காரியத்தை அவர் ஒருவரால் தான் செய்யமுடியும்..நீங்களும் பலமுறைக் கேட்டும்..அவர் செய்யவில்லை..என்றால் என்ன பொருள்.

நீங்கள் நினைப்பதுபோல்..அந்த காரியத்தை முடிக்கும் சக்தி அவரிடம் இல்லை , அல்லது உங்களுக்கு செய்ய அவர் விரும்பவில்லை.

இந்நிலையில்...இறுதி என்ற வார்த்தை ஏன்..அதுவும்..நீங்கள் வேண்டும்போது. உங்கள் மனதில் உள்ளது 'பல முறை கேட்டு விட்டேன்..மரியாதையாய் செய்..இல்லாவிட்டால்.."

இல்லாவிட்டால் என்ன செய்வதாக எண்ணம்.அவரை மீறவும் முடியாது. அதிக பட்சமாக பதவியை துறக்கலாம்.அதனால் யாருக்கு பயன்? மீண்டும் அந்த பதவிக்கு வர நமக்கு..அவர் தயவு தேவைப்படலாம்.

ஆகவே..தற்சமயம் எந்த முடிவும் எடுக்க முடியாது. வேண்டுமானால்..இறுதி வேண்டுகோள் ஒன்று, இறுதி வேண்டுகோள் 2 என அறிவித்துக்கொண்டிருக்கலாம்.அப்பாவி தமிழினம் அங்கே..அழிந்ததும்..மத்திய அரசு உதவலாம்.

தமிழினம் அழியும்வரை வேண்டுமானால்..நாம் மனிதச்சங்கிலியும், பேரணிகளையும்,அறிக்கைகளையும்,எந்த திராவிடகட்சி தமிழர்பால் அக்கறை கொண்டுள்ளது என ஒரு சொற்போரும் விட்டுக்கொண்டு...நம் பதவிக்கு ஆபத்து வராமல் பதவி காப்பதில் கண்ணாய் இருக்கலாம்.

அதுவரை...இலங்கை தமிழர்கள் இருந்தால் என்ன..அழிந்தால் என்ன...அவர்களா நமக்கு வாக்களிக்கப் போகிறார்கள்? அவர்களா நாளைக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்போகிறார்கள்?

தமிழக தலைவர்களே..உங்களுக்கு உங்கள் வேலை முக்கியம்...முதலில் அதை கவனியுங்கள்

Tuesday, April 7, 2009

வாய் விட்டு சிரியுங்க - தேர்தல் ஜோக்ஸ்

1.தலைவர் 39 தொகுதியிலே 23க்குத்தான் வேட்பாளரை அறிவிச்சிருக்கார்...மீதி..
அவர் கடவுளோட கூட்டணியாம்...மீதி 16 தொகுதி கடவுளுக்கு ஒதுக்கி இருக்காராம்.

2.தலைவர் ஏன் கவலையாய் இருக்கார்..
அவரோட கொள்ளுப் பேரனுக்கு ஒதுக்க தொகுதி இல்லையாம்.

3.தலைவர் வேட்புமனு தாக்கல் செய்யறதுக்கு முன்னாலே ஏன் 'கேக்" வெட்டினார்?
அவருக்கு அப்பப்ப எதையாவது வெட்டணும்

4.தலைவரோட மகனாய் இருக்கறதிலே ஒரு வசதி
என்னது
பாதுகாப்பான தொகுதியில நிற்கலாம்.

5.தலைவர் தலைமைல நடந்த பேரணி என்னவாயிற்று?
தலைவருக்கு அது 'சீரணி' யா அமைஞ்சுப் போச்சு.

6.ஜாதகக் கட்டுகளை தூக்கிக் கிட்டு தலைவர் ஏன் ஜோஸியர் கிட்ட போயிருக்கார்..
வேட்பு மனு கேட்டு இருக்கறவங்கள்ல யார் யாருக்கு பதவி யோகம் இருக்குன்னு ஜோஸியம் கேட்டுட்டு..அவங்களுக்கு தொகுதியை ஒதுக்குவாராம்

7.பேரன்-(பாட்டியிடம்) தாத்தா ஏன் 5...4...3...ன்னு புலம்பிக் கிட்டு இருக்கார்
பாட்டி-அவர் கட்சிக்கு எவ்வளவு தொகுதி கிடைக்கும்னு புலம்பி கிட்டு இருக்கார்.

8.தலைவரே! நமக்கு ஒதுக்கி இருக்கற தொகுதியில எதிர்க்கட்சி பலமான வேட்பாளரா போட்டிருக்கு
நம்ம் கட்சியே பலவீனமான கட்சிதானே...யாரை போட்டால் என்ன..

9.அகில இந்திய கட்சி நம்மளோடது..நமக்கும் 3 தானா..
சரியான நாமத்தை குறிப்பால உணர்த்திட்டாங்க.

10.நம்ம தலைவருக்கு எல்லா பதவியும் பிடிக்கும்..ஒன்றைத்தவிர
அது என்ன
சிவலோகபதவி.

இலங்கையில் போரை நிறுத்த கலைஞர் தலைமையில் பேரணி..


நாளை கலைஞர் தலைமையில் பேரணி நடக்கிறது.

