Tuesday, February 17, 2009

கண்ணதாசன் எழுத்துக்கள் நாட்டுடமைக்கு எதிர்ப்பா??

தமிழ் எழுத்தாளர்கள்..அறிஞர்கள் படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டு வருகின்றன.அப்படிப்பட்ட எழுத்தாளர்களின் வாரிசுகளுக்கு..அவை சமுதாயத்தில்..ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்,அவற்றின்பெருமை ஆகியவற்றின் அடிப்படையில்..எழுத்தாளர்களின் வாரிசுகளுக்கு பரிவுத்தொகை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த அரசின் செய்கைகளால்...அவர்களின் எழுத்துக்களை..அதிக விலை கொடுத்து புத்தகமாக வாங்க வேண்டிய அவசியம் சில நேரங்களில் ஏற்படாது.பல..மலிவு விலை பதிப்புகளாக கிடைக்கும்.அனைத்து தரப்பு வாசகர்களுக்கும்..அவற்றை படிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

உதாரணமாக..கல்கியின் படைப்புகள்,பாரதியாரின்..கட்டுரை,கவிதைகள்..ஆகியவற்றை சொல்லலாம்.மேலும் சென்ற வருடம் வரை..நா.பார்த்தசாரதி முதலியவர்களின் படைப்புகளும்..அரசுடமை ஆக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால்..இவ்வளவு நாட்களாக கண்ணதாசன்,பெரியார் ஆகியவர்கள் எழுத்துக்கள் நாட்டுடமை ஆக்கப்படவில்லை.

ஒரு எழுத்தாளரின் குடும்பத்தினர் ..சம்மதம் பெற்றே..அரசுடமை ஆக்கப்படும்.

ஆனல்..நேற்று மேலும் 28 சான்றோர் எழுத்துக்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன. அவர்களில் சிலர்..மு.வ.,சாண்டில்யன்,,லட்சுமி,சுந்தர ராமசாமி,கண்ணதாசன்..ஆகியோர்.

இதில்..சுந்தர ராமசாமியின் மகனும்..கண்ணதாசன் மகன் காந்தி கண்ணதாசனும்..இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வாரிசுதாரரின் சம்மதம் இல்லாமல்..எந்த எழுத்தாளர்கள் படைப்பும்...நாட்டுடமை ஆக்கப்படாது என்றும்..விரைவில்..அவர்களிடம் சம்மதம் கேட்கப்பட்ட பின்னரே..இவை நாட்டுடமை ஆக்கப்படும் என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

2 comments:

அக்னி பார்வை said...

ஏனென்றால் இருவரின் புத்த்ககங்களும் நல்ல வருவாயை தருகின்றன, அப்படி பார்த்தாலும் மு வ, சாண்டில்யன் கூட தான் நல்ல வருவாய்?

தங்கள் அனுமதி பெரமல் அரசு அறிவித்ததற்க்காக என்றால் ந்நிச்சயம் தன் மான பிரச்சனை..

ஏதாக இருந்தாலும் பிரச்சனையை முடிங்கப்பா...

எனக்கிறுக்கும் ஒரே பயம் அடுத புத்தக கண்காட்சீயில் எல்லாரும் கண்ன தாசனையும், சாண்டில்யனையும் வைத்திருப்பார்கள் ஒஉதிதாக ஏதும் வராது

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாரிசுகளின் சம்பந்தம் இல்லாமல் நாட்டுடமை சாத்தியம் இல்லையாம்

அக்னி பார்வை.