Sunday, October 19, 2008

ஐ.டி.துறையின் இன்றைய நிலை..

தங்க சுரங்கம்..தகர சுரங்கமாகிறது என்று பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரையை நான் எடுத்துப்போட http://sowmyatheatres.blogspot.com/2008/10/blog-post_10.html
..தமிழ்நெஞ்சம்..இது பற்றி உங்களது எண்ணம் என்ன..எனக்கேட்டிருந்தார்.அதற்கான பதிவே இது.

ஒரு மாணவன் 9ம் வகுப்பு தேறி 10ம் வகுப்பு போகிறான்..அவனுக்கான பள்ளிச்செலவுகள் போக..மாதம் ஆயிரம் ரூபாய்க்கு செலவு செய்து..கணக்கு..மற்றும் சயின்ஸ் பாடங்களுக்கு டியூஷன் வைக்கப்படுகிறது.அவன் நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என குடும்பத்தினர் சில தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கிறது.புத்திசாலி பையனாய் இருப்பவன் 90 மதிப்பெண்கள் சராசரியாகப் பெற்று தேறுகிறான். அவன் வாங்காமல் போன மதிப்பெண் எங்கே? என்று தேடப்படுகிறது.
+2 சேருகிறான்..சயின்ஸ் குரூப்..மொத்தமாக பள்ளிச்செலவுகள்..வருஷம் முழுதும் என மொத்தமாக டியுஷன் ஃபீஸ்..கணக்கு..பிசிக்ஃஸ்,கெமிஸ்ட்ரி,கம்.சயின்ஸ் என.,இரண்டு வருடங்கள் பெற்றோர் வயிற்றில் நெருப்பு.பையன் நல்ல மதிப்பெண் பெற்று தேறினால்..கவுன்சிலிங்கில் நல்ல காலேஜ் கிடைக்கிறது.சற்று குறைவான(95%!!!)மதிப்பெண் ஆனால் சுயநிதி கல்லூரியில்..வாங்குவதில்லை என்று சொல்லியபடியே வாங்கும் கேபிடேஷன் ஃபீஸ்(லட்சங்கள்)செலுத்தி...ஃபீஸ் 4 வருஷங்களும் கட்டி படிப்பை முடிக்கிறான்.
10ம் மதிப்பெண்,+2 மதிப்பெண்,இஞ்சினீரிங்க் மதிப்பெண்(இது 75%குறையாமை இருந்தால்தான் கேம்பஸ் தேர்வில் நல்ல கம்பெனி ) பார்த்து வேலை கிடைக்கிறது.
இது எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்..இவ்வளவு கஷ்டங்கள்..தியாகங்கள் செய்தால் தான் வேலை.அதுவும் உடனே லட்சக்கணக்கில் இல்லை,..ப்ராஜெக்ட்..டீம் லீடர்..
இப்படியெல்லாம் மாதம் 25000க்குள்தான் சம்பளம்.காலநேரம் பார்க்காமல் ..ஆண்..பெண் என சலுகைகள் இல்லாமல்..உடலை வறுத்தி உழைக்க வேண்டும்.வாழ்வில் பல சௌகரியங்கள்..சின்னச்சின்ன சந்தோஷங்கள் எல்லாம் அவனுக்கு கிடையாது.

சரி இனி தலைப்பு...
இந்திய ஐ.டி.கம்பெனிகள் அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து அவுட் சோர்ஸிங் முறையில் வேலையைப் பெறுகின்றன.ஒரு மணி நேரத்திற்கு 15..20..யு.எஸ்.டாலர் என்ற முறையில் வாங்கிக்கொள்கின்றனர்..ஆனால் வேலையில் இருப்போருக்கு 2 அல்லது 3 டாலர் ஒரு மணி நேரத்துக்கு கொடுக்கப்படுகிறது.இரவு நேர வேலை. ஓரளவு நல்ல சம்பளம்..அதற்கு ஊழியர்கள் கொடுக்கும் விலை..நிம்மதியில்லா வாழ்க்கை,சிறு வயதிலேயே இரத்த அழுத்தம்,சர்க்கரை வியாதி போன்ற வியாதிகள்.

இப்படி தேவையில்லா வாழ்வானாலும்..பொன் முட்டையிடும் வாத்தே ஐ.டி.துறை.இப்போது..அகில உலகிலேயே பொருளாதார சிக்கல் உள்ளது.ஏர்வேஸ் ஆட் குறைப்பு பற்றி பேசாத நாம்..இத் துறை பற்றி மட்டும் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்.
நம் புத்திசாலி ஊழியர்களும்..தேர்ந்த ஆங்கிலமும் இருக்கும் வரை நமக்கு கவலை இல்லை..
இடையே இப்பொழுது இருப்பதெல்லாம் just passing clouds .