இலங்கையில் உச்சக்கட்டத்தில் போர் நடக்கிறது.20 சதுர கிலோமீட்டருக்குள் விடுதலைப் புலிகள் முடக்கப்பட்டுள்ளனர்.2லட்சத்திற்கும் மேல் அப்பாவி தமிழர்களும் சிக்கியுள்ளனர்.இலங்கை ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில்..அப்பாவி தமிழர்களைக் காப்பாற்ற உடனடி (!!) நடவடிக்கை எடுக்கக்கூறி கலைஞர் தலைமையில் நாளை பேரணிக்கு ஏர்பாடு செய்யப்பட்டுள்ளது.மாலை 4 மணிக்கு தொடங்கி..மன்றோ சிலையிலிருந்து சேப்பாக்கம் வரை நடைபெறுகிறது.இப்பேரணியில் கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சிகளும் கலந்து கொள்ள தி.மு.க., வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதனிடையே..பிரதமர்..சோனியா, சிதம்பரம்,பிரணாப் ஆகியோருக்கு கலஞர் அவசர தந்தி அனுப்பியுள்ளார்..அதில்..

இலங்கையில் தமிழ் இனம் அழிந்துக் கொண்டிருக்கிறது.அதைக்காப்பாற்றவேண்டும்.இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்து அமைதிப் பேச்சு நடத்துவதை மத்திய அரசு உரூதிப்படுத்த வேண்டும்..என்று கூறப்பட்டுள்ளது.

இனி நாம்...

இந்த நடவடிக்கை...தேர்தலை முன்னிட்டோ...இல்லை எப்படியோ நடந்தாலும்...அனைத்துக் கட்சிகளும் கலந்து கொண்டு...இதை பொது பிரச்னையாக ஆக்கிக் கொள்ளுங்கள்.இது அனைத்துப் பிரிவினருக்கும் இரு வழியில் உதவும்.

1.தி.மு.க., மட்டும் இதற்கான ஏற்பாட்டை நடத்தியது என தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியாது.

2.இது ஒட்டுமொத்த தமிழின பிரச்னை...இதில் நாங்கள் கட்சி பிரிவினை பார்க்க மாட்டோம்...என நம்மை விமரிசிப்பவர்களுக்கும்...உலகுக்கும் தெரிவிக்கலாம்...

கட்சித்தலைவர்கள் நல்ல முடிவு எடுக்கட்டும்.

ஜெ.ஜெ. பிக்சர்ஸ் பெருமையுடன் வழங்கும் "இம்சை அரசி"

நண்பர் ஒருவர் கூகுள் சர்ச்சில்..ஏதோ தேடும்போது..'இம்சை அரசி" பற்றி ஒரு குறிப்பு இருந்ததையும்..அதற்கு திரைக்கதையில் என் பெயர் இருப்பதையும் பற்றியும் கேட்டார்.அப்போதுதான் இந்த செய்தி பார்த்தேன்.இதை இதை வன்மையாக கண்டிக்கிறேன்.இதில் டோண்டு பெயரும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Date: Wednesday, 03 Dec 2008 09:30
தயாரிப்பு: செல்வி ஜெயலலிதா
கூட்டு தயாரிப்பு: தோழி சசிகலா
பட்ஜெட்: எந்திரன் 100 கோடி எல்லாம் ஒரு பட்ஜெட்டா இந்த படத்தில் ஒரு கல்யாண சீனுக்கே பல நூறு கோடிகள் செலவழித்துள்ளார்கள்
கதை: உலகமகா மேதாவி 'சோ'ராமசாமி
திரைக்கதை: மூத்த பதிவர் T.V.Radhakrishnan
இயக்கம்: செல்வி ஜெயலலிதா
வசனம்: வைகோ
மொழிபெயர்ப்பு: டோண்டு ராகவையங்கார்
பாடலகள்: 'மானாட மார்பாட' ஞாநி
வில்லன்: சுதாகரன்
வில்லி: சந்திரலேகா
அறிமுக வில்லன்: சங்கராச்சாரியார்
காமெடி: சுப்பிரமணிய சுவாமி
சண்டை பயிற்சி: வால்டர் தேவாரம்
உதவி இயக்குநர்கள்:
மதுசூதனன் ராமானுஜம்
வீ தெ பீப்பிள்
மாயவரத்து 'ஜெ' அடிவருடி மற்றும் பல பதிவுலக மேதாவிகள்

கதைச் சுருக்கம்: இது ஒரு முழு நீள நகைச்சுவை திரைப்படம். 'சோ'ராமசாமியும் டீமில் இருப்பதால் காமெடிக்கு பஞ்சமே கிடையாது. மதமாற்ற தடைச் சட்டம் பின்னர் வாபஸ், அரசு ஊழியர்கள் பணி நீக்கம் பின்னர் வாபஸ் போன்று ரசிகர்களின் வயிற்றை பதம் பார்க்கும் நகைச்சுவை காட்சிகள் ஏராளம்

பாடல் காட்சிகள்களுக்கு வெளிநாடு செல்லாமல் உள்ளூர் கொடாநாட்டிலேயே படம் பிடித்து இருப்பது மிகப் பெரிய ஆறுதல்

கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் ஒரு பேரூந்தை தீ வைப்பது போன்ற மயிர் கூசச் செய்யும் காட்சிகளும் உண்டு

பின் குறிப்பு: சிங்கப்பூர் விநியோகஸ்தருக்கு ஒரு நல்ல ஆளாக தேடிக் கொண்டு இருப்பதாக கேள்வி. ஆர்வம் இருப்பவர்கள் விண்ணப்பிக்கவும்

(உடன்பிறப்பு (noreply@blogger.com)" Tags: "அரசியல்")

