Monday, November 10, 2008

மறக்க முடியாத சிறுகதைகள்...

முன்பெல்லாம்..தமிழ் பத்திரிகைகளில் ஆறு அல்லது ஏழு சிறுகதைகள் வரும்.இன்னும் அதிகம் போடலாமே..என வாசகர் கடிதங்கள் வரும்..

ஆனால்..இன்று..ஒன்று அல்லது இரண்டு சிறுகதைகள் வந்தாலே அதிகம்..பல பத்திரிகைகள் ஒரு பக்க கதைக்கு தாவி விட்டன.. சில பத்திரிகைகள்..அரை பக்கக்கதை,கால் பக்க கதை என்றெல்லாம் வெளியிட ஆரம்பித்து விட்டன..கேட்டால்..வாசகர்கள் இதையே விரும்புகிறார்கள் என பழியை வாசகர்கள் மீது போடுகின்றனர்.

பல சிறுகதைகள்..நம்மால் மறக்க முடிவதில்லை..

ஜெயகாந்தன் சிறுகதைகள் பல இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கிறது..

ஒரு தொடர்கதையில் இருந்து..பல சிறுகதைகளுக்கான கரு கிடைப்பதுண்டு..ஆனால்..ஒரு சிறுகதையிலிருந்து..பல தொடர்கதைகள் பிறந்திருக்கின்றன..என்றால்..அதை நம்புவது சற்று கஷ்டம்.உண்மையில் ஜெயகாந்தன் சிறுகதை ஒன்றிற்கு ..அப்பெருமை உண்டு.அது...

அக்கினிப்பிரவேசம்..

ஆனந்த விகடனில் வந்த சிறுகதை இது...முத்திரைக்கதை..இந்த கதையை யாரும் மறந்திருக்க முடியாது..இந்த சிறுகதையில் இருந்து பிறந்தவை...

சில நேரங்களில் சில மனிதர்கள்
கோகிலா என்ன செய்கிறாள் ஆகிய தொடர்கள்..

அடுத்ததாக நான் சொல்ல விரும்புவது..பிலஹரியின் ..அரிசி..என்ற கதை..நம்மில் பலருக்கு இக்கதை ஞாபகமிருக்காது..இதுவும் ஆ.வி.யில் வந்த முத்திரைக்கதை..

இக்கதை அம்மாவின் பாசம் பற்றியது..கல்யாணம் ஆனதும் அம்மாவிடம் வெறுப்பு வளர்கிறது அவனுக்கு..ஆனால் அம்மாவின் பாசம்..அதற்கு ஈடு உண்டோ?கதையின் கடைசி வரிகள்..இன்னமும் மறக்காமல் என் ஞாபகத்தில் உள்ளது..

அகோரபசி உள்ள ஒருவன்..முன்னால்..பல இனிப்புகள்..உணவுபண்டங்கள்..ஆனால்..எதைத் தின்றாலும் ஒரு கவளம் சாதத்திற்கு இணை உண்டோ?அந்த அரிசி சாதம் தான்..அம்மா அன்பு..என்பார்.

தமிழ் பத்திரிகைகள்..குறிப்பாக..விகன்..மீண்டும் தரமுள்ள கதைகளுக்கு முத்திரை அளீத்து...முத்திரை கதைகளை வெளியிடலாமே?

பதிவர்கள்..இதை ஒரு தொடர் பதிவாய் எண்ணி...தங்களுக்கு மறக்க முடியா கதைகளை சொல்லலாமே...

3 comments:

பரணி said...

//"மறக்க முடியாதசிறுகதைகள்..."//

பொதுவாக நாவல்கள் அளவுக்கு சிறுகதைகள் ஈர்ப்பது இல்லை ,ஆனாலும் சில சிறுகதைகள் என்றென்றும் நினைவை விட்டு மறைவதும் இல்லை ,கந்தர்வனின் சிறுகதைகள் ,பொன்னீலனின் சிறுகதைகள் ,கி.ரா வின் சிறுகதைகள் இப்படிப் பல இருந்தும் என் மனதில் நீங்க இடம் பெற்றவை நெடுநாட்களின் பின்னும் இன்றளவும் ஞாபகப்பரனில் பத்திரமாய் இருப்பவை
பாஸ்கர் சக்தியின் "அறை நண்பர்"
தோப்பில் முகம்மது மீரானின் "தங்க வயல்" இரண்டும் தான் ,ஏனோ எத்தனை நாட்கள் ஆனாலும் இவை மறக்கவில்லை .

நசரேயன் said...

கல்கி யோட பொன்னியின் செல்வன்,சிவகாமியின் சபதம் இதெல்லாம் பெருங்கதை, இதுதான் எனக்கு ஞாபகம் இருக்கு

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஞாபகப் பரண் என்பதை ரசித்தேன் பரணி...
ஆமாம் ..அந்த கதைகளைப் பற்றி சுருக்கமாக..ஒரு பதிவு போடுங்களேன்..
வருகைக்கு நன்றி