Saturday, December 6, 2008

படித்ததும்...கேட்டதும்... 6-12-08

1.அமெரிக்காவில் புதிய மாற்றத்தை விரும்பிய மக்கள், கறுப்பு இன ஒபாமாவை அதிபராகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.அதே போல, ஆந்திராவில் மக்கள் எனக்கு முடி சூட்டுவார்கள்.-சிரஞ்சீவி

2.60லட்ச ரூபாய் செலவில், கும்பகோணம் தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் நினைவு மண்டபத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.

3.பேரறிஞர் அண்ணா பற்றிய ஆவணப்படத்தை 6 மாதங்கள் உழைத்துச் செதுக்கி இணையத்தின் வீடியோ லைப்ரரியான 'யூ டியூப்'பில் இணைத்துள்ளார் லெனின்.எழைகளின் சிரிப்பில் இறைவனைக் கண்டவர்..இப்போது இணையத்தில் நமக்காக சிரிக்கிறார்.

4.உங்கள் படத்தில் நல்ல அரசியல்வாதி ரோல் இருந்தால் நான் நடிக்கத் தயார் என ஷாருக்கானிடம் சான்ஸ் கேட்டிருக்கிறார் லாலு பிரசாத்.

5.உங்களுக்கு அறிவுத்தாகம் இருந்தால்..மறக்காமல் நாஞ்சில் நாடனின் தீதும் நன்றும் ஆனந்த விகடனில் படியுங்கள்..அருமையான விஷயங்கள்..அழகான நடை.. hats off naadan

6.தன்னுடைய கோட் பாக்கெட்டில் சின்ன அனுமன் படத்தை ஒபாமா வைத்திருப்பது தெரியும்.ஆனால் ஒபாமா தன் அலுவகத்தில் மகாத்மா காந்தியின்படத்தை மாட்டியிருக்கிறார்.

7.தன்மான உணர்ச்சியில் குழந்தைகளை யாரும் வெல்ல முடியாது.உலகமே தலை கீழாக ஆனாலும், குழந்தைகள் ஒருவருக்கும் பணிந்து போவதில்லை.-டாக்டர் மு.வ.

8.எம்.பி.பதவிக்கு போட்டியிட விரும்புவோருக்கு அப்ளிகேஷன் வழங்க ஆரம்பித்திருக்கிறது அ.தி.மு.க.,10000 ருபாயுடன் விண்ணப்பிக்க வேண்டும்.(!!!)(அடி என அழைக்க மனைவியே வராதபோது..குழந்தைக்கு ஆசைப்பட்டால் எப்படி)

2 comments:

மங்களூர் சிவா said...

அருமையான தகவல் தொகுப்பு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சிவா