Monday, April 6, 2009

திருமா...வை ஜெயிக்க விடமாட்டோம் - ராமதாஸ்

சமீபத்தில் பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டி அளித்த மருத்துவர் அய்யா ராமதாஸிடம்..பா.ம.க., போட்டியிடும் தொகுதிகளில் ..அவர்களை தோற்கடிப்போம் என தி.மு.க., அமைச்சர்களும்,மாவட்ட செயலாளர்களும் சபதம் போட்டுள்ளதாகத் தெரிகிறதே..என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர்..'சென்ற தேர்தலில் அவர்களுடன் கூட்டணி இருந்த போதும்..நாங்கள் வெற்றி அடையக்கூடாது..என்றுதான் வேலை செய்தார்கள்.அதையும் மீறி எங்கள் வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் எல்லாம் வெற்றி பெற்றனர். அப்படி வெற்றி பெற்ற எங்கள் எம்.பி.,க்களை பிரதமர், சோனியா, சபாநாயகர் என அனைவருமே பாராட்டினர் 'என்றார்.

அவர் மேலும் கூறுகையில் ' சில இளைஞர்களை நான் தேர்ந்தெடுத்து..அவர்களுக்கு அரசியல் பயிற்சி அளித்து..லண்டனில் இருக்கும் 'எகனாமிக் ஸ்கூல்' மற்றும் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திற்குப் பயிற்சிக்கு அனுப்பிவைத்தேன்.அவர்கள் தற்போது பயிற்சியை முடித்துவிட்டு..அடுத்த கட்டம் சென்றுள்ளார்கள்.அவர்கள்தான் 2011 சட்டமன்ற தேர்தலில் ஸ்டார் வேட்பாளர்கள்' என்றார்.

அன்புத்தம்பி..திருமாவளவனுடன்..சிதம்பரத்தில் போட்டி போலிருக்கிறதே..என்று கேட்கப்பட்டபோது...

'தம்பிக்கு..அங்கே..என்ன நெருக்கடின்னு தெரியலே..ஆனால் பா.ம.க., கூட்டணி தர்மத்தை விட்டுக் கொடுக்காது..திருமா...சிதம்பரத்தில்..போட்டியிட்டால்...நாங்கள் அவரை ஜெயிக்க விட மாட்டோம்'என்றார்.

கழகக் கண்மணிகளுக்கு கலைஞர் கடிதம்....


உடன்பிறப்பே...

தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல் இவ்வளவு நேரம் உன்னை வந்து அடைந்திருக்கும்.

என் உடல்நிலையையும் பொருட்படுத்தாது...உன் நலனே என் நலன் என எண்ணி..என் உடல்நிலை இடம் தராவிடினும்..3 நாட்கள் அமர்ந்த நிலையில் 540 பேரை நேர்காணலில் சந்தித்து...முத்துக்கள் 21ஐ தேர்ந்தெடுத்துள்ளேன்.

தம்பி...இவர்கள் வெற்றிக்கு..ஊண் உறக்கமின்றி..பசி தாகம் பாராமல் மாற்று கட்சியினரின் சூழ்ச்சிக்கு பலியாகாமல் உழைத்திடு.உழைப்பிற்கேற்ற கூலியை பெற்றிடுவோம்.

உடன்பிறப்பே..இச்சமயத்தில்...தமிழன் இல்லாத சிலர்..ஈழத்தமிழர் நிலை குறித்து நீலிக்கண்ணீர் வடித்திடுவார்...என்னவோ இவர்கள்தான் அவர்கள் நிலைக்கு உருகுவது போல.கண்மணி..நீ அறிவாய்..நானும், பேராசிரியரும் எங்கள் பதவியை இதற்காக துறந்தவர்கள்...கின்னஸ் புத்தகத்தில் அதிக முறை நான் இதைச் சொன்னதற்கான சாதனை பொறிக்கப்பட்டால்...அதற்கான முழு புகழையும் நீயே அடைவாய்.கழக அரசு இருமுறை தமிழருக்காக கவிழ்க்கப்பட்டது என்பதையும் மறந்துவிடாதே.இவற்றை பொதுமக்களிடையே எடுத்து செல்ல வேண்டிய பணி உனதென்பதை மறந்துவிடாதே.

இப்போதும்...இலங்கையில் போர் நிறுத்தம் கோரி..இரண்டுமுறை மனிதச் சங்கிலியும், எம்.பி.க்கள் ராஜினாமாவும், எனது உண்ணாவிரதமும் கழக ஆட்சியில் இன்றி வேறு யார் ஆட்சியில் நடந்திருக்கிறது?.நான்குமுறை பிரதமருக்கும்..சொக்கத்தங்கம் சோனியாவிற்கும் இது குறித்து கடிதம் எழுதி உள்ளேன்..இது யார் ஆட்சியில் நடந்துள்ளது? தில்லிக்கே ..அரசியல் தலைவருக்கு தலைதாங்கி சென்றுள்ளேன்..இதை மற்றவர் மறந்தாலும்...கண்மணி என்னாலும்..உன்னாலும் மறக்கமுடியாது.

அண்ணா நேற்று என் கனவில் வந்து..'தம்பி கருணாநிதி கலங்கிடாதே..போற்றுவார்..போற்றட்டும்..வசைச்சொற்களால் உன்னை தூண்டுவார் தூற்றட்டும்...நம் தொண்டர்கள் வெற்றிக்கனியை பறித்து உனக்கு காணிக்கை ஆக்குவார்கள் என்றார்..' 'அண்ணாவின் கனவை..நனவாக்க வேண்டியது உன் கையில்தான் உள்ளது உடன்பிறப்பே'

இன்று முதல்...மே 13 வரை உன் நினைப்பு நம் வெற்றி ஒன்றதாகவே இருக்கவேண்டும்.வெற்றி நமதே!! 40 ம் நமதே!!!

மற்ற கட்சித்தலைவர்கள் முகத்தில் கரியை பூசிடுவாய்.

Sunday, April 5, 2009

தயாநிதி மாறன் - மத்திய சென்னை வேட்பாளர் - சிறு குறிப்பு வரைக


நேற்று கலைஞர் தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.அதன்படி ..எதிர்ப்பார்த்தபடி..தயாநிதி மாறன், இளங்கோவன்,பாலு, நெப்போலியன்,ராஜா,ரித்தீஷ், ஆகியவர்கள்..கிட்டத்தட்ட கேட்ட தொகுதியை பெற்றுள்ளனர்.தனக்கு எந்த தொகுதி வேண்டும்..என மனு கொடுக்காதவர்...அவரின் ஆதரவாளர்கள்..அவர் தரப்பில்..மனு கொடுத்ததை வைத்து மதுரை வேட்பாளர் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.

இந்த தேர்வுக்கு...3 நாட்கள்..540 பேரிடம்..நேர்காணல் தேவையா? நமக்கு தெரியவில்லை.

பாவம் கலைஞர்...அவரை நீண்ட நேரம்..இல்லை..இல்லை..நீண்டநாட்கள் ..அவர் உடல் நிலை சரியில்லாத நேரத்தில் மீண்டும் உட்கார வைத்து விட்டார்கள்.

சரி...தலைப்புக்கு வருவோம்...

வேட்பாளர்களின் வாழ்க்கை குறிப்பை..மாறனின் குடும்ப தினசரியில் எழுதி உள்ளார்கள்.

அதில்..தயாநிதி மாறன் பற்றி...

1966ஆம் ஆண்டு டிசம்பர் 5 ல் பிறந்தார்.லாயோலா கல்லூரியில் பி.ஏ.,(பொருளாதாரம்) படித்தார்.1994ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் ந்டந்தது.மனைவி பிரியா தயாநிதி மாறன்.இவர்களுக்கு ஒரு
மகள், ஒரு மகன் உள்ளனர். என்றெல்லாம்...ஒரு பெரும் தலைவருக்கான சுய சரிதம் பாடியுள்ளனர்.

மேலும்..ஒன் இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்..தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.. என்றெல்லாம் புகழ் பாடப்பட்டுள்ளது..

மாணவ சமுதாயமே...உழைக்கும் இளைஞர்களே..இவர் பற்றிய விவரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்..

யார் கண்டது...நாளைக்கே இவர் சம்பந்தமான கேள்விகள்...நீங்கள் எழுதப்போகும் பரிட்சைகளில் கேட்கக்கூடும்.

உதரணத்திற்கு...1966..டிசம்பர் 5 முக்கியமான தினம் ..அது என்ன ..என்று கேட்டால்...உடனே..தயாநிதி பிறந்த நாள் என்ற ஞாபகம் உங்களுக்கு வரவேண்டும்.

விருது பெறும் பதிவர் அக்னிபார்வைக்கு வாழ்த்துகள்

தமிழ் ஸ்டுடியோ.காம் வழங்கும் ஏப்ரல் மாத சிறந்த வலைப்பதிவர் விருது
நாள்: சனிக்கிழமை (11-04-09)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: காலை 10 முதல் இரவு 7 வரை

10 AM - 2 PM - உலகப் படங்கள் / உலகக் குறும்படங்கள் / ஆவணப்படங்கள் திரையிடல்

3 PM - 7 PM - குறும்பட வட்டம்

முதல் பகுதி: (3 PM-4 PM) - இலக்கியமும் குறும்படங்களும்

இலக்கியம் பகுதியல் இம்மாதம் "புன்னகை உலகம்" சிற்றிதழின் ஆசிரியர் திரு. "சுசி திருஞானம்" அவர்கள் பங்குபெற்று இலக்கியமும் குறும்படங்களும் என்கிற தலைப்பில் உரையாற்றுகிறார். இவர் "வெற்றியின் அறிவியல்", "நேர நிர்வாகம்", "உனக்குள் ஒரு மேதை", போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார். "விஜய்" தொலைக்காட்சியின் செய்திப் பிரிவில் இன்புட் எடிட்டர் ஆக இருந்துள்ளார். மேலும் சன் நியூஸ் தொலைக்காட்சியின் சேனல் ஹெட் ஆகவும் இருந்துள்ளார். இவர் இம்மாதம் இலக்கியப் பிரிவில் மிகச்சிறந்த சமூதாய தாக்கத்துடன் வெளிவந்த ஒரு சிறுகதை அல்லது நாவலின் ஒரு பகுதி பற்றி நம்மிடையே விரிவாக பேசியும், மேலும் அந்த சிறுகதையை எப்படி படமாக்கலாம் என்று தன்னுடைய விரிவான ஆலோசனையும் வழங்க உள்ளார்.

மேலும் சிறந்த பதிவருக்கான விருது வழங்கும் விழாவும் நடைபெறும். இம்மாதம் சிறந்த பதிவருக்கான விருது பெறுபவர் திரு. வினோத் அவர்கள். இவரது வலைப்பூ.http://agnipaarvai.blogspot.com/

தமிழ் ஸ்டுடியோ.காம் சிறந்த பதிவருக்கான விருது வழங்கும் விழா மாதந்தோறும் சிறந்தப் பதிவர் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது. விருது வழங்கப்படும் மாதத்திற்கு முந்தைய மாதத்தில் பதிவர் எழுதிய கட்டுரைகள், பதிவுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

Saturday, April 4, 2009

கம்பரும்..இம்சை அரசன் புலிகேசியும்...