யாரும் மனம் தளர வேண்டாம்.

9 comments:

நசரேயன் said...

கணனி துறைக்கு வாஸ்து சரி இல்லங்கோ, அதனாலே சனி பிடிச்சு ஆட்டுது

மங்களூர் சிவா said...

நல்ல பதிவு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

// நசரேயன் said...
கணனி துறைக்கு வாஸ்து சரி இல்லங்கோ, அதனாலே சனி பிடிச்சு ஆட்டுது//

வருகைக்கு நன்றி நசரேயன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// மங்களூர் சிவா said...
நல்ல பதிவு.//

நன்றி சிவா..அடிக்கடி வாங்க

குப்பன்.யாஹூ said...

பதிவிற்கு நன்றி. ஆனால் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. மென்பொருள் , அவுட்சோர்சிங் துறைகள் மந்தம் அடைதல் பற்றி பேச வேண்டுமா அல்லது பேச கூடாதா

நான் பேச விரும்புகிறேன் (கவலை கொள்ள விரும்புகிறேன்) ஏனென்றால் அது என்னை பாதிக்கிறது.

1. நானும் வேலை பார்க்க ஆரம்பித்து 12 வருடங்கள் ஆகின்றது. 10 வருடங்களுக்கு முன்னால் உற்பத்தி தொழிற்சாலையில் வேலை பார்க்கும் பொது 10 மணி நேரம் உழைத்து 5500 சம்பளம் வாங்குவேன் . நிறுவனம் எனக்கு போக்குவரதுய் வசதிகள் செய்து தராது.

ஆனால் இன்று அவுட்சோர்சிங் நிறுவனம் எனக்கு வீடு வரை குளிரூட்டப்பட்ட வாகனம் அளிக்கிறது (A/C VAN PICKUP AND DROP). என்னை என் உயர் அலுவலரை சாரி என்று சொல்ல வேண்டாம் என்கிறது.
இவை தவிர மாதம் 6இலக்க சம்பளம் தருகிறது.

2 மென்பொருள் பணியாளர்கள் என் வீட்டு மாடி பகுதிக்கு மாத வாடகை 6000 எந்த கேள்விஉம் கேட்காமல் தந்தார்கள். இப்போது அவர்களை மாற்றி நான் வாகன உற்பத்தி, உர உற்பத்தி நிறுவன ஊழியர்களை வாடகைக்கு அமர்த்தினால் அவர்கள் 3000 மேல் வாடகை தர மறுக்கிறார்கள்.

3. மென்பொருள், அவுட்சோர்சிங் பணியாளர்களை நம்பி சென்னை போன்ற நகரத்தை கூட சப்வே , புமா, மேக்டோனாட்ஸ், சிக்கன் டிக்கா, பர்கர் கிங் போன்ற நிறுவனகள் தேடி வந்தது. திரும்பவும் சண்முக பவன் பொங்கல், இட்லி, வடையை சாப்பிட என் மனம், வயிறு ௧00 முறை யோசிக்கிறது.



சென்னையின் பணப்புழஅக்கம் குறைந்து விடுமோ என்ற கவலையுடன்
குப்பன்_யாஹூ

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாருங்க குப்பன்
உங்களுக்கு ஒரே நாளில் கிடைத்த வெற்றியில்லை இது.
மேலும் அவுட்சோர்சிங் கொடுக்கும் நிறுவனங்களுக்கு இந்தியாபோல் சீப்லேபர் கிடைக்காது.
இப்போது மந்தமாய் தெரிந்தாலும்..பயப்படத்தேவையில்லை என்றே தோன்றுகிறது.
அதனால்தான் இவை நகர்ந்து செல்லும் மேகங்கள் போல நிரந்தர தேக்கம் இல்லை என பதிவில் சொல்லியுள்ளேன்.
எனது வருத்தம்..உங்கள் உடல்னிலை பாதிப்பது பற்றித்தான்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சென்னையின் பணப்புழஅக்கம் குறைந்து விடுமோ என்ற கவலையுடன்
குப்பன்_யாஹூ//

பணப்புழக்கம் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை

harijana said...

I.T. Thuraiyin unmayana uzhiyarhalin vantha, patta kazhtangalai pahirthu kondamaikku nandri.

C.A., Layer, Dr., ivarhalai pol I.T.engineerkalum oru Govravathotram udayavarhal mattum alla ivarhalinala num nattukku ivvalavu anniya naduhalin muthalidu / Panam varukirathu enpathai kathukuttihal ariyamattarhal.

Ivarhalin vayatherichalal I.T. ondrum Sarinthu vidathu.

Please go ahead!!!!!!!!!!!!!1

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி harijana