இம்சை அரசன் படத்தில் அரசன் மீது ஒரு புலவர் பாட்டு எழுதி வருவார்..'கன்னா பின்னா மன்னா' என்று..இந்த காட்சியை சமீபத்தில் பார்த்த போது கம்பர் ஞாபகம் வந்தது.

தன்னை புகழ்ந்து பாடுபவருக்கு பரிசு என மன்னன் அறிவித்தான்.தருமி போல பணத்துக்கு ஆசைப்பட்ட ஒருவன் பாடலை எடுத்துக் கொண்டு சென்றான்.

அவன்முறை வந்ததும்..அரசரிடம் தன் பாடலை படிக்கத் தொடங்கினான்.

'கன்னா பின்னா மன்னா தென்னா'

அவையோர் சிரிக்க...மன்னனும் கோபத்துடன் பாடலை நிறுத்து என்றான்.

ஆனால்..கம்பரோ..அவரின் ஏழ்மை நிலையைக் கண்டு அவரைக் காப்பாற்ற எண்ணினார்....உடன் 'அடடா..என்ன அருமையான வரிகள்..' என்றார்..'அரசரை இவ்வளவு புகழ்ந்தவர் யாருமில்லை' என்றார்.

அவையில் இருந்த புலவர்கள்..'இதில் என்ன அழகு இருக்கிறது?' என்றனர்.

கம்பர் கூறினார்..'கன்னா..என்றால் கர்ணன் என்றும்..பின்னா என்றால் பின்னவனே என்றும்..மன்னா என்றால் அரசனே என்றும் தென்னா என்றால் தென்னாட்டின் தலைவனே என்றும் பொருளாகும்.

அதாவது..கர்ணனுக்குப் பிறகு எல்லோராலும் வள்ளல் என்று போற்றிப் புகழ்ப் பெறுபவர் தென்னாட்டை ஆளும் நம் மன்னரே என்பதே பாடலின் பொருள் என்றார்.

இதைக் கேட்டு அனைவரும் மகிழ்ந்தனர்..அரசனும்..புலவனுக்கு நிறைய பரிசளித்தான்.

கூட்டணி குறித்து நிச்சயிக்காத கட்சிகள்

தமிழக கூட்டணி கட்சிகளில் எந்த கூட்டணி பெரும்பான்மை இடத்தைப் பிடிக்கும் என ஊடகங்களும், இணைய தளத்தில் பதிவர்களும்., அரசியல் வல்லுனர்களும்..ஒவ்வொரு கணக்கு போட்டுக்கொண்டிருக்க முக்கியமான சில கட்சிகளை இவர்கள் மறந்துவிட்டனர்.

மக்களின் பேராதரவு..இக்கட்சிகளுக்கு இருக்கிறது..என இதன் தலைவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இக்கட்சியினர் யாருடன் கூட்டணி வைத்துக் கொள்கிறார்களோ..அக்கூட்டணியே 40 தொகுதிகளிலும் வெல்லும்.என்று இவர்கள் கண்டிப்பாக நம்புகிறார்கள்.இன்னும் ஓரிரெண்டு நாட்களில்..இக்கட்சிகள் தங்கள் ஆதரவை எந்த கூட்டணிக்கு கொடுப்பது என பொதுக்குழு கூட்டி முடிவெடுப்பார்கள்.பின்னரே வெற்றி..தோல்வி நிர்ணயிக்கப்படும்.

அக்கட்சிகள்...

1.லட்சிய தி.மு.க., விஜய டி.ராஜேந்திரன்

2.நாடாளும் மக்கள் கழகம் (??) கார்த்திக்

3,சமத்துவ மக்கள் கட்சி - சரத்.(பா.ஜ.க.உடன் கூட்டு..ஆமாம் பாவம் சரத்தா? பா.ஜ.க.,வா)

Friday, April 3, 2009

சிவாஜி ஒரு சகாப்தம்-6

1959ல் வந்த சிவாஜியின் படங்கள்

தங்கப்பதுமை
நான் சொல்லும் ரகசியம்
வீரபாண்டிய கட்டபொம்மன்
மரகதம்
அவள்யார்
பாகப்பிரிவினை

சிவாஜியுடன் பத்மினி கதாநாயகியாய் நடித்த படம் தங்கப்பதுமை.ஜி.ராமனாதன் இசையில் பல பிரபலமான பாடல்கள் இடம் பெற்ற படம்.

நான் சொல்லும் ரகசியம்...இப்படத்தைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை..தோல்வி படம்.

வீரபாண்டிய கட்ட பொம்மன்- சிவாஜி நாடக மன்றத்தால் முதலில் நாடகமாக நடிக்கப்பெற்று பின் படமானது. வெள்ளிவிழா படம்.ஜெய்ப்பூர் அரண்மனையில் முதன்முதலாய் படமாக்கப்பட்ட திரைப்படம்.முதல் டெக்னிக் கலர் படம்.லண்டனில் கலர் பிரதிகள் எடுக்கப்பட்ட படம்.முதன் முதலாக 26 திரை அரங்குகளில் 100 நாட்கள் ஓடிய படம்.1960...கெய்ரோவில் ந்டைப்பெற்ற ஆசிய-ஆப்பிரிக்க திரைப்பட விழாவில்..சிறந்த திரைப்படம், சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்ற படம்.

மரகதம்...மீண்டும் சிவாஜி, பத்மினி..100 நாட்கள் ஓடிய படம்.கருங்குயில் குன்றத்துக் கொலை என்ற மர்ம நாவலை தழுவி எடுத்த படம்.வீணை மேதை எஸ்.பாலசந்தர் உடன் நடித்துள்ளார்.

அவள்யார்? சிவாஜி, பண்டரிபாய்...சிறந்த கதை அம்சம் கொண்ட இப்படம்..எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை.

பாகப்பிரிவினை...இப்படத்தை பார்க்காத முந்தைய தலைமுறையினர் இருக்கமாட்டார்கள்.சிவாஜி,சரோஜாதேவி,எம்.ஆர்.ராதா என பல பிரபலங்கள் நடித்த படம்.'தங்கத்திலே' ஏன் பிறந்தாய், போன்ற அருமையான பாடல்கள்.வெள்ளிவிழா கண்ட படம்.

இந்த வருடம் 6 படங்கள் வந்தாலும்...வியாபார ரிதியாக ஒன்றிரெண்டு தோல்வியுற்றாலும்...எல்லாம் நல்ல படங்கள் என்றே சொல்லலாம்.

அடுத்த வாரம் 1960 படங்கள்.

வை.கோ.விற்கு ஒரு கடிதம்...

வணக்கம்.

தங்கள் மேடைப் பேச்சில் மயங்குபவர்களில் நானும் ஒருவன்.

தி.மு.க.வின் போர்ப்படைத் தளபதி!யாய் இருந்த நீங்கள்...வெளியேற்றப்பட்ட போது கூடமனம் வருந்தியவர்களில் நானும் ஒருவன்.தாய்க்கழகத்திலிருந்து..தங்களது விலக்கம் குறித்து இப்பதிவில்
எதுவும் எழுதப்போவதில்லை.ஏனெனில் தாய்வீட்டில் உள்ள உங்கள் மனதிற்கு எல்லாமே தெரியும் என்பதால்.

அப்படியெனில் இப்பதிவின் நோக்கம்...?

தேவையில்லாமல் POTA வில் கைதாகி இருந்த போது..கலைஞர் பட்ட வேதனையும்..அவர் அப்போது உங்களைப் பார்க்க பட்ட கஷ்டங்களையும்..எல்லோருமே அறிவர். பின்னர் மாறனின் மறைவிற்கு நீங்கள் வந்திருந்த போது..கலைஞரும்,நீங்களும்..மாறனின் இழப்பில் அழுதது...அதை தொலைக்காட்சியில் பார்த்த என்னைப்போன்றோர் ,மீண்டும் தாய்க்கழகத்தில் நீங்கள் இணைய வேண்டும் என்று விரும்பினோம்.

கடந்த சட்டசபை தேர்தலில் அதற்கான காலம் கனிந்து வருவது போல இருந்தது.ஆனால் தொகுதி ஒதுக்கீட்டில்..தங்கள் கட்சிக்கு ஒதுக்கிய தொகுதிகள் போதாது என்று..கடைசி நிமிடம்
நீங்கள் அணி மாறினீர்கள்.

ஆனால் இப்போது நடப்பது என்ன?

தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள் என்ற போது கூட ஜெ கண்டனம் தெரிவிக்காதவர்.

அந்த கூட்டணியில் உள்ள நீங்கள்..உங்களுக்கு ஒதுக்கிய தொகுதி எம்.எல்.ஏ., மறைவிற்கு பின் நடக்கும் அத்தொகுதி இடைத் தேர்தலில்..போட்டியிட அ.தி.மு.க.விற்கு விட்டுக்கொடுத்துள்ளதாக செய்திகள் படித்தோம்.(ஒருவேளை அது காலத்தின் கட்டாயமோ!!!)

இந்த விட்டுக்கொடுத்தலை..முன்னரே கலைஞருக்கு செய்திருந்தால் ..மீண்டும் தாய்வீடு வந்த உற்சாகம் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும்.

தன்மானம் காத்த தானைதலைவனாய் இருந்திருப்பீர்கள்.

இப்பவும் ஒன்றும் கெட்டுப்போய் விடவில்லை...

Better Late than Never

என்றும் அன்புடன்

ஒரு தமிழன்
(இது ஒரு மீள்பதிவு)

Thursday, April 2, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்..(3-4-09)

1. உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீனிடம் எப்போதும் 3 மூக்குக் கண்ணாடிகள் இருக்குமாம்.இத்தனை கண்ணாடிகள் எதற்கு என்று ஒருவர் கேட்டாராம்.அதற்கு அவர் 'படிப்பதற்கு ஒன்றை பயன்படுத்துவேன்.இன்னொன்று தூரப்பார்வைக்கு.இவை இரண்டும் அடிக்கடி காணாமல் போவதால்..தேடுவதற்கு மூன்றாவது கண்ணாடி' என்றாராம்.

2.தமிழ் மொழியின் சிறப்பு ஒன்றை பாருங்கள்..
"அ" வில் ஆரம்பிக்கும் சொற்கள் கிட்டே கொண்டுவருவதுடன் சம்பந்தப் பட்டவை. அண்மை,அருகாமை,அப்புதல்,அள்ளுதல்,அணைத்தல்
"உ" எழுத்து தூரத்தள்ளுவதற்கும்,மறைப்பதற்கும் உரித்தானது,..உதைத்தல்,உமிழ்தல்,உண்ணுதல்,உதறுதல்
"இ" எழுத்து..கீழே கொண்டுவருவதற்கான சொல்...இடுதல்,இறக்குதல்,இறங்குதல்,இழிதல்
"எ" எழுச்சி வார்த்தைகள்..எடுத்தல்,எட்டுதல்.எய்தல்,எழுதல்

3.நிகழ்ச்சிகளில் தலை காட்ட 1 கோடி, டி.வி.ஷோக்களில் ஒரு எபிசோடிற்கு 10 கோடி, படத்தில் நடிக்க 15 கோடி, விளம்பரம் மூலம் ஆண்டுக்கு 150 கோடி..இது ஹிந்தி ஸ்டார் ஷாருக்கானின் வருமானப் பட்டியல்.சராசரியாக நிமிடத்திற்கு 300 ரூபாய் சம்பாதிக்கிறாராம்.

4.தப்பு கண்டுபிடிப்பதையே தொழிலாகக் கொண்டவனுக்கு கோபம்,ஆத்திரம்,வெறுப்பு எல்லாம் ஏற்படுகிறது.தப்புக்கு என்ன காரணம் என்று கண்டுபிடித்து பொறுத்துக் கொள்ளும் தன்மை ஏற்பட வேண்டும்.

5.வெள்ளிக்கிழமைகளில் சுண்டல் ஏன் தாமதமாக வருகிறது என ஒரு நண்பர் கேட்டார். அவியல், கொத்துபரோட்டா உடன் சுண்டல் வந்தால் சேல்ஸ் இருக்காது.அவை முழு உணவு உண்ட திருப்தியைக் கொடுக்கும். ஆனால்..சுண்டல்? ஆகவேதான் உண்டபின் வருகிறது.

6.சவம்...

ஒருவனுக்கு
ஐஸ் வைத்தால்
வேண்டிய காரியம்
நடக்கும்..ஆனால்
எனக்கு
ஐஸ் வைத்தால்
என் காரியமே
நடக்கும்.

7.தேர்தல் ஜோக்..

தலைவர் தேர்தலுக்கு முன்னரே வெற்றி நமதே என்கிறாரே..
கூட்டணியில் கேட்ட தொகுதி கொடுத்துட்டாங்களாம்..அதைத்தான் சொல்றார்.

பா.ம.க., வின் கொள்கையை தெரிந்துக் கொள்ளுங்கள்...

ஒரு கூட்டணியில் இருந்து வெற்றி பெற்று..அதன் சுகங்களை அனுபவித்து விட்டு..அடுத்த தேர்தலில் ஆதாயம் கிடைக்கும் கட்சிக்கு மாறுவதை வழக்கமாகக் கொண்டது பா.ம.க.,

ராமதாஸால் 1980 ல் உருவாக்கப்பட்ட வன்னியர் சங்கம்...9 ஆண்டுகள் கழித்து பாட்டாளி மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியாக மாறியது.1989, 1991 ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவை தேர்தல்களில் முறையே 26, 31 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு...ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது படு தோல்வியடைந்தது.

1991ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்ற இக்கட்சி போட்டியிட்ட இடங்கள் 194.

1996ல் மக்களவைக்கும்...சட்டசபைக்கும் ஒன்றாக தேர்தல் நடந்தது.வாழப்பாடி கட்சியுடன் கூட்டணி அமைத்தார் ராமதாஸ்.பா.ம.க., சார்பில் 4 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே வெற்றி பெற்றனர். மக்களவைக்கு பூஜ்யம்.

கூட்டணியில் சேர்ந்தால்தான் ஓடும் என்பதை புரிந்த்க் கொண்ட பா.ம.க.,1998ல் மக்களைக்கு அ.தி.மு.க., பா.ஜ.க., உடன் சேர்ந்து 5 தொகுதிகளில் போட்டியிட்டு 4ல் வென்றது.முதன்முறையாக நாடாளுமன்றத்தில் நுழைந்து..அமைச்சரவையிலும் இடம் பிடித்தது.

அடுத்த ஆண்டே..தி.மு.க.,உடன் கூட்டணி வைத்து மக்களவை தேர்தலில் 8 ல் 5 ஐ வென்றது.மீண்டும் சிலருக்கு அமைச்சர் பதவி.

2001 சட்டசபை தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க.உடன் கூட்டணி.27 இடங்களில் போட்டி..20 இடங்களில் வெற்றி.

2004ல் மீண்டும் தி.மு.க., 6ல் போட்டி 6 லும் வெற்றி..அமைச்சர் பதவி. கூட்டணி பேரத்தில் ராஜ்யசபா இடம்...அன்புமணி அமைச்சர்.

2006ல் சட்டசபை தேர்தல்...மறந்துபோய் தி.மு.க., கூட்டணியிலேயே இருந்து விட்டது.

2009 நாடாளுமன்ற தேர்தல்..அ.தி.மு.க., கூட்டணி..வழக்கம் போல் மகனுக்கு அடுத்த ஆண்டு ராஜ்ய சபா இடம் பேரம்.

பா.ம.க., கூட்டணி விஷயத்தில் அணி தாவுவதை தனது கொள்கையாகக் கொண்டுள்ள கொள்கை மாறா கட்சி.

Wednesday, April 1, 2009

ஹிந்தி தெரிந்தால்தான் பிரதமர் ஆகமுடியும்...- பிரணாப் முகர்ஜி

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரணாப்..தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.அப்போது..பிரதமர் பதவி பற்றிக் கேட்ட போது..

தனக்கு போதுமான அளவு ஹிந்தி தெரியவில்லை என்பதாலும்...காங்கிரஸ் வலுவாக உள்ள மாநிலத்தைச் சேர்ந்தவன் இல்லை என்பதாலும்...தன்னால் பிரதமர் ஆக முடியவில்லை என்றார்.

மேலும் மன்மோகன் சிங் சோனியாவின் நம்பிக்கையைப் பெற்றவர் என்றார்.சிறந்த பொருளாதார நிபுணர்.இந்த நாட்டை வழி நடத்த பிரதமர் வட மாநிலத்தைச் சேர்ந்தவராய் இருக்க வேண்டும்..ஹிந்தி போதுமான அளவுக்கு தெரிந்திருக்க வேண்டும்.காங்கிரஸ் வலுவாக உள்ள மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்..

மேலும்...பிரதமர் பதவி சோனியாவிற்கு அளிக்கப்பட்ட போது, அவர் தனது நம்பிக்கைக்கு பாத்திரமானவர் யார்? தன்னுடன் முரண்பாடான போக்கை கடை பிடிக்காதவர் யார்? என்றெல்லாம் சிந்தித்து முடிவெடுத்தார் என்றும் கூறியுள்ளார்..

நமது சந்தேகம்...

1.பிரதமர்...பொம்மை பிரதமர் என்று சில பத்திரிகைகள் எழுதியது உண்மையா?

2.பிரதமராக..இந்தியன் அனைவருக்கும் உரிமை உண்டு என்பது பொய்யா?

3.தமிழனால் பிரதமரே ஆகமுடியாதா?

சந்திரபாபு நாயுடுவிற்கு 17 கோடி ரூபாய் கடன்

சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் குப்பம் சட்டப்பேரவை தொகுதியில் 30 ஆம் தேதி மனு தாக்கல் செய்தார்.அதில் தனக்கு பலவேறு வங்கிகளில் 17 கோடிக்குமேல் கடன் இருப்பதாகவும்..தனக்கு சொந்தமாக ஒரு கார் மட்டுமே இருப்பதாகக் கூறியுள்ளார்.

அவருக்கு சொந்தமாக வீடோ..நிலமோ இல்லை.அவர் கடன் விவரம்...

பேங்க் ஆஃப் பரோடா - 4,01,47,337

விஜயா பாங்க் -6,03,49,777

யுகோ வங்கி -6,42,42,710

எச்.டி.எஃப்.சி -47,47,133

தனியாரிடம் வாங்கியுள்ள கடன்-14,57,419

சொந்த வீடு நிலம் இல்லை

வங்கிகணக்கில் டிபாசிட்-11 லட்சம், கணக்கில் பணம்..23 ஆயிரம்..என்.எஸ்.சி.பாண்ட் 1000, சொந்த கார் அம்பாசிடர்..

நம் கேள்வி...சாமான்யன் வங்கியில் கடன் வாங்கச் சென்றால்...ஆயிரம் கேள்விகள்...ஆயிரம் செக்யூரிட்டிகள் கேட்கும் வங்கிகள்...எதுவும் இல்லாத இவருக்கு எப்படி கோடிகணக்கில் கடன் கொடுத்தன.மத்திய அரசின்..நிதித்துறை...இவ்விஷயத்தில்.. வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்குமா?

ஐயோ..பாவம்..நாயுடு..எதுவும் சம்பாதிக்க வில்லை என எண்ணும் வாக்காளனுக்கு..அவன் மனைவி பெயரில் உள்ள சொத்துக்களைப் பாருங்கள்.

ரங்காரெட்டி மாவட்டத்தில்...5 ஏக்கர் நிலம்- 9 கோடி
ஹைதராபாத் வீடு-3.3 கோடி
ஹைதராபாத் மற்றொரு வீடு- 6 கோடி
ஹைதராபாத் பஞ்சாரா பங்களா-8.9 கோடி
சென்னையில் விவசாய நிலம்-10.5 கோடி
வங்கி டிபாசிட்-11.26 லட்சம்
கம்பனி ஷேர்-15.69 கோடி
2779 (??!!) கிராம் தங்கம்-34 லட்சம்
32 கிலோ வெள்ளி நகை-5.8 லட்சம்
2 கார்-91.92 லட்சம்
ரொக்க பணம்-23,400

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்..இந்த நாட்டிலே...நம்ம நாட்டிலே...

கோவி.யின் பதிவுகள் இனி வருமா?

கோவி.கண்ணன்..ஒரு மூத்த பதிவாளர்.சொன்ன சொல் காப்பதில் அவருக்கு நிகர் அவரே!

அவரின் சமீபத்திய பதிவு ஒன்று..'பிழையுடன் எழுதுபவர்கள் இனி எழுத வேண்டாம்?' (http://govikannan.blogspot.com/2009/04/blog-post.html)
என்பதாகும். அதில் காணப்படும் தவறுகள்...

சிறுது

மொழிக்களுக்கும்

முதன்மைவாய்ந்தாக

பிறகுக்குச்சொல்லி

காரணாமாக

சொற்ச்சிலம்பம்

தான் எழுதியபடி தானே நடக்கவில்லையெனில் எப்படி என்று..எண்ணி..இனி பதிவிடுவதில்லை என தீர்மானித்துவிட்டதாக விஷயம் தெரிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று ஏப்ரல் முதல்நாள